பெண்கள் ஜீன்ஸ் மற்றும் லெக்கிங்ஸ் அணியத் தடையிட்ட 6 இடங்கள்

4:18 pm 13 Nov, 2016

கடந்த வருடம், சென்னை உயர் நீதி மன்றம் , தமிழ்நாட்டில் , கோவில்களுக்கு மேற்கத்திய ஆடைகளில் வரும் பக்தர்களுக்கு உள்ளே அனுமதி அளிக்கப்பட மாட்டாது என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், பெண்கள் ஜீன்ஸ், பாவாடை போன்ற ஆடைகளை அணியக் கூடாதென்றும் அவர்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் முதலியவற்றைத் தான் அணிய வேண்டும் என விரிவாகக் கூறியிருந்தது; ஆண்களும் வேட்டி சட்டையோடு அல்லது மேலாடையுடன் கூடிய பைஜாமாக்களைத் தான் அணிய வேண்டும் என்று அந்த உத்தரவில் விளக்கியிருந்தது.

கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற கட்டுப்பாடு விதிப்பதில் அர்த்தம் இருப்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால், கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் இடங்களில் , ஆடைகளுக்குக் கட்டுப்பாடு  விதிப்பதில் என்ன நோக்கம் இருக்க முடியும் என நீங்களே கூறுங்கள் :

1) ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி, ஹரியானா :

சமீபத்தில் இந்தக் கல்லூரியில் , வகுப்புகளுக்கு ஜீன்ஸ் அணிந்து கொண்டு வந்த நான்கு பெண்களுக்கு 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இதே போல் ஒரு சம்பவம் இங்கு 2012 ஆம் ஆண்டிலும்  நடந்தது. இதைப் பற்றி இக்கல்லூரியின் முதல்வர் , திரு. அலகா ஷர்மா கூறுகையில், “ அவர்கள் விதிகளை மீறியதால் தான் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, “ என்றார்.

இங்கு அமலிலிருக்கும் டிரெஸ் கோட் விசித்திரமாக உள்ளது; குர்தாவுடன் ஜீன்ஸ் அணிந்தால் அனுமதிப்பார்களாம் ; ஆனால்  மேல் சொன்ன பெண்களைப் போல் டீ- ஷர்ட்டுடன் ஜீன்ஸ் அணிந்தால் அனுமதிக்க மாட்டார்களாம். மேலும், வாரத்தில் திங்கட்கிழமையில் மட்டும் தான் வெள்ளை நிற சுடிதார்கள் அணியலாமாம்; மற்ற நாட்களில் தமக்கு விருப்பமான வண்ணங்களில் சுடிதார் அணிந்து கொள்ளலாமா!

அநேகமாக, இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 1970 களில் தான், இக்கல்லூரியை நடத்துவோர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போலும் !

2) ஆர் எம் டி பொறியியல் கல்லூரி :

இந்தக் கல்லூரியில் மாணவர்களின்  பெற்றோர்கள் உட்பட, எவருமே ஜீன்ஸ்  அணியக்கூடாதாம். ஒரு முறை, தொழில் முனைவது குறித்துப் பிரபல பிளாகர் கிருபா சங்கர் பேச வந்த போது, ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவருக்கு நிர்வாகம் வந்த சில நிமிடங்களிலேயே முறையான ஆடைகளைக் கொடுத்து மாற்றச் சொன்னார்களாம்.

3) பார்மர் , ராஜஸ்தான் :
இங்குள்ள பஞ்சாயத்தில் , உள்ளூர் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது, கைப்பேசி வைத்திருக்கக்கூடாது என உத்தரவு இட்டனர். அதோடு நில்லாமல், ஆண்கள் தங்களின் திருமண நாட்களில் வேட்டிகள் அணியக் கூடாதென்றும்   அறிவுறுத்தியுள்ளனர்;  டீஜேக்கள் இசைக்கவும் இங்கு தடை.

உலகளவில் நாடுகளுக்கிடையே எல்லைகள் சுருங்கி , மக்கள் வேறுபட்ட கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு வரும் இந்நேரத்தில் பார்மர்  போல பின்தங்கியிருக்கும் கிராமங்களைப் பற்றி எண்ணினால் வருத்தம் அளிக்கிறது.

4) இஸ்லாமிய கல்விச் சமூகம் , கொழிக்கோடு :

இந்த அமைப்பில் விதிக்கப்பட்டிருக்கும் விதிகளின் படி, பெண்கள் வெறும் சுடிதார் அல்லது     குர்தாவுடன் கூடிய சுடிதாரை மட்டுமே அணியலாம். மேலும், எப்போதும் முகத்தை துப்பட்டாவாலோ வேறு எதாவது துணியாலோ மூடிய படி இருக்க வேண்டும் .

5) ஶ்ரீராம் பொறியில் கல்லூரி, சென்னை :

அண்மை காலத்தில் சமூக வளைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டவற்றில் இந்தக் கல்லூரியின் டிரெஸ் கோடும் ஒன்று. அதுவும் காரணமில்லாமல் இல்லை; இங்கு மாணவிகள் ஜீன்ஸ் , லெக்கிங்ஸ் அணியக்கூடாது; இருக்கமாக எந்த ஆடையும் அணியக்கூடாது; தலைமுடி எப்பொழுதும் பிண்ணியபடித் தான் இருக்க வேண்டும் ; பெரிய கைக் கடிகாரங்களை அணியக் கூடாது.

இப்படியெல்லாம் தடைகளிடுவதால் பயனில்லை என ஏன் தான் அவர்களுக்குப் புரியாமல் இருக்கிறதோ தெரியவில்லை!

sairam college

 

6) ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, கொல்கத்தா :

சரியான சூழலை உருவாக்குகிறோம் என்ற பெயரில் இந்தக் கல்லூரி அர்த்தமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது; இங்கு முட்டுக்கு மேல் இருக்கும் பாவாடைகளை அணியக்கூடாதாம்; ஆண்கள் எந்த விதமான நகைகளையும் அணியத் தடையாம்; இந்த நவீன யுகத்தில் பின்நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் .

SOURCE: India timesDiscussionsTY News