உங்களின் நண்பர்களை அசத்த, தர்பூசணியை வைத்து ஒரு வித்தை 

2:50 pm 13 Jul, 2016

கோடையின் பரிசு என தர்பூசணியைக் கூறலாம். நீர் சத்தும் விட்டமின் ‘பீ’யும் நிறைந்த தர்பூசணி, நாள் முழுவதும் ஒருவரைச் சுறுசுறுப்பாக வைப்பதோடு எதிர்ப்புச் சக்தியையும் கூட்டும்.

கோடையில் நடக்கும் கொண்டாட்டங்களின் போது, உங்கள் நண்பர்களை வியப்பூட்ட ஒரு தர்பூசணி வித்தையைப் பற்றிப் பார்ப்போம்.
'நாஸா'வைச் சேர்ந்த மார்க் ராபர், தர்பூசணியின் தோலை உரிக்க ஒரு வித்தியாசமான வழியை 'யூ டியூப்' இல் பகிர்ந்துள்ளார்.

அவர், ஒரே அளவிலும், வடிவத்திலுமான  இரு தர்பூசணிகளை எடுத்துக் கொண்டார்

water melons

 

முதலில், கூர்மையான ஒரு கத்தியை வைத்து ஒரு தர்பூசணியின் தோலை உரிக்கிறார்

water melon slicing

பின் வெளியிலுள்ள வெள்ளையான பகுதிகளைச் சீவி, அதன் மேற்பரப்பைச் சமன் செய்கிறார்.

 

அது ‘ பலூன்’ வடிவத்தை அடையும் வரைச் சீவுகிறார்

giphy-3-
 

பிறகு, இரண்டாவது தர்பூசணியை வெட்டி, ஒரு பொய்யான மேற்பரப்பை உருவாக்குகிறார்

giphy-4-

giphy-5-

அவ்வளவு தான். உங்கள் சகாக்களை வியப்பிலாழ்த்த நீங்கள் தயார்.

 

‘யூ டியூப்’-ல் இதைப் பார்த்து மகிழுங்கள் !

 

 DiscussionsTY News