சுப்பிரமணிய சுவாமி –   அசைக்க முடியாத  இந்த மனிதரைப் பற்றி நீங்கள் அறியாத 21 விஷயங்கள்

Updated on 19 Jan, 2018 at 2:19 pm

Advertisement

இவர் சகாப்தம் முடிந்தது என்று நினைக்கும் வேளையில், கிரேக்க நாட்டுக் கதைகளில் வரும் ‘பீனிக்ஸ்’ பறவையைப் போல, அவரை எரித்து விட்டதாக பிறர் நினைக்கும் நெருப்பின் சாம்பலில் இருந்து தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டு, திரும்பி எழுந்து நிற்பவர் சுப்பிரமணிய சுவாமி.

சுப்ரமணிய சுவாமி அறையில் தம் புத்தகங்களுடன்

சுப்ரமணிய சுவாமி தம் புத்தகங்களுடன்

ஆசிரியர், பொருளாதாரம் மற்றும் கணித வல்லுநர், அரசியல்வாதி, கிளர்ச்சியாளர் , நாய் வளர்ப்புப் பிரியர், என்று இவரைப் பற்றி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். அறிவுசார்வாளர்களின் (intellectuals) குடும்பத்தில் பிறந்த இந்த தமிழ் பிராமணர், தன் குடும்பத்தைப் பற்றிக்  குறிப்பிடுகையில் ‘பிராமணப் போராளிகளின் நீண்ட வரிசை’ என்கிறார்.

விடாக்கொண்டன்  போன்ற வைராக்கியத்துடன் போராடும் இவர் அகராதியில் “மறப்போம், மன்னிப்போம்” என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை.  தனிமை விரும்பியும் போராளியுமான இவரைப் போல், தற்கால வரலாற்றில் முத்திரையை பதித்த இந்தியர்கள் வெகு சிலரே எனலாம்.


Advertisement

இந்த இரும்பு மனிதரை பற்றிய பெரும்பாலான இந்தியர்கள் அறியாத சில உண்மைகளின் தொகுப்பு இதோ.

1. இவர் தந்தை ஒரு பெயர் பெற்ற கணித வல்லுநர்.

செப்டம்பர் 5 ,1939ல் சுவாமி சென்னையிலுள்ள மைலாப்பூரில் பிறந்தார். அவர் தந்தை சீதாராம் சுப்ரமணியன், மத்திய புள்ளியல் நிறுவனத்தில் இயக்குனராக (One Time Director) பணி புரிந்தவர்.

2. சுவாமி ஹிந்து காலேஜில் கணித பட்டம் பெற்றவர்.

இவர் பிறந்த நட்சத்திர ராசி போலும்! பிறந்து 6 மாதங்கள் நிறையுமுன்னர், 1940ல் இவர் தந்தைக்கு  தில்லியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மெட்ராஸ் எனப்பட்ட சென்னையில் இருந்து அதிகாரத்தின் இருப்பிடமான டெல்லிக்கு குடி பெயர்ந்தனர் சுவாமி குடும்பத்தினர்.

ஹிந்து காலேஜ், தில்லி

தில்லியிலுள்ள ஹிந்து காலேஜ்

தில்லியில், புகழ்  பெற்ற ஹிந்து காலேஜிலிருந்து பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற சுவாமி பல்கலைக்கழகத்தில் மூன்றாவது ரேங்க் பெற்றார்.

3. மேற்படிப்புக்காக கல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியல் கல்லூரியில் (ISI) சேர்ந்தார்

முதுகலைப் பட்டப் படிப்பிற்காக டில்லியிலிருந்து கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார் சுவாமி. அது அவருடைய முதல் போர்க்களமாக விளங்கவிருந்தது.

 சுப்பிரமணிய சுவாமி முதுகலை பட்டப் படிப்புக்கு சென்ற ISI கல்லூரி

கல்கத்தாவிலுள்ள ISI

4. நிறுவனத்தின் இயக்குனர் சுவாமியின் தந்தையுடைய தொழில்முறை எதிராளி

நேருவுடன் மஹாலநோபிஸ்

நேருவுடன் மஹாலநோபிஸ்

அப்பொழுது அந்நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய PC மஹாலநோபிஸ், சுவாமியின் தந்தையுடைய தொழில்முறை போட்டியாளர்.  சுப்ரமணிய சுவாமி  யாரென்று மஹாலநோபிசுக்கு தெரிந்தவுடன், சுவாமிக்கு மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தன. மஹாலநோபிசுக்கு, தான் வம்பை விலை கொடுத்து வாங்குவது புரியவில்லை!   அன்றைய காலகட்டத்தில்,மகாலநோபிசின் வெறுப்புக்கு ஆளாக எவரும், குறிப்பாக கல்லூரியில் உள்ளவர்கள், விரும்பமட்டார்கள்; அவர் அப்படிப்பட்டவர். (அன்று மஹாலநோபிஸ் உருவாக்கிய திட்டகமிஷனை

இன்று நரேந்திர மோடி விரைவில் அகற்றவிருக்கிறார் !)

5. பெரிய மனிதருக்கு ஒரு பாடத்தை கற்பித்தார் சுவாமி

புள்ளியியலில் அவருக்கிருந்த நிபுணத்துவம் சுவாமியை மஹாலநோபிஸ் எதிராக போட்டியிட ஏதுவாக இருந்தது.

மஹாலநோபிசுக்கு பாரிஸ் மேயர் விருது அளிக்கப்பட்டது

புள்ளியியல் துறையில் சாதனைக்காக மஹாலநோபிசுக்கு பாரிஸ் மேயர் விருது அளிக்கப்பட்டது

1963-ல் எகோநோமெட்ரிகா (Econometrica) இதழில் வெளியான சுவாமியின் “பின்ன வரைகலை பகுப்பாய்வு பற்றிய குறிப்புகள்” (Notes on Fractile Graphical Analysis) என்ற ஆய்வுக் கட்டுரை, மஹாலநோபிஸ் அறிமுகப்படுத்திய புள்ளியல் பகுப்பாய்வு முறை உண்மைலேயே புதியதா என்ற கேள்வியை எழுப்பி, அது பழைய சமன்பாடுகளின் ஒரு மாறுபட்ட வடிவமே என்று சுட்டிக் காட்டும் விதமாக அமைந்தது.  இது, சுவாமிக்கிருந்த அதிகார எதிர்ப்பு குணத்தின் இளமைக்கால வெளிப்பாடு. பிற்காலத்தில், அவர் ஒரு அறிவுசார்வாளராகவும்,  அரசியல்வாதியாகவும் உருவெடுத்த போது, இதே குணம் வெளிப்பட்டது.

 

6. ஹார்வார்ட் (Harvard) பல்கலைக்கழக நுழைவுக்கு பரிந்துரை கிடைத்தது

 

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

ஆய்வுத் திறமையை நிரூபித்ததற்கு பரிசாக, எகோநோமெட்ரிகா இதழில் சுவாமி தன் ஆய்வுக் காகிதம் சமர்ப்பித்த போது நடுவராக இருந்த ஹெந்ரிக் ஹௌதேக்கர் (Henrik S Houthakker), ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு இடம் அளிக்குமாறு பரிந்துரைத்தார்.

7. 24 வயதில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் PhD (டாக்டர்) பட்டம்!

மொத்த செலவுக்கும் வழி வகுத்த ராக்பெல்லர் உதவித்தொகையைப் பெற்று, இரண்டரை ஆண்டுகளில் 24 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சுவாமி, 27 வயதில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலேயே  ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார்

அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

ஹார்வார்ட்டில் பட்டமளிப்பு விழா

 

8. பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு வென்ற முதல் அமெரிக்கருடன் இணை ஆசிரியராக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்

சுவாமி, பால் சாமுவேல்சனுடன் (Paul Samuelson) இணை ஆசிரியராக இருந்து,  ‘குறியீட்டு எண்களின் கோட்பாடுகள்’ (Index Numbers Theories) என்ற ஆய்வு கட்டுரையை 1974ல் வெளியிட்டார்..

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசினைப் பெற்ற பால் சாமுவேல்சன்

பால் சாமுவேல்சன்

9. சீனப் பொருளாதாரதில் நிபுணரானார்

‘எகோனோமிக் குரோத் இன் சைனா அண்ட் இந்தியா, 1952-70: எ கம்பரிடிவ்`அப்ரைசல்’ (சீனா மற்றும் இந்தியாவில் பொருளாதார  வளர்ச்சியின் ஒப்பீட்டு ஆய்வு)  என்று தலைப்பிட்ட புத்தக்கத்தை 1975ல் சுவாமி எழுதினார்.

கடினமான சீன மொழியான மாண்டரின்  மொழியை ஓராண்டுக்குள் கற்க முடியுமா என்று ஒருவர் சவால் விட்ட பொழுது அதனை,  மூன்றே மாதங்களில் கற்றார்.

 

சீன இந்திய பொருளாதார வளர்ச்சி ஒப்பீடு

இன்றுவரை, சுவாமி, சீனப்பொருளாதாரத்தில், குறிப்பாக, சீன-இந்திய ஒப்பீட்டு ஆய்வில், நிபுணராகக் கருதப்படுகிறார்.

 

10. அமர்த்தியா சென்னிடமிருந்து டி.எஸ். இ.-ல் (DSE- Delhi School of Economics) சேர அழைப்பு

மன்மோகன் சிங்கின் 1991 பட்ஜெட் மூலமாக பிரபலமாவதற்கு முன்பே, 1968ல் சுவாமியின் தடையற்ற சந்தைக்காக (Free Market) வாதாடியிருந்தார். இவரது சந்தை சார்ந்த கருத்துக்கள், டி.எஸ்.இ.-க்கு அதிரடி கருத்துக்களாக பட்டது. ஹார்வார்ட்லிருந்து வந்த ஸ்வாமின் இக்கருத்துக்கள், இந்திரா காந்தியின் ‘கரிபி ஹட்டாவோ’ (ஏழ்மையை விரட்டுங்கள்) கருத்துகளுடனும் ஒப்பவில்லை. இருந்தும், அமர்த்தியா சென்னின் அழைப்பை ஏற்றார் சுவாமி.

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்யா சென்

அமர்த்யா சென்

சந்தை சார்ந்த கருத்துடைய  இளவயது கல்வியாளருக்கு, சீனப் படிப்புகளுக்கான பேராசிரியர் பதவி தயாராகி காத்திருந்தது. அனால், ஹார்வார்ட்லிருந்து டி.எஸ்.இ-க்கு வருவதற்குள் அந்த கல்வி நிறுவனத்தின் மற்ற பேராசிரியர்கள் பல்டி அடித்து, அவர் மீதிருந்த தங்கள்  கருத்தை மாற்றி கொண்டார்கள். சுவாமிக்கு  பேராசிரியர் பதவிக்கு  பதிலாக  ரீடர் (Reader) பதவிதான் கொடுக்கப்பட்டது. அனாலும், மாணவர்கள் சுவாமியை ஆதரித்தார்கள்.

11. 1969ல் IITக்கு மாறினார் சுவாமி

இதற்குள் நற்பெயர் சம்பாதித்திருந்த சுவாமி, IIT மாணவர்களுக்கு பொருளாதாரத்தை கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

தில்லி IIT

தில்லி IIT

 

இந்திய ஐந்தாண்டு திட்டங்களை விட்டு விடவும், அயல் நாட்டு உதவியை நாடாமலிருக்கவும்  சுவாமி பரிந்துரைத்தார். பொருளாதாரத்தில்இந்தியா 10 சகவீதம் வளர்ச்சி அடைய முடியும் என்று கருதினார்.

12. 1970ல் இந்திராவின் பார்வை சுவாமியின் மேல்

1970 பட்ஜெட் விவாதத்தில் காந்தி அம்மையார் ‘சாத்தியமற்ற கருத்துகளுடைய சாண்டா கிளாஸ் (Santa Claus; கோமாளி) என்று சுவாமியை நிராகித்தார். ஒரு தேசிய தலைவர், சுவாமியின் கருத்துக்களை நேர்முகமாக விமர்சனம் செய்தது இதுவே முதல் தடவையாகும். இருப்பினும், சுவாமி தன் வேலையைத் தொடர்ந்தார்.

பிரதமர் இந்திரா காந்தி

 

13. IIT நிர்வாகம் சுவாமிக்கு எதிராக செயல்பட்டது

அவர் சம்பாதித்த விரோதத்தின் விளைவு, IIT நிர்வாகம் டிசம்பர் 1972ல் அவரை பதவியிலிருந்து நீக்கியது.

சுப்பிரமணிய சுவாமி

1973ல் தவறான நீக்கத்திற்காக IIT மீது வழக்கு தொடுத்தார்.  1991ல் அவ்வழக்கை வென்று, தனக்குரிய பதவிதான் என்று நிலை நாட்ட, அங்கு வேலையில் சேர்ந்து, மறுநாள் ராஜினாமா செய்தார்.

14. 1974ல் அரசியல் பயணம் தொடக்கம்

இள வயது மனைவி; கைக்குழந்தை வேறு. வேலையும் இல்லை என்ற நிலையில் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல நினைத்த போது, விதி குறுக்கிட்டு அவரை அரசியலில் நுழைத்தது.

நானாஜி தேஷ்முக்

நானாஜி தேஷ்முக்

ஜன சங்கத்தின் மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக்கிடமிருந்து கட்சியில் சேர அழைப்பு வந்தது . 1974ல் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபாவிற்கு சுவாமி தேர்த்தேடுக்கப்பட்டார்.

 

15.  ‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்ட போது அரசாங்கத்தை எதிர்த்தார்

1975  முதல் 1977 வரை  பத்தொன்பது மாத காலம் அமலிலிருந்த ‘அவசர நிலை’ சட்ட திட்டங்களுக்கு உட்படாமல், சிறை செய்யும் முயற்சிகளை முறியடித்துத் தப்பினார்.

அவசர நிலையின் (1975 - 77) போது சீக்கியர் போல மாறுவேடம் தரித்த சுப்பிரமணிய சுவாமி, மற்றும் நரேந்திர மோடியின் அரிய புகைப்படம்

அவசர நிலையின் (1975 – 77) போது மாறுவேடத்தில் சுப்பிரமணிய சுவாமி, மற்றும் நரேந்திர மோடி

இவற்றில், துணிவின் சிகரமாகத் திகழ்ந்தது, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து, ஆகஸ்ட்10 அன்று, பாராளுமன்றத்தை சுற்றியிருந்த காவல் துறையினரிடம் சிக்காமல் பாராளுமன்றக் கூட்டத்தில்  கலந்து கொண்டு, மீண்டும்  அவர்களை ஏமாற்றி வெளியேறியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு தப்பியோடினார் !

 

16. சுவாமி, 1977ல் பாராளுமன்ற தேர்தலில் வென்ற ஜனதா கட்சியை நிறுவிய தொடக்க உறுப்பினர்களில் ஒருவர்

1977ல் இந்திரா காந்தியைத் தோற்கடித்த  ஜனதா கட்சியை நிறுவிய தொடக்க உறுப்பினர்களில் ஒருவர் சுப்ரமணிய சுவாமி.

 

1970-களில்அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் சுப்பிரமணிய சுவாமி

1970-களில்அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் சுப்பிரமணிய சுவாமி

ஜனதா கட்சி உடைந்த பின்னும் 1990 வரை தலைவராகத் தொடர்ந்து, பாஜகவுடன் ஐக்கியமாகும் வரை தலைவராக இருந்தார். “படை இல்லாத தளபதி” என்று இவர் நிலையை மற்ற கட்சியினர் விமர்சனம் செய்தனர். இவருக்கு தனித்துப் போராடுவது ஒன்றும் புதியதல்லவே !

 

17. சுப்ரமணிய சுவாமி, மன்மோகன் சிங்கக்கு முன்னோடி !

199091ல் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில், வணிக மற்றும் சட்டத் துறை அமைச்சராகப் பணியாற்றிய  சுப்ரமணிய சுவாமி,  பொருளாதார சீர்திருத்தக் கொள்கைக்கு வடிவமைத்துக் கொடுத்தார்.

1991-92க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மன்மோஹன் சிங்க்

1991-92க்கான இடைக்கால பட்ஜெட்டை, காங்கிரஸ் பிரதமரான பி.வி.நரசிம்ஹ ராவ் அமைச்சரவையில் இருந்த போது, தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மன்மோஹன் சிங்க்

இதைக் கொண்டுதான்,  சக (நிதித்துறை) அமைச்சரான மன்மோகன் சிங்க், இந்தியநாடு நேருவின் சோஷலிஸ கொள்கையிலிருந்து தப்ப வழி வகுத்தார்.

 

18. எதிர் கட்சியில் இருந்தாலும் சுவாமிக்கு காபினெட் ரேங்க் (Cabinet Rank) வழங்கப்பட்டது.

ஜனதா கட்சியின் தலைவரும், எதிர் கட்சியின் தலைவராக இருந்த போதும், ஆளும் கட்சியால் காபினெட் அந்தஸ்து (Cabinet rank) கொடுக்கப்பட்ட  பெருமையுடையவர் சுவாமி..

நரசிம்ஹ ராவுடன் தோளுக்கு தோளாய் நின்றார் சுவாமி என்று கூறப்பட்டது

எந்த இடரிலும் நரசிம்ஹ ராவுடன் தோளுக்கு தோளாய் நின்றார் சுவாமி என்று கூறப்பட்டது

பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் இவரை ‘தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சர்வதேச விற்பனை’ ஆகிய பொறுப்புக்களுக்கு தலைவராக காபினெட் ரேங்க்குடன் நியமித்தார்.

 

19. ஒரு கல்வியாளர் வழக்கறிஞர் ஆனார்

பொதுவாக வழக்கறிஞர், அரசியல்வாதி என்று கருதப்பட்டாலும், இது வரை நாம் பார்த்தது போல், இவர் படித்து என்னவோ கணிதம்தான்.  விதியின் குறுக்கீடு அவரை அரசியல் மற்றும் சட்டத்தின் பக்கம் திசை திருப்பியது.

சுப்ரமணிய சுவாமி

 

20. 2ஜி ஊழலை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு

புலி  பதுங்குவதற்கு பாய்வதற்கே என்பது போல நீண்ட அமைதி காத்த  பின், சட்டவிரோதமாக மொபைல் ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஒதுக்கீடு செய்ததாக அ.ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கோரி சுவாமி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். மிகப் பெரிய ஊழல் விவகாரம் வெளிவரக் காரணமானார்.

2 ஜி அலைகற்றை வரிசை ஊழலில் தொடர்பிருப்பதாக குற்றம் சாற்றப்பட்ட A ராஜா

 

21. கைலாஷ் மானசரோவரை இந்தியர்கள் அணுக வழி செய்தார்


Advertisement

1981-ல் சீனத்தலைவர் டெங் ஜியோபிங்கை சந்தித்துப் பேசி, இந்துக்கள்,   புனிதத்தலமான கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்ல வழி வகுத்தார் சுவாமி.


  • Advertisement