இந்திய இரயில்வே துறையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்காத 23 செய்திகள்

8:49 pm 12 Nov, 2016

‘சிக்கு புக்கு’ சிக்கு புக்கு ‘   என்ற தாலாட்டைக் கேட்டுப் பல்லாயிரக் கணக்கானோர் உறங்கியுள்ளனர். இந்தியர்கள் எல்லாரும் வாழ்வில் ஒருமுறையாவது இந்த அற்புதத்தை அனுபவத்திருப்பர். ஒவ்வொரு முறை, நாம் இரயிலில் பயணிக்கும் போதும் ஒரு புது உலகை நம்மால் காண முடியும்,

ஆனால் , பூமியில் மூன்றாவது மிகப் பெரிய இரயில் பிணையமான நம் இந்தியன் இரயில்வே பிணையத்தைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைத் தற்போது காணலாம் :

1) ஜம்மு காஷ்மீரின் செநாப்பில் உலகின் மிக உயரிய இரயில் பாலத்தை இந்திய இரயில்வே கட்டிக் கொண்டிருக்கிறது .

குதுப் மினாரைப் போல் ஐந்து மடங்கு உயர்வாக இருக்கும் இப்பாலம், ஈபில் கோபுரத்தை விட உயர்வில் ஓங்கியிருக்கும் .

Indian Railway Bridge, Chenab, in J&K

highestbridges

2) ஒரு சராசரியான மென்பொருள் பொறியாளரை விட இரயில் ஓட்டுனர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர்.

பொதுவாக, சம்பளங்கள் 1 இலட்சம் அல்லது அதற்கும் மேலாகத் தான் இருக்கும் .

Indian Railway Locomotive Pilot

The Hindu

3) இறப்பின் தருவாயில் கூட, இதுவரை, எந்த இரயில் ஓட்டுனரும் இரயிலை விட்டுச் சென்றதில்லை.

Accident of Indian Train

AP

4) ஒவ்வொரு நிமிடமும் இந்தியன் இரயில்வேயின் இணையதளத்திற்கு 12 இலட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்தத் தளம் ஒரு நேரத்தில் 50 இலட்சம் பேரைச் சமாளிக்கும் படி வடிவமைக்கப்பட்டது; ஆனால் சில சமயங்களில் அதை விட அதிகமாகனோர் வந்தால் இத்தளம் நின்றுவிடும்.

இதனால் தான் பல முறை இத்தளம் கேளிக்கைக்கு உள்ளாகியுள்ளது.

Indian Railway Website IRCTC

nextbigwhat

5) இந்திய இரயில்களில் மிகவும் குறைவான வேகத்தில் “ மேட்டுப்பாளையம் – ஊட்டி – நீலகிரி “ இரயில் ( 10 கிலோமீட்டர் வேகத்தில் )  ஏறுமுகத்தின் போது செல்லும் .

இந்த வேகத்தில் இரயில் செல்லுகையில் , நீங்கள் இரயிலிலிருந்து இறங்கி , அருகில் இருக்கும் தேநீர் விடுதியில் தேநீர் பருகிவிட்டு வந்து கூட இரயிலைப் பிடித்திடலாம்.

Indian Trains on Hill Station

mysticindia.co.uk

6) இந்தியன் இரயில்வேயின் தண்டவாளங்களை பூமியில் நேராக இட்டால் , அவை இவ்வுலகை 1.5 மடங்கு சுற்றி வரும் அளவிற்கு நீளமாக இருக்கும்.

Indian Railway Track

farm9.staticflickr.com

7) இந்தியன் இரயில்வே தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், இரயில்களில் கழிவறைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டன.

அதற்கு முன்பெல்லாம் பயணிகள் , காலைக் கடன் கழிக்க அடுத்த இரயில் நிலையம் வரும் வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நிலைமை மாறியதற்கு, நீங்கள் ஒக்கில் சந்திராவுக்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்; 1909 ஆம் ஆண்டு அவர் இந்திய இரயில்வே துறைக்கு எழுதிய இந்தக் கடிதம் தான் மொத்த நிலையையும் மாற்றியது.

A letter to Indian Railway Authority

alphaideas.in

8) இந்திய இரயில்வேயின் முதல் சில வருடங்களில் யானைகள் தான் பெட்டிகளைத் தண்டவாளங்களில் ஏற்றின.

Indian Railways Old Pic

9) இந்திய இரயில்வே துறை 16 ஏப்ரல், 1853 ஆம் நாள் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட 161 வருடங்கள் பழமையைப் பெற்றது இந்த அமைப்பு.

Old Indian Train

10) இந்தியாவிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட இரயில் நிலையம் என்ற பெருமை, “ வெங்கட்டநரசிம்மராஜுவரிப்பேட்டா “ இரயில் நிலையத்தையே சேரும். சில சமயம்,  இதற்கு முன்னால் ஶ்ரீ என்ற முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படும். பெரிய பெயரல்லவா?

Longest Indian Railway Station Name - Venkatanarasimharajuvaripeta

techbreezy.com

11) இந்திய இரயில்வேயில் மிகவும் நம்பத் தகாத இரயில் கௌஹாத்தி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரெஸ் தான்.

சராசரியாக, இந்த இரயில் 10-12 மணிநேரம் தாமதமாக வருமாம், ஆமாம், இந்தியாவையே சுற்றி வருவதென்றால் அவ்வளவு இலேசுபட்ட காரியமா என்ன ?

Guwahati-Trivandrum Express unreliable Indian train

ovguide.com

12) இந்தியாவின் மிக நீண்ட சுரங்கம் ஜம்னுகாஷ்மீரில் உள்ளது.

11.215 கிலோமீட்டர் நீளமான பீர் பாஞ்சல் இரயில் சுரங்கம் தான் அந்த நீண்ட சுரங்கம்.

longest Indian Rail tunnel

indiatoday.intoday.in

13) ஒடிஷாவிலுள்ள  இப் என்ற இரயில் நிலையத்துக்குத் தான் இந்தியாவிலேயே மிகச் சிறிய பெயர் இருக்கிறது.

IB - smallest Indian Railway Station Name

techbreezy.com

14) தானியங்கி பாய்ன்ட முறை அறிமுகமாகும் முன் ஒவ்வொரு முறை இரயில்கள் , தண்டவாளம்  மாற ஊழியர்கள் அவர்களின்  கைகளால் அவற்றை மாற்றின. இவ்வாறு செய்யும் போது, பல ஊழியர்கள் தங்கள் விரல்களையோ அல்லது கைகளையோ இழந்துள்ளனர். இதைப் போன்று அகோரமான விபத்துகள் நடக்காமல் இருக்க தொழில்நுட்பம் எப்படி உதவி செய்துள்ளது என்பதை உணர்தல் அவசியம்.

Contribution of Indian Railways employee

Wikimedia

15) திப்ருகருக்கும் கன்னியாக்குமாரிக்கும் இடையே 4,273 கிலோமீட்டருக்குச் செல்லும் விவேக் எக்ஸ்பிரெஸ் தான் இந்தியாவின் மிக நீண்ட தூரத்துக்குச் செல்லும் இரயிலாகும்.

Vivek Express

kochigallan.com

16) நாக்பூருக்கும் அஜ்னிக்கும் இடையே இருக்கும் 3 கிலோமீட்டர் இடைவேளி தான் இரண்டு இரயில் நிலையங்களுக்கு இடையேயான மிகக் குறைவான தூரமாகும்.

ajni railway station in india

static.ibnlive.in.com

17) ஒரு இடத்திலும் நிற்காமல் அதிக தூரம் செல்லும் இரயிலாக திருவனந்தபுரம் – எச்.நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரெஸைச் சொல்லலாம். இந்த இரயில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து 528 கிலோமீட்டர் செல்கிறது.

Rajdhani Express

farm6.staticflickr.com

18) லக்னோ இரயில் நிலையம் தான் இந்தியாவிலே மிகவும் பரபரப்பான சந்திப்பு; தினமும் 64 இரயில்கள் இந்தச் சந்திப்புக்கு வந்து செல்கின்றனர்.

Lucknow the busiest Railway junction in India

fotothing.com

19) நாள்தோறும் 11,000 இரயில்களை ஓட  வைக்கும் இந்த அமைப்பின் அளவையும் உழைப்பையும் கண்ட வியக்கத்தான் முடிகிறது.

Indian Railway Runs 11000 Trains Daily

timesofindia.indiatoday.com

20) தினமும் 2.5 கோடி பயணிகளுக்குச் சேவை செய்கிறது, இந்தய இரயில்வே துறை.  இது ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து, டாஸ்மேனியா ஆகிய இடங்களிலுள்ள மொத்த மக்கள் தொகைக்கு நிகரான ஒரு அளவாகும்.

Indian Trains Carrying Passengers

indiamarks.com

21) தில்லியிலுள்ள இரயில் அருங்காட்சியகம் தான் ஆசியாவின் மிகப் பெரிய இரயில் அருங்காட்சியகம். அங்கு நகரும் மற்றும் நகராக் காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Rail Museum in Delhi

Wikipedia

22) நவப்பூர் இரயில் நிலையத்தின் நடைமேடை இரண்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ) இருக்கிறது.

Navapur Railway Station Fact

23) இந்திய இரயில்வே துறையின் மாஸ்காட், “போலு “ என்கிற காவல் யானையாகும்.

 Indian Railway Mascot - BholuDiscussionsTY News