விளையாட்டும் அரசியல் தான் என்று நிரூபிக்கும் 9 அரசியல்வாதிகள்

Updated on 19 Jan, 2018 at 2:20 pm

Advertisement

அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத விளையாட்டே இல்லை என்று சொல்லலாம். விளையாட்டுத் துறைகள் அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் புனர்வாழ்வு மையங்கள் ஆகிவிட்டன. இவர்களைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டுத்துறை சங்கத் தலைமை என்பது அதிகாரம், பணம் மற்றும் விளம்பரம் பெறுவதற்காகவே.

விளையாட்டில் திறமைசாலிகளை தேடிப்பிடிப்பது, தக்க பயிற்சி அளிப்பது, அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களையும், விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவது முதலியவை இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல…மூச்!

ஆண்டுக்கணக்காக விளையாட்டுத்துறை சங்கங்களை தன் கைவசம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் பட்டியல் இதோ…


Advertisement

9. விஜய் குமார் மல்ஹோத்ரா – 41 ஆண்டுகள், வில்வித்தை சங்கமான ஆர்செரி அசோசியேஷன்ஆப் இந்தியா (AAI ). வயது – 83. கட்சி – பா.ஜ.க.

1972-ல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வில்வித்தை மீண்டும் சேர்க்கப்பட்ட பின்பு விதிப்படி ஆகஸ்ட் 8, 1973 அன்று தொடங்கப்பட்டது. அன்று முதல் AAI -ன் தலைவராகத் திகழ்ந்து வருபவர் V.K. மல்ஹோத்ரா. விளையாட்டுத்துறை அமைச்சகம் விதிப்படி, வயது மற்றும் பதவிக்காலம் குறித்த சட்ட திட்டங்களை மீறியவர் என்பதால் அரசாங்கம் AAI-க்கு அளித்திருந்த அங்கீகாரத்தை ரத்து செய்தது.

 

Vijay-Kumar-Malhotra-2
8. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி – 20 ஆண்டுகள் கால் பந்தாட்ட சங்கமான Football Federation Of India. வயது- 70. கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, 20 ஆண்டுகள் AIFF என்ற கால் பந்தாட்ட சங்கத் தலைவராக இருந்து 2008-ல் உடல் நிலை மிகவும் மோசமானதால் பதவியை விட்டிறங்கினார்.

Priya-Ranjan-1024x636

 

 

7. ஜகதீஷ் டைட்லர் – 27 ஆண்டுகள், ஜூடோ பெடரேஷன் ஆப் இந்தியா
வயது – 71. கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ்

ஜாதிக்கலவரத்தை மூட்டியதாக குற்றம் சாற்றப்பட்டவர் விளையாட்டு சங்கத் தலைவராக இருப்பது என்பது இந்தியாவில் மட்டும் தான் முடியும்! இப்பேர்பட்ட ‘பெருமை’ வாய்ந்தவர்தான் டைட்லர் ! சங்கத் தேர்தலில் தோல்வியே சந்திக்காத டைட்லர், உச்ச வயது வரம்பை மீறியதால் பதவியில் நீடிக்க முடியாமல் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான முகேஷ் குமாரை பதவியில் அமர்த்தியிருக்கிறார்.

Jagdish-Tytler

 

 

6. சுரேஷ் கல்மாதி – 16 ஆண்டுகள் – இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் (IOA)
வயது – 71. கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ்.

IOA-உடன் தொடர்புள்ள மிகப் ‘புகழ்’ பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர். 16 ஆண்டுகள் IOA-ன் தலைayil பணியாற்றிய இவர், 2010 Commonwealth Games விளையாட்டுகளை தில்லியில்நடத்துவதில் ஊழல் குற்றம் சாற்றப்பட்டு பதவியைத் துறந்தார். இன்று திஹார் சிறையில் இருக்கிறார்.Suresh-Kalmadi
5. அஜய் மற்றும் அபய் சிங் சௌதாலா – பல்வேறு விளையாட்டு சங்கங்கள்.

அஜய் வயது – 53. அபய் வயது – 52. கட்சி – INLD

IOA-ன் தலைவராக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அபய் சௌதாலா IABF என்ற குத்துச் சண்டை சங்கத் தலைவராக (President) இருந்தார். பின்னர் இவர் தனக்கு பதிலாக தன் மைத்துனரும், பாஜக எம் எல் ஏவுமான அபிஷேக் மத்தோரியாவை IABF-ன் தலைவர் ஆக்கினார். இதனால், அபய் சௌதாலாவுக்கு IOA தேர்தலில் IABF-ன் வாக்கு கிடைத்தது! அடுத்ததாக, மத்தோரியாவும், IABF-ஐ வழி நடத்தும் ‘Executive Council’ குழுவும் சேர்ந்து IABF-ன் சாசனத்தையே மாற்றி அமைத்து, சௌதாலா ‘சேர்ம’னாக பதவி ஏற்க வழி செய்தனர். டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் சகோதரர் அபய் சௌதாலாவுக்கு வாக்களித்தார் அஜய்சௌதாலா.
அஜய் மற்றும் அபய் சிங் சௌதாலா இருவரும் பத்து ஆண்டுக்காலம் IOA-ன் தலைவராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலாவின் புதல்வர்களாவர். தந்தை எவ்வழி, மக்கள் அவ்வழி ! “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்பதற்கேற்ப ஊழல் வழக்கில் சிக்கிய அபய் சௌதாலாவும் அவர் தந்தையும் தற்பொழுது சிறையில் இருக்கின்றனர்.

Ajay-and-Abhay-Singh-Chautala

 

4. யஷ்வந்த் சின்ஹா – 12 ஆண்டுகள், ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன்
வயது – 77. கட்சி – பாஜக
2௦௦௦-ல் செயலாளர் R.K.கன்னாவுடைய தந்தை அனில் கன்னாவுக்கு “ஓகே” என்பதால்திடீரென்று ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. அரசாங்கத்தின் உச்ச வயது முதலிய வரம்புகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

yashwant-singh-All-India-Tennis-Association

 

3. வித்யா ஸ்டோக்ஸ் – 26 ஆண்டுகள், விமென்ஸ் ஹாக்கி அசோசியேஷன்
வயது – 86. கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ்

ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரரான பர்கத் (Pargat) சிங்க்கை தோற்கடித்து ஹாக்கி இந்தியாவின் தலைவராகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வித்யா ஸ்டோக்ஸ்,
அதற்கு முன் மகளிர் ஹாக்கி சங்கத் தலைவராக 1984 முதல் 2010 வரை – 26 ஆண்டுகள் – பதவி வகித்தார்!
rg2. ஷரத் பவார் – 7 ஆண்டுகள், இந்திய கிரிக்கெட் சங்கமான அலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் ICC
வயது – 74. கட்சி – NCP (எ) தேசியவாத காங்கிரஸ்கட்சி

Vidya-Stokes

 

2.பவார் 2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் 2010 முதல் 2012 வரை சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்தவர். கபடி மற்றும் கோ கோ சங்கத் தலைவர்களாக இருந்தவர். கிரிக்கெட் சங்கத்தில் ஆர்வம் ஏன் என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, “எனக்கு எப்போதும் விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது. நான் கபடி மற்றும் கோ கோ சங்கத் தலைவர்களாக இருந்ததை மறந்துவிட்டீர்களா?” என்றார், கிராமிய விளையாட்டு சங்கங்களில் தொடங்கி கிரிக்கெட் சங்கங்களைக் கைப்பற்றிய பவார் !

Sharad-Pawar

 

1. N. ராமசந்திரன் – பல்வேறு விளையாட்டு சங்கங்கள்
வயது – 74. கட்சி – ம.தி.மு.க.

மற்றவர்களை விட சுவாரஸ்யமானது இவர் விஷயம். உலக ஸ்க்வாஷ் பெடரேஷன் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர். இந்திய ட்ரயத்லான் பெடரேஷனின் உப-தலைவர். சரி,தலைவர்? – அவர் மனைவிதான் ! இது மஸ்ரீனிவாசன் இவர் தமிழ்நாடு சைய்க்ளிங் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்க்வாஷ் ராக்கெட் அசோசியேஷன் – இவற்றுக்கு தலைவர்; மேலும், தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் உப-தலைவர் ! அப்பப்பா, போதுமா?! BCCI தலைவராக இருந்த N. ஸ்ரீனிவாசன் தம்பி இவர் ! விளையாட்டு ஆர்வம் ரத்தத்தில் ஊறியிருக்கிறதோ !


Advertisement

N_-Ramachandran


  • Advertisement