1952 இலண்டனாக மாறியுள்ள தில்லியின் 5 புகைப்படங்கள்

10:55 am 16 Nov, 2016

கடந்த ஒரு வார காலமாக , தில்லியை ‘எரிவாயு அரங்காக’ மாற்றிய பனிப்புகையால் உள்ளூர் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர் :

அரசாங்மும் பல்வேறு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பழைய நிலைக்கு மாற்ற முயற்சிகள் எடுத்து வரும் இந்நேரத்தில்,  தில்லி எங்கும் காணப்படும் அடர்ந்த புகைப்பனி, 1952 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரை உலுக்கிய பெரும் புகைப்பனியை நினைவுப் படுத்துகிறது.

தில்லியின் தற்போதைய நிலையும், 1952 ஆம் ஆண்டில் இலண்டனின் நிலையும்  ஒன்றிற்கு ஒன்று ஒத்துப் போகின்றன என்பதைக் காட்டும் 5 விநோதமானப் புகைப்படங்களை நாங்கள் கண்டெடுத்தோம் , ஒவ்வொன்றாக அவற்றைப் பார்க்கலாம் :

இந்த இரண்டு சம்பவங்களிலும் , முகமூடி அணியாமல் மக்களால் சாலைகளில் நடமாட முடியாத அளவிற்கு காற்றில் மாசின் அளவு இருந்தது.

முன்பெல்லாம் பேருந்துகள் திறந்த நிலையில் தான் ஓடும் ;  வீதிகளில் சென்று நச்சுக் காற்றச் சுவாசிப்பதைத் தவிர்க்கப் பொது மக்கள், வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கொண்டனர்; அதனால் சாலைகளும் பேருந்துகளும்  வெறிச்சோடிக் காணப்பட்டன.

புகைமூட்டத்தில் நினைவுச் சின்னங்கள் மறைந்து போனதால் , வழக்கமாகச் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் சுற்றலாத் தலங்களும் ஆள் நடமாட்டமின்றிக் காணப்பட்டன.
 

இரண்டு நகரங்களிலும் நடக்கவிருந்த முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் ரத்தாயின. (இலண்டனில் இங்கிலிஷ் ப்ரீமியிர் லீக் போட்டிகளும் தில்லியில் ரஞ்சிப் போட்டிகளும் ரத்தாயின )

இரண்டு சம்பவங்களாலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர் தான். நாள் முழுதும் மாசு மிகுந்த சூழலில் நிக்க வேண்டி இருந்ததால் , அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

எனினும், இலண்டனில் அந்தப் பனிப்பொழிவு வெறும் 4 நாட்களே நீடித்தது; தில்லியிலோ 7 நாட்கள் மேலாகியும் பனிப்புகையின் அளவு குறையவில்லை. இதன் மூலம் மக்கள் அனைவரும் , நாம் இன்றளவும் இயற்கையின்  காலடியில் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளனர்.DiscussionsLatest News