நொடிகளில் அறிவுள்ள இந்தியராக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் பற்றி 10 தகவல்கள்

8:42 pm 9 Nov, 2016

வருடம் முழுவதும் கடினமாக உழைக்கும் நம் வாழ்க்கையில் , நெடுதூரப் பயணங்கள்  புத்துயிரூட்டும் மருந்துகளாக இருக்கின்றன. அதுவும் பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்படும் நெடுஞ்சாலைகளில் மின்னல் வேகத்தில் சீரிப் பாயும் அனுபவம் போல் வேறெதுவும் வராது; வாழ்க்கைப் பயணத்தில் இப்படிப்பட்ட பயணங்களை எப்போதும் மறக்க முடியாது.

பயணங்களில் நமக்கு இருக்கும் ஆர்வம் நாம் பயணிக்கும் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் காட்டுவதில்லை.  பெரும்பாலும் நாட்டைச் சுற்றிப் பயணிக்கிறோம் என்ற பெயரில்  டூர்களுக்குத் தான் செல்கிறோம்; அவற்றில் எல்லாமே செயற்கையாகிறது; நமக்கிருக்கும் ஆர்வமெல்லாம் இதனால் அழிக்கப்படுகிறது. மொத்தத்தில் நாம், பயணம் செய்ய விரும்புவோராக அல்லாமல் சுற்றுலாப் பயணிகளாகப் பயணிக்கிறோம்.

உண்மையாகப் பயணிக்க நாம்  நமது சாலைகளைப் பற்றியும் நெடுஞ்சாலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள் கீழ்வருமாறு :

1. கி்ட்டத்தட்ட 40 இலட்சக் கிலோமீட்டர் நீளமான சாலைகளோடு, உலகிலேயே இந்தியா தான் இரண்டாவது பெரிய சாலைப் பிணையத்தைப் பெற்றுள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளும் (NH) , அதிவேக  நெடுஞ்சாலைகளும் , மாநில நெடுஞ்சாலைகளும் (SH) , மாவட்ட சாலைகளும், கிராமப்புற சாலைகளும் அடக்கம்.

2. தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்துக்கும் மேம்பாட்டிற்கும் பராமரிப்புக்கும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தான்பொறுப்பாகும்.

1988 ஆம் ஆண்டு நடைமுறை படுத்தப்பட்ட NHAI சட்டத்தால் உருவான இந்த அமைப்பின் பெரும்பாலான வேலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நம் நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சியின் போது துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,329 கிலோமீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன; இதன் மூலம் நம் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய நெடுஞ்சாலைத் திட்டமாக இது மாறி விட்டது.

3. அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலைகள் தற்போது 93,051 கிலோமீட்டர் நீளம் உள்ளன. புள்ளி விவரத்தை வைத்துப் பார்த்தால், நம் நாட்டிலிலுள்ள மொத்த சாலைகளின் நீளத்தில் நெடுஞ்சாலைகளின் நீளம் வெறும் 1.7% ஆக இருந்தாலும் , சாலைகளில் செல்லும் போக்குவரத்தில் 40% நெடுஞ்சாலைகளில் தான் நடக்கிறது.

4. 3,745 கிலோமீட்டர் நீளமான NH 44 (  முன்பு இது  NH7 ஆக இருந்தது) தான் இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையாகும்;   ஶ்ரீநகரையும் கன்னியாக்குமாரியையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாட்டக்கா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியே செல்கிறது.

inside (1)

5. எர்ணாக்குளத்திலிருந்து கொச்சித் துறைமுகம் வரைச் செல்லும் NH47A தான் இந்தியாவின் மிகச் சிறிய  நெடுஞ்சாலை. இதன் நீளம் வெறும் 6 கிலோமீட்டர் தான்.

6. NHDP (தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்) தற்போது மூன்று கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது :

  • தங்க நாற்கரம் (5,848 கிலோமீட்டர்) இந்தியாவின் நான்கு பெருநகரங்களான தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகியவற்றை இணைக்கிறது.
  • வடதெற்கு- கிழக்கு மேற்கு இடைடேயான நடைக்கூடம் (7,300 கிலோமீட்டர்) வடக்கில் இருக்கும் ஶ்ரீநகரையும் தெற்கிலிருக்கும் கன்னியாக்குமாரியையும் இணைக்கிறது; இதன் ஒரு பிரிவு சேலத்தையும் கொச்சியையும் இணைக்கிறது. அதோடு கிழக்கில் இருக்கும் சில்சாரையும் மேற்கிலிருக்கும் போர்பந்தரையும் இணைக்கிறது.

7. இந்தியாவில் நெடுஞ்சாலைகள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை : AH (ஆசிய நெடுஞ்சாலை) , NH (தேசிய நெடுஞ்சாலை) மற்றும் SH (மாநில நெடுஞ்சாலை) .

தேசிய நெடுஞ்சாலை (NH) : நாட்டின் எல்லா மாநிலங்களையும் நகரங்களையும் தேசிய  நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. இவற்றைப் பராமரிப்பது NHAI இன் பொறுப்பாகும்.

 
மாநில நெடுஞ்சாலைகள் (SH):  மாநிலங்களுக்குள் இருக்கும் அனைத்து இடங்களுக்கிடையே தொடர்புகள் ஏற்படுத்த மாநில நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன. இவற்றை மாநில அரசாங்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.

 

ஆசிய நெடுஞ்சாலைகள் (AH): ஆசியாவில் இருக்கும் நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு திட்டத்தால் உருவானது தான், ஆசிய நெடுஞ்சாலைகளின் பிணையம்.

ஆசிய  நெடுஞ்சாலைகளின் பிணையம் என்று ஒன்று தனியாக இல்லை;  இத்திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் முக்கியமான நெடுஞ்சாலைகளைச் சேர்த்துத் தான் இந்தப் பிணையம் உருவானது.

சீனாவின் கன்சூ மாகாணத்தின் தலைநகரான லான்சௌவையும் ஜார்க்கண்டின் பர்ஹீயையும் AH42 இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை எவரஸ்ட் சிகரம் வழியாகவும், திபெத்திலுள்ள லாசா வழியாகவும், நேபாளின் காத்மாண்டு வழியாகவும் செல்கிறது.

8. நாம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பல முறை தூரத்தைக் காட்டும் மைல் கற்களைப் பார்த்திருப்போம்; ஆனால் அவை ஏன் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன என எப்பொழுதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா? உண்மையில், அவை நாம் செல்லும் நெடுஞ்சாலையின் வகையைக் குறிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள  மைல்கற்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில்  இருக்கும்.

மாநில நெடுஞ்சாலையிலுள்ள  மைல்கற்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில்  இருக்கும்.

நகர நெடுஞ்சாலைகளிலுள்ள   மைல்கற்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும்.

கிராமப்புறங்களிலுள்ள நெடுஞ்சாலைகளிலுள்ள   மைல்கற்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில்  இருக்கும்.

9. 2010 ஆம் ஆண்டு, நெடுஞ்சாலைகளுக்கு எண்களிடும் முறையை இந்திய அரசு நெறிப்படுத்தியது; அதன்படி, வடக்கு-தெற்கு திசையில் செல்லும் நெடுஞ்சாலைகள் இரட்டைப்படை எண்களுடன் இருக்கும்; கிழக்கு- மேற்கு திசையில் செல்லும் நெடுஞ்சாலைகள் ஒற்றைப்படை எண்களுடன் இருக்கும்.

10. NH1, NH37, NH88 போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளெல்லாம் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்களைப் பெற்றிருக்கும். ஒரு நெடுஞ்சாலை மூன்று இலக்கங்களைப் பெற்றிருந்தால் அது ஒரு நெடுஞ்சாலையின் கிளையாகவோ அல்லது இரண்டாம் தட்டு நெடுஞ்சாலை என்று அர்த்தம்.

உதாரணத்துக்காக. NH144, NH244, NH344 முதலியன NH44 இன் கிளைகள் ஆகும். அதோடு, நெடுஞ்சாலைகளுக்குப் பின் பின்னொட்டுக்கள் இருந்தால், அவை துணை நெடுஞ்சாலையின் சிறிய பிரிவுகளைக் குறிக்கும். அதன்படி, NH966A மற்றும்  527B ஆகியவை NH966 மற்றும்  NH527B ஆகிய  நெடுஞ்சாலைகளின் பிரிவுகள் என்று பொருள் .

மூலம்: http://www.nhai.org/Audit.htm    

 DiscussionsTY News