உங்கள் குழந்தைகளை கர்நாடக இசையைக் கற்க வைக்க எளிய 7 வழிகள்

Updated on 19 Jan, 2018 at 2:18 pm

Advertisement

இந்திய பாரம்பரிய (கர்நாடக இசை; ஹிந்துஸ்தானி இசை என்றும் கொள்ளலாம்) இசையை  நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது என்பது எளிதான காரியம் அல்ல;  ஆனால், அது முடியாத காரியமும் அல்ல. தங்கள் குழந்தைகள் கர்நாடக  இசையைக் கற்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் முதலில் நிதானமாக  அதனைக் கையாள வேண்டும்.  பிடிவாதம் பலனளிக்காது. தற்போது பாப், ஹிப்-ஹாப் என பல இசை வகைகள் வந்து விட்டன. இவை அனைத்தும் குழந்தைகளைத் அதிகமாகவும், விரைவாகவும் இழுக்கின்றன என்பதே உண்மை என்றாலும், நாம் நமது குழந்தைகளை கர்நாடக இசையைக் கற்கச் செய்தோம் என்றால் அது அவர்களுக்குள் வியத்தகு மாற்றத்தை உண்டாக்கித் தன்னகத்தே இழுக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அது அவர்களை வேறு பல இசை வகைகளையும் ரசிக்க வைக்கும். அவர்களை தனித் தன்மையுடன் வளரச் செய்யும்.

நாம் இங்கு நமது குழந்தைகளை இந்திய பாரம்பரிய இசையைக் கற்க வைக்க எளிய 7 வகைகளைக் காணலாம்.

7.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இணைந்து கர்நாடக இசையைக் கொண்டாடி மகிழுங்கள்

இதனை நீங்கள் அனைவருடனும் கலந்து ஆலோசித்து, அனைவருக்கும் தோதான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளுடன் இணைந்து ஒவ்வொருவருக்கும் பிடித்தமான இசைக் கருவிகளை வாசித்து மகிழலாம் அல்லது பல நல்ல கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி மகிழலாம். இதன் மூலம் உங்கள் குழந்தையிடம் இசை விஷயத்தில் ஒரு மாற்றத்தை உங்களால் காண முடியும்.

carnatic-music-at-home

6.கர்நாடக இசை கச்சேரிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்

கச்சேரியில் பல தரப்பட்ட மனிதர்களை குழந்தைகளால் காண முடியும். அவர்கள் அனைவரும் அந்த இசையை ரசிப்பதைப் பார்க்க முடியும். இதுவே அவர்களுக்கு இளம் வயதிலே அந்த இசையின் மீது ஒரு ஈடுபாடு வரக் காரணமாக இருக்கும்.

concert

 

5.கர்நாடக இசை தொடர்பாக குழந்தைகளுக்குப் பல கதைகளைக் கூறலாம்

கதைகள் என்பது ஒரு குழந்தையின் கற்பனைத் திறனை வளப்படுத்தும். கர்நாடக இசைத் தொடர்பான கதைகளைக் கூறும் போது, அது அவர்களின் ஆவலைத் தூண்டும். அதுவே மேலும் அந்த இசையைப் பற்றி அவர்கள் அறிந்துக் கொள்ள ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தும்.

5_-Read-out-stories-relating-to-music-about-Indian-classical

 

4.கர்நாடக இசையின் தாக்கம் அதிகம் உள்ள வீடியோக்களை வீட்டில் உபயோகிக்கலாம்

இசையைப் பிடித்த எல்லா குழந்தைகளுக்கும் இசைக்கருவிகளையும் பிடிக்கும். எனவே அதிகமாக இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் கர்நாடக இசையையும் அவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதிகமாக இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் கர்நாடக இசையையும் அவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த வீடியோக்களை அவர்கள் பார்ப்பதும், கேட்பதும் மட்டுமே போதும். பின்பு நமது வேலை எளிதாகி விடும்.


Advertisement

4_-Play-a-video-where-there-is-ample-portrayal-of-Indian-classical-music-and-instruments

 

3.உங்கள் குழந்தைகள் எப்போது இசையைக் கேட்க விரும்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்

சில குழந்தைகள் சாப்பிடும் போது பாடல்கள் கேட்க விரும்புவார்கள். இன்னும் சிலரோ  ‘ஹோம்வொர்க்’  போது கேட்க விரும்புவார்கள். அது போல உங்கள் குழந்தையின் ரசனையையும் புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப கர்நாடக இசைக்கோர்வையை தவழ விடுங்கள். இது அவர்களின் நினைவாற்றலைத் தூண்டி ஆழ்மன சிந்தனையை மேம்படுத்தும்.

child playing instrument

 

2.இசைக்கருவிகள் விற்கும் கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.

.இவ்வாறு அவர்களை அழைத்து சென்றோமே அனால், அவர்களுக்கும் ஒரு பரிச்சயம் கிடைக்கும். வெவ்வேறு இசைக் கருவிகளின் பயன்படுத்தும் முறைகள் தெரியவரும்.அதுவே மேலும் அந்த இசையைப் பற்றி அவர்கள் அறிந்துக் கொள்ள ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தும்.

veenas in shop

 

1.குழந்தைகளுடன்உரையாடுங்கள்

ஆம்..அவ்வப்போது உங்கள் குழந்தைகளுடன் உரையாட பழகிகொள்ளுங்கள். உங்கள் உரையாடல்கள் வெறும் உரையாடலாக இல்லாமல் ஓர் கலந்துரையாடலாக இருக்கட்டும். அதற்காக அவர்களின் மீது உங்கள் ஆசைகளை திணிக்காதீர்கள். ஒரு கதை போல கர்நாடக இசையின் வரலாற்றைக் கூறுங்கள். அதன் மேன்மையைக் கூறுங்கள். நம் முன்னோரின் பாரம்பரியத்தைக் கூறுங்கள். கர்நாடக இசையின் தாக்கம் அதிகமாய் உள்ள சினிமா பாடல்களை மேற்கோள் காட்டி பேசுங்கள். அது அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

family discussion

 

 

Advertisement


  • Advertisement