சூப்பர் ஸ்டார் மோகன்லால் பற்றிய 11 அரிய தகவல்கள்

4:22 pm 21 Oct, 2016

Advertisement

1. தன் முதல் படமான, ‘திறனோட்டத்தில்’ 1978 ஆம் ஆண்டிலேயே மோகன்லால் நடித்திருந்தாலும், தணிக்கை முறையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அப்படம் வெளியாக 25ஆண்டுகள் ஆயிற்று.

2. நடிப்புத் துறைக்கு அவர் ஆற்றிய சேவைக்காக, இந்திய அரசு மோகன்லாலுக்கு 2001 ஆம் ஆண்டில் நம் நாட்டின் நான்காவது உயரிய விருதான, ‘பத்ம ஶ்ரீ’ வழங்கி கௌரவித்தது.

3. அவரின் திரையுலகப் பயணத்தில் அவர் சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளையும், 6 கேரள மாநில விருதுகளையும், 8 பிலிம் பேர் விருதுகளையும் வாங்கினார்.

4. 2009 ஆம் ஆண்டில், இந்தியாவின் பிராந்திய படையில் ‘துணைப் படைத் தலைவர்’ ஆகச் சேர்க்கப்பட்டார், மோகன்லால்.


Advertisement

5. உலகப் புகழ் பெற்ற தற்காப்புக் கலையான, டோக்வோண்டோவிலும் மோகன்லால் சிறந்தார். எனவே, 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோலில் டோக்வாண்டோவின் தலைமையகம் அமைந்துள்ள “ குக்கிவான் “ என்ற இடத்தில் மோகன்லால் அவர்களுக்குக் கௌரவ கருப்பு பெல்ட் வழங்கப்பட்டது. இதைப் பெற்ற ஒரே மற்றும் முதல் தென்னிந்திய நடிகர் இவர் தான்.

6. மோகன்லால் அவர்களின் மனைவி திருமதி சுச்சித்ராவுக்கும் ஒரு திரையுலகப் பின்னணி உண்டு. அவர் யார் தெரியுமா? பிரபல தமிழ்ப் படத் தயாரிப்பாளர், கே பாலாஜீயின் மகள் தான், சுச்சித்ரா. தன் திருமணம் குறித்து, மோகன்லால் ஒரு பேட்டியில் கூறுகையில், “என் மனைவியை முதன் முதலில் ஒரு ரசிகையாகத் தான் பார்த்தேன். என் நடிப்பைப் பாராட்டிக் கடிதங்கள் பல எழுதுவார். பின், திருமணத்துக்கான பேச்சுவார்த்தையின் போது, எங்களின் ஜாதகங்கள் பொருந்தவில்லை என ஜோதிடர் கூறினார்; ஆனால், அவர் பிழை செய்திருந்தார் எனப் பின்னர் தான் நாங்கள் அறிந்தோம். அப்படி தான் எங்கள் திருமணம் நிகழ்ந்தது “ என்றாராம்.7. நடிப்போடு நில்லாமல், அவர் தொழிற்துறையிலும் ஆர்வம் காட்டினார். திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட விற்பனை, உணவு விடுதிகள், பொட்டலமிடப்பட்ட மசாலாக்கள் போன்ற துறைகளில் அவர் தொழில் செய்தார். ‘மேக்ஸ்லாப் சினிமாஸ் மற்றும் என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிட்டட்’ என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் மலையாலப் படங்களை விற்பனை செய்தார். மேலும், திருவனந்தபுரத்திலுள்ள ‘கின்பிரூ பட மற்றும் காணொளி நிலையத்தில் ‘ ஒலிச்சேர்க்கையில் கைதேர்ந்த கலைஞர்களுக்காக “விஸ்மயாஸ் “ என்ற பெயரில் ஒரு “போஸ்ட் ப்ரொடக்ஷன்” ஓவிய அறையையும் கல்லூரியையும் துவங்கினார்.

8. மாயாஜாலத்தில் ஆர்வம் கொண்ட மோகன்லால் அவர்கள், பிரபல மாயாஜால நிபுணரான கோப்பிநாத் முத்துக்காடிடம் 18 மாதங்கள் பயிற்சி பெற்று “எரியும் தந்திரம் “ என்ற தந்திரத்தைச் செய்ய முற்பட்டார். ஆனால் அதிலிருந்த ஆபத்துகளால் அந்த முயற்சியை அவர் கைவிட நேரிட்டது.

9. மோகன்லால் அவர்களின் படங்களில் சண்டைக் காட்சிகள் அருமையாக இருப்பதற்கு அவர் முறையாக மல்யுத்தம் பயின்றதே காரணம். சொல்லப் போனால், 1977-78 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

10. 1980களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவரும் மம்மூட்டியும் தான் நடித்தனர். 1986 இல் மட்டும் அவர் நடித்து 34 படங்கள் வெளியாயின. 1982 முதல் 1988 வரை சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறை அவரின் படம் வெளியானதாம். அந்த சாதனைக்குப் பின்னால் எவ்வளவு முயற்சி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்களேன்!

11. 2005 ஆம் ஆண்டில் பீஜாய் நம்பியார் இயக்கிய “பிம்பங்கள் “ என்ற மௌன படத்தில் அவர் நடித்தார். 9:51 நிமிடங்கள் ஓடிய அப்படம் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றார்.

12. “சிறந்த அந்நியப் படம் “ பிரிவின் கீழ் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை, அவர் நடித்த “குரு “ என்ற கற்பனைக் கதையையேச் சாரும்.


Advertisement


  • Advertisement