இரயில்வே துறை அமைச்சராக வேண்டும் என்று அனைவரும்  விரும்பும் ‘மெட்ரோ மனிதர் ‘ இ. ஸ்ரீதரன் பற்றிய 7 தகவல்கள்

Updated on 19 Jan, 2018 at 2:19 pm

Advertisement

 

தில்லிவாசிகள் பயணிக்கும் விதத்தையே மாற்றிய ஸ்ரீதரனை அடுத்த இரயில்வே அமைச்சராக நியமிக்கக் கோரி குரல்கள் எழுந்துள்ளன. எளிமையான மனிதரான ஸ்ரீதரன்  கேரளாவிலுள்ள பொன்னணி வாசியாவார்.  ஆனால், இன்று பல உள்ளூர்வாசிகளும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் தில்லி மெட்ரோ இரயில் சேவையயை உருவாக்கியவர் இவர் தான் எனச் சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். எல்லாத் தடைகளையும் தாண்டி, தில்லி மெட்ரோ இரயில்  வேகமாகவும், சிக்கனமாகவும், குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்க ஸ்ரீதரனே முழு முதற்காரணம்.  ‘மெட்ரோ மனிதரின்’ சேவைகளைக் கௌரவிக்கும் வண்ணம் அவரையே அடுத்த இரயில்வே அமைச்சராக நியமிக்குமாறு எழுந்த கோரிக்கை வரவேற்கத்தக்கது. இந்த மாமனிதரைப் பற்றி எல்லா இந்தியர்களும் அறிய வேண்டிய 7 தகவல்கள் கீழ்வருமாறு :

7) இந்திய பொறியியல் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்

கேரளாவைச் சேர்ந்த இலட்டுவலப்பில் ஸ்ரீதரன் , ‘சிவில் இன்ஜினியரிங்’ துறையில் தன் பொறியியல் பட்டப்படிப்பை ஆந்திரபிரதேசத்தின் காக்கிநாடாவிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்து  முடித்தார். பின், பொறியியல் சேவைக்கான தேர்வில் ( தற்போது, இது  ‘ IES – இந்திய பொறியியல் சேவை ‘ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது) தேர்ச்சி பெற்று, 1954 ஆம் ஆண்டு தெற்கு இரயில்வேயில் ‘ தகுதிகாண் உதவிப் பொறியாளராக’ சேர்ந்தார்.

A-Retired-IES-Indian-Engineering-Services[1]

 

6) பேராசிரியராக பணி புரிந்தவர்

பிறகு , சிறிது காலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் , ‘சிவில் இன்ஜினியரிங்’ துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், பம்பாய் துறைமுகத்தில் ‘ பணி  பயில்பவராக’ வேலைக்குச் சேர்ந்தார்.

He-Was-A-Lecturer

 

5) கடின உழைப்பிலே நம்பிக்கை உடையவர்

தெற்கு இரயில்வேயில் அவர் வேலை பார்த்த காலம் அது ; 1964 ஆம் ஆண்டு ஒரு கடுமையான புயலால்  பாம்பன் பாலம் மோசமாக சேதமடைந்திருந்தது. இதனால், ராமேஸ்வரத்திற்கும் தமிழ்நாட்டு நிலப்பரப்புக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இரயில்வே துறை  நிலைமையை ஆறு மாதத்திற்குள் சீராக்கும் படி , ஸ்ரீதரின் அலுவலகத் தலைவருக்கு உத்தரவிட்டது. அவரோ, தன் பொறுப்பை ஸ்ரீதரிடம் கொடுத்து விட்டு அதை 90 நாட்களிலேயே முடிக்கும் படிச் சொன்னார். முப்பதே வயதான ஸ்ரீதரன், இந்தக் குறுகிய காலக்கெடுவைக் கண்டு அஞ்சாமல் , முழு முனைப்போடு செயல்பட்டார். அதன் பலனாக, சீரமைப்புப் பணிகளை வெறும் 46 நாட்களிலேயே முடித்தார். இவர் உழைப்பையும் சாதனையையும் பாராட்டும் வண்ணம், இரயில்வே துறை இவருக்கு , ‘ இரயில்வே அமைச்சரின் விருது’ வழங்கி கௌரவித்தது. இந்த விருது அவர் தன் தொழில் மீது வைத்திருந்த ஈடுபாட்டிற்கான பரிசு எனலாம்.

Believes-in-Performing[1]

 

4) இந்தியாவின் முதல் ‘மெட்ரோ’வை வடிவமைத்தவர்

1970 ஆம் ஆண்டு, ஸ்ரீதரன் ‘துணை தலைமை பொறியாளராக’ நியமிக்கப்பட்டார். கல்கத்தாவில் வரவிருந்த இந்தியாவின் முதல் ‘ மெட்ரோ’ இரயில் வண்டி திட்டம்,  இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் கவனத்தை ஈர்த்தது. அத்திட்டத்தை வடிவமைத்து, செயல்படுத்தும் பொறுப்பு ஸ்ரீதரனிடம்  கொடுக்கப்பட்டது. அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஸ்ரீதரன் அந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்தார்.  1981 இல் கொச்சினில் இருந்த கப்பல் கட்டும் தளத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும்  ஸ்ரீதரன் நியமிக்கப்படவே,  அவர் இந்தியாவின் முதல் கப்பல் கட்டும் திட்டமான ‘ எம் வி ராணி பத்மினி’ யை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல நேரிட்டது.


Advertisement

Sreedharan_performer

 

3) உலகம் சுற்றும் வாலிபன்

பொதுத் துறைச் சேவைகளுடலான அவரது பயணம் 1990 ஆம் ஆண்டு அவர் தெற்கு இரயில்வேயிலிருந்து ‘ பொறியியல் உறுப்பினர்’ பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நின்றது. ஓய்வு பெற்ற பின், அவர் ஒப்பந்த அடிப்படையில் கொன்கன் இரயில்வேயின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும்  நியமிக்கப்பட்டார். ‘BOT’ முறையின்  ( Build-Operate-Transfer என்னும் கட்டு – இயக்கு – பரிமாற்று முறை) கீழ் இந்தியாவின் முதல் திட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பின், தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இத்திட்டத்திலும், தன் உழைப்பாலும் தொழில்முறை திறன்களாலும் காலக்கெடுவை நீட்டாமல் எல்லா வேலைகளையும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிற்குள்ளேயே முடித்தார். இவரின் உழைப்பைப் பாராட்டும் வண்ணம், தில்லி மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்பார்வையிட மூன்று வருட பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தில்லி மெட்ரோவுடன் அவர் கழித்த 16 ஆண்டுகள் 2011 ஆண்டுடன் நிறைவுபெற்றன.

He-Is-a-True-Traveler

 

2)  இன்றும் இளமை ஊஞ்சலாடுகிறது

பல பொறுப்புகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பின்னும் , வெற்றிக்கான அவரின் தாகம் அடங்கவில்லை. லக்னோவிலும் கொச்சியிலும் வரவிருக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு அவர் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் பாருங்களேன் !

The-Lights-Are-Still-Not-Dimming

 

1) தனிப்பட்ட வாழ்க்கை :

இளைஞர்களே  6 அல்லது 7 மணிக்கு எழுந்து தங்கள் வேலைகளைத் தொடங்கக் கஷ்டப்படும்போது,  ஸ்ரீதரனாலே மட்டும் எப்படி இவ்வளவு செய்ய முடிந்தது ? அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் இயற்கை குணநலன்களும் இதில் பெரும் பங்காற்றியுள்ளன.அவர் காலை 4 மணிக்கு விழித்து, தியானம் செய்வார் ; பின் பகவத் கீதையை வாசிப்பார்; 9: 30 மணியளவுக்கு வேலை செய்யத் தொடங்குவார் ; மாலையில் மனைவி ராதாவோடு நடைபயணம் மேற்கொண்டு பின்னர் தன் குடும்பத்தோடு நேரத்தைக் கழிப்பார்.

சக ஊழியர்களுக்கு , பணியை முடிக்க  நெருங்கும் காலக்கெடுவைக் குறிக்கும் வகையில் , கடிகாரத்தை மாற்றி வைப்பாராம் , ஸ்ரீதரன்.  ” கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே! ” , என்ற கீத வாசகமே அவரைத் தொடர்ந்து பணிபுரிய உதவியதாம்.

கேரளாவில் அவரின் அலுவலகத்தின் மேலே , ” என் கடமைகளை நான் ஆற்றுவேன் ; ஆனால், உண்மையாக நான் ஏதும் செய்யேன் !” என எழுதப்பட்ட அட்டை உள்ளது என்றால் எவ்வளவு பெருந்தன்மை  இவருக்கு இருக்க வேண்டும்!

Mrs and Mr Sreedharan

 

Advertisement


  • Advertisement