மோகத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் சொல்லிட 16 வழிகள்

Updated on 19 Jan, 2018 at 2:17 pm

Advertisement

காதலும் மோகமும் ஒருவரை எளிதில் குழப்பி விடும் ; ஏனெனில், இரண்டிற்கான முதல் கட்ட அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்று தான். இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் வேகமாக எழும்புதல், சம்பந்தமே இல்லாமல் உளறுதல், வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற ஓர் உணர்வு- இவை அனைத்தும் நம்மை ரொம்ப குழப்பி விடும்.  எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவு பெற்று , உங்களுக்கு ஏற்ற நபரைக் கண்டுபிடிக்க , மோகத்துக்கும் காதலுக்கும் இடையே உள்ள 16 வித்யாசங்களைத் தொகுத்துள்ளோம். அவை கீழ்வருமாறு.

1. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்வது, மோகம். மெதுவாக நிகழ்வது, காதல்.

வாழ்க்கை முழுவதும் உங்களோடு நீடித்திருக்கும் காதலானது மெதுவாக மலரும் ஒரு மொட்டைப் போன்றது.

image001-4

 

2.மோகம் ‘டென்ஷனை’ கிளப்பும் ; காதல் நிம்மதி அளிக்கும்

வேகமான  இதயத்துடிப்பும் , நாடித்துடிப்பம்,  உள்ளங்கையில் வியர்வையும் மோகத்தைக் குறிக்கும். ஆனால், காதலோ பதற்றமற்ற ஒரு சுகமான சூழலாலே குறிக்கப்படும்.

image002-4

 

3. மோகம் உங்களை மாற்றிடும். காதல் உங்களை உங்களாகவே இருக்கச் செய்யும்

நீங்கள் உங்கள் துணைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டி, உங்களின் இயற்கையான பண்புகளை மாற்றினால் நீங்கள் மோகத்தில் இருக்கிறீர்கள் ; ஆனால், காதலில் வீழ்ந்தவர்கள் தங்களின் இயல்பை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

image003-4

 

4. மோகம், மற்றவரின் ஆசைகளைத் தீர்க்கச் செய்யும். காதல் மற்றவரை மகிழ்விக்கத் தூண்டும்

மோகத்தில் இருப்பவர்கள் தங்களின் ஆசைகளை விட்டுவிட்டு, மற்றவரின் ஆசைகளுக்கு இணங்குவர். காதலர்களோ, எந்த ஒரு நிலையிலும் , ஒரு ஜோடியாக மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

image004-4

 

 

5. மோகம் ” நீ , நான்” எனப் பிரித்துச் சொல்லும் ; காதல் ” நாம் ” என்றுரைக்கும்

மோகத்தில் இருப்பவர்களுக்கிடையே அடிக்கடி ” நீ அழகாக உள்ளாய்; நான்அழகில்லை ” போன்ற ஒப்பீடுகள் இருக்கும் . எனினும், காதலில் ஒற்றுமை எப்போதும் நிலைத்திருக்கும் .

image005-4

 

6. மோகம் குறுகிய காலம் தான் இருக்கும் ; காதல் காலத்தோடு சேர்ந்து வளரும்

” மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் ” என்பது முதுமொழி. ஆனால், காதலில் அன்பும் அக்கறையும் குறையவே குறையாது.

image006-4

 

7. மோகம் மேலோட்டமானது ; காதல் ஆழமானது .

உடலளவில் தீவிரமான ஈர்ப்புடன் மோகம் முற்று பெறும். காதலிலோ, காதலரின் வேடிக்கைத் தனம் , தனித்தன்மைகள் முதலிய எல்லாமே பிடிக்கும்.

image007-4

 

8.நிறைவை நோக்கிய தேடலில் விளைந்தது, மோகம். இயற்கையான குறைபாடுகளில் இன்பம் காண்பது காதல்.


Advertisement

எல்லா விதத்திலும் பொருத்தத்தைத் தேடினால் அது மோகம். இருவருக்கிடையே உள்ள வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது, காதல்.

image008-4

 

9.மோகம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கச் செய்யும். காதல் வளர்ச்சிக்கு வித்திடும் .

உங்கள் துணையே உங்கள் வாழ்வாகி, வேறொன்றிலும் கவனம் செலுத்த முடியவில்லை எனில் அது மோகம். ஆனால், காதல் ஒருவரைத் தனிமையிலும் தன்னிறைவு அடையச் செய்திடும்.

image009-4

 

10.சற்றே தொலைவில், அதுவும் கண்மறைவாக இருந்தால் குறைவது மோகம். தொலைவு என்ற எல்லை, காதலுக்கு இல்லை.

எல்லைகளுக்குள் வாழ்ந்து மடிவது மோகம். வரம்புகளால் வரையறை செய்ய முடியாதது காதல்.

image010-4

 

11.பொறாமையை உருவாக்குவது மோகம். பாதுகாப்புணர்வை  தருவது , காதல்.

கண்ணில் படும் பெண்ணெல்லாம் அழகாய்த் தெரிந்தால் , அது மோகம். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் காதலரின் அழகு மெருகேறுவதாகத் தோன்றினால் அது காதல்.

image011-4

 

12. ” இக்கரைக்கு அக்கரை பச்சை ” எனச் சிந்தித்தால் அது மோகம்.

தினமும் அழகான எத்தனை பேரைப் பார்த்தாலும் காதலரின் முகம் மட்டுமே தெரிந்தால் அது , காதல்.

image012-4

 

13. தங்களின் சகாக்களை மறக்கச் செய்வது, மோகம். காதல் நட்புக்கு உறுதுணையாக இருக்கும்.

image013-4

 

14. மோகம் காமத்தை மையப்படுத்தியது; காதல் அன்பை மையமாகக் கொண்டது

மோகம் உடலளவு நெருக்கத்தை மட்டுமே விரும்பும்; காதல் மனதளவில் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பை உருவாக்கிவிடும்.

image014-3

15.மோகத்தில், எதிர்மறையான கருத்துக்கள் வாக்குவாதங்களால் தீர்க்கப்படும் ; காதலில் அவை விட்டுக்கொடுப்பதின் மூலமாக தீர்க்கப்படும்.

image015-2

 

16. குழந்தைக்கு, கிடைத்த புது பொம்மை மீதான ஆர்வம் போல , மோகமும் விரைவில் சலித்து விடும்.

வெளித்தோற்றத்தைப் பாராமல் இளமையிலும் முதுமையிலும், இம்மையிலும் மறுமையிலும் கனிந்து கொண்டே இருப்பது, காதல்.  image016-1
 

 

 

 

 

Advertisement


  • Advertisement