ஊருக்கே முன் மாதிரியாய் விளங்கும் ஆட்டோ ஓட்டுனர் 

2:11 pm 15 Jun, 2016

அப்துல் காதர், வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டினாலும், அவர் சாதாரண ஆட்டோ ஓட்டுனர் அன்று. அவரது தனித்தன்மைகள் பற்றி ஒவ்வொன்றாகக் காண்போம்.

தன் ஆட்டோவின் உட்பகுதி முழுவதும் பயனுள்ள தகவல்களை ஒட்டியிருக்கிறார்

Abdul Khader Auto

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை, உதவி எண்கள், நுகர்வோர் விழிப்புணர்வு தகவல்கள், நாளேடு, பொது அறிவு வளர்க்கும் தாள்கள் என எல்லாருக்கும் பயன்படும் பொருட்களால் அலங்கரித்துள்ளார்.

Auto interior

 

மேலும் ஆட்டோ ஓட்டும் போது, பல விதமான பாடல்களை ஒலிக்கச் செய்து ஆட்டோவில் பயணிப்போர்க்குச் சலிப்பு ஏற்படாமல் கவனிக்கிறார். அவரிடம் பழைய பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், மனதை ஊக்குவிக்கும் பாடல்கள், ஆன்மிகப் பாடல்கள்,  ஹிந்தி பட நடிகர் ‘தர்மேந்திரா’ அவர்களின் பாடல்கள் என ஒரு பெரிய பாட்டுத் தொகுப்பே உள்ளது.

ஹிந்தி நடிகர்  தர்மேந்திரா அவர்களின் பாடல்களை அவர் வைத்திருக்கும் காரணத்தைக் கூறுகிறார்:

” தர்மேந்திரா அவர்கள் எனக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளார்; அவர் நடித்த படங்கள் எனக்கு உத்வேகம் அளிக்கும். நான் சுமாராகத் தான் படிப்பேன்; எனக்கு எட்டு வயது இருக்கும் போது என் தந்தை இறக்கவே நானும் என் படிப்பை நிறுத்தினேன்.ஒரு முறை, குறும்புத்தனமாக நானும் என் நண்பனும் ஒரு திரையரங்குக்கு அருகில் இருந்த கடையிலிருந்து கரும்புத் துண்டுகளைத் திருடிவிட்டு திரையரங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம். ஆனால், அந்தக் கடைக்காரர் எங்களைப் பிடித்துவிட்டார். எனக்குஅந்தத் திரையரங்கில் வேலை செய்ய ஆசை என்பதை சொன்னேன்.  அப்போதிலிருந்து அங்கேயே நொறுக்குத் தீனிகள் விற்பது போன்ற வேலைகளை 14 வருடங்களுக்குச் செய்து வந்தேன். இதற்கிடையே, ஷிவாஜிநகரில் இருந்த ஒரு தையலகத்திலும் பணிபுரிந்தேன். ஆனால், எப்போதும்  சொந்த ஆட்டோ ஓட்டுவதே எனது கனவாய் இருந்தது.” என்றார்.

Info In Auto

 

சாலை விதிகள் மதிக்கப்படாத ஊரில்  இருந்தாலும், சாலைகளில் சிவப்பு விளக்குகள் எரியும் போது வண்டியை நிறுத்தித் தன் வாடிக்கையாளர்களிடம் பேசுவது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

வரதட்சணையால் மக்கள் படும் அவதியைக் கண்டு, அதை ஒழிக்கும் எண்ணத்தில் தன் ஆட்டோவின் ஒரு பக்கம் முழுவதும் வரதட்சணையின் தீமைகள் குறித்த தாள்களை ஒட்டியுள்ளார். தன் மனைவிக்கு எந்த விதமான துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவளது ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பதும் ஒரு கணவனின் கடமை என நம்புபவர், அப்துல் காதர்;  தான் ஒரு முறை தன் மனைவிக்காக புடவையும், நெய்யில் செய்த லட்டுவையும் வாங்கிக் கொடுக்க கடுமையாக உழைத்ததை   நினைவு கூறுகிறார்.
Anti-dowry poster

 

 

அடுத்ததாக பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய தகவல்களை கொடுக்கவிருக்கிறார்.

தந்தையின் இறப்பால் அவர் படிப்பு பாதியிலே நின்றுவிட்டது. ஆனால் , அவர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எனவே, அவர்  தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய குழந்தைகளுக்கு புத்தகப்பைகள் வாங்கித் தரவும் எண்ணியுள்ளார்.

auto poster

 

எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்க்கு வாழ்வின் அத்தியாவசங்கள் எவையெவை எனத் தெரிந்துள்ளது. அதனால் தான் , தன் ஆட்டோவில் ஒரு முதலுதவிப் பெட்டியும் , தண்ணீர் பாட்டிலும், கைப்பேசி சார்ஜரும் எப்போதும் வைத்திருப்பார்.

உற்றார் உறவினரைப் பற்றியே யாரும் கவலைப்படாத இந்தக் காலத்தில் , தன் ஆட்டோவில் பயணிப்போரின் நலனை விரும்பி அப்துல் காதர் அவர்களுக்குப் பல வசதிகளைச் செய்துத் தருகிறார்.

அப்துலைப் போல இன்னும் சிலர் இருந்தால், நாடு நன்றாக இருக்கும், அல்லவா?Popular on the Web

Discussions  • Viral Stories

TY News