சென்னையில், காதலருடன் நேரத்தைக் கழிக்க 7 சிறந்த இடங்கள்

2:07 pm 22 Nov, 2016

இந்தியாவின் தெற்குப் பகுதியில் , கோரமண்டல் கரையில் , இருக்கும் சென்னை மாநகரைப் பலருக்கும் ஒரு தொழிற்துறை மற்றும் வர்த்தக மையமாகத் தெரியும்; இந்தியாவின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றான சென்னையைப் பற்றி பெரும்பாலானோர் மேலோட்டமான கருத்தைக் கொண்டுள்ளனர். சென்னை என்றால் காஞ்சிபுரத்துப் பட்டும் பரதநாட்டியமும் ரஜினிகாந்தும் மட்டுமில்லை. சென்னையைப் பற்றி, அதன் மக்களைப் பற்றி, அதன் கலாச்சாரத்தைப் பற்றி, வரலாற்றுச் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை நிரைய இருக்கின்றன.

அதற்கு உதவும் விதமாக , முதலில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமானவர்களோடு நேரத்தைக் கழிக்க சிறந்த 7 இடங்களை ஒன்றின் ஒன்றாகக் காணலாம் :

1) தேசிய கலைக்கூடம் :

ஆச்சரியமாக உள்ளதா? உண்மை தான், சென்னையின் இந்த கலைக்கூடத்தில் நீங்கள் உங்கள் அன்புக்குரியோருடன் பல அற்புதங்களை அனுபவிக்கலாம். சொல்லப் போனால் சென்னை வாசிகள் பலருக்குமே இப்படி ஒரு இடம் இருப்பதாகத் தெரியாது. இந்தியாவில் இருக்கும் கலைக்கூடங்களுள் தொன்மை வாய்ந்தவற்றுள் இதுவும் ஒன்றாகும்.

1906 ஆம் ஆண்டு பிரபல கட்டமைப்பாளர் ஹென்ரி இர்வின் , ராணி விக்டோரியாவின் இந்தோ-சாரஸ்செனிக் பாணியின் பொன் விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தக் கலைக்கூடத்தை வடிவமைத்துக் கட்டினார். அப்படி இந்த வரலாற்றிலும் கலையிலும் உங்களுக்கு ஆர்வம் இல்லையெனில் , இவ்விடத்தை ஒட்டியிருக்கும் அழகான பூங்காவில் உங்கள் பொழுதைப் போக்கலாம்.

2) “கலாக்ஷேத்திரா “ வில் ஒரு மாலைப் பொழுது :

உங்கள் காதலருக்கு இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் இருந்தால், அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கலாக்ஷேத்திராவுக்கு அழைத்து வருங்கள்! இசைப் பிரியர்களுக்கும் நடனப் பிரியர்களுக்கும் இந்த இடம் விருந்தாக அமையும். இந்திய அரசாங்கத்தால், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக “ அறிவிக்கப்பட்ட இந்த அமைப்பு, பரதநாட்டியம் மற்றும் கந்தர்வவேத இசையின் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரைக்கு அருகே 99  ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள கலாக்ஷேத்திரா,  மாலைப்பொழுதுகளைக்  கழிக்க ஏற்றதொரு இடமாகும். இங்கு நடத்தப்படும் கச்சேரிகளைப் பார்த்து நீங்கள் கண்டிப்பாக மெய்மறந்து விடுவீர்கள் !

3) குவீன்ஸ் லாந்து :

சரி, இதுவரை, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட இரண்டு இடங்கள் குறித்துப் பார்த்து விட்டோம்.  தற்போது , விறுவிறுப்பான ஒன்றைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னையில் குவீன்ஸ்லாந்து என்ற பெயரில்  சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஒரு பொழுதுபோக்குப் பூங்கா இருக்கிறது. பெயர் சிறிது தொன்மையாக இருந்தாலும் , இந்த இடம் மிகப் பிரமாதமாக இருக்கும். சாகசப் பிரியர்களாக இருந்தால் மேலும் சந்தோஷம் தான். இங்கு எப்போதும் புதிது புதிதாகப் பல விளையட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

அதோடு, இந்தப் பூங்காவின் மையத்தில்  இருக்கும் பெரிய ஏரியில் படகுச் சவாரி செல்லலாம். ஆக மொத்தத்தில் , தனிமையை நாடினாலும் சரி, உற்சாகத்தை விரும்பினாலும் சரி , இந்த இடம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

4) கபாலீஸ்வரர் கோவில் :
தென்னிந்தியா கோவில்களுக்குப் பிரசித்திப் பெற்றது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; கோவில்கள் இல்லாத தெருவே இல்லை என்று  சொல்லும் அளவு இங்கு கோவில்கள் இருக்கும். இவ்வளவு கோவில்கள் இருந்தும், நான் கபாலீஸ்வரர் கோவிலைப் பார்த்து வரச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

8 ஆம் நூற்றாண்டில், பல்லவ மன்னர்களின்  காலத்தில் கட்டப்பட்ட இந்தத் திருத்தலம் திராவிடர்களின் கட்டடக் கலைக்கு மிகச் சிறப்பானதொரு சான்றாய் இருக்கிறது.  பிரகாரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தோட்டம், கண்ணுக்கு விருந்தாய் இருக்கிறது.  நான்கு திசைகளிலிருந்தும் இதமான காற்று வீசும் படி அமைக்கப் பெற்றிருக்கும் கோவிலின் அமைப்பு ஆச்சரியம் அளிக்கிறது.

கடவுளோடு இந்தக் கோவிலின் சூழலும் இணைந்து மனதுக்கு நிம்மதி தருகின்றது; கண்டிப்பாக எல்லோரும் இந்தக் கோவிலின் அழகை ஒரு முறையாவது அனுபவித்திட வேண்டும்.

(பின்குறிப்பு : இக்கோவில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும். )

5) திரையரங்கில் ஒரு தமிழ்ப்படம் :

சென்னையைப் பற்றிப் பேசினால், தமிழ்த் திரைப்படங்கள் பற்றிப் பேசாமல் எப்படி இருக்க முடியும்? இங்கு சென்னையில் , பெரும்பாலான வீடுகளின்  சுவர்களில் படங்களின் சுவரொட்டிகளைப் பார்க்க இயலும்.

தமிழ்ப் படங்களில் காணக்கிடைக்கும் தத்ரூபமான சண்டைக் காட்சிகளும், ரம்மியமான நடனக் காட்சிகளும் , மசாலாக் கதைகளும்  அவற்றைத் தனித்துக் காட்டுகின்றன. சென்னையின் எண்ணற்ற திரையரங்குகளுள் ஏதேனும் ஒன்றிலாவது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தவற விடக் கூடாது.

6) புனித தோமையார் மலை :

நீங்கள் உங்கள் அன்பிற்குரியவர்களோடு சென்னையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற விரும்பினால், புனித தோமையார் மலைக்கு வாருங்கள். சென்னையின் கிண்டியில் உள்ள தேசியப் பூங்காவுக்கு அருகே இருக்கும் இந்தக் குன்றின் உச்சியிலிருந்து, சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளின் அற்புதமான காட்சிகளைக் காண முடியும். பௌர்ணமியின் போதோ அல்லது தீபாவளியின் போதோ அவரை அழைத்து வந்தால் இங்கிருந்து காணக் கிடைக்கும் காட்சிகள் உங்களை நிச்சயம் பிரம்மிப்பூட்டும்.

புனித தோமையார் மலையின் உச்சியில் இருக்கும் , மேரி மாதாவின் திருயுருவச் சிலையும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

7) மெரினா கடற்கரை :

கடந்த சில நூற்றாண்டுகளாக, சென்னையின் அடையாளமாக மெரினா கடற்கரை இருந்து வருகிறது. சென்னையின் மையத்தில் , வங்காள விரிகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் ஒட்டி இருக்கும் மெரினா தான் இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை . மெரினா கடற்கை பிரபலமாகத் துவங்கியவுடன் , கரையோரம் எண்ணற்ற கடைகள் திறக்கப்பட்டன . சுண்டல், ஐஸ்கிரீம் , நொருக்குத் தீனிகள் என விதவிதமான தின்பண்டங்களைச் சாப்பிட இயலும்; விளையாட்டுக்களும் கேளிக்கைகளும் ஏராளம். சென்னையில் நீங்கள் தங்கியிருக்கும் நேரத்தில், ஒரு மாலைப் பொழுதிலாவது இங்கு , திரை கடலைப் பார்த்தவாறு முகத்தில் இதமான கடற்காற்று வீச , நடந்திட வேண்டும் என வேண்டுகிறேன்.DiscussionsTY News