இந்த ஆராய்ச்சியின் படி, ‘நச்சு நகரம்’ தில்லியில் , உங்கள் தாடி உங்களைக் காப்பாற்றிடலாம்

4:42 pm 13 Nov, 2016

தில்லியில் காற்றில் உள்ள நச்சு அளவுகள் அபாயகர அளவுகளை எட்டியிருப்பதும் , ஆண்கள் நோ-ஷேவ் நவம்பர் மரபைப் பின்பற்றுவதற்கு ஒரு காரணமாகி விட்டது என்றால் சற்று விசித்திரமாக உள்ளதல்லவா?

ஆமாம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள்! ஒரு ஆராய்ச்சியின் படி, விக்டோரியா காலத்தின் நடுவில், பல மருத்துவர்கள் , தாடிகளை இயற்கையான காற்று வடிகட்டிகளாகக் கருதத் தொடங்கினர்; தொண்டைக்  கரகரப்பு போன்ற தொற்று நோய்கள் வராமல் அவைத் தடுப்பதாக அவர்கள் நம்பியதால் தங்களை அணுகிய ஆண்மகன்களைப் பெரிய தாடிகளை வளர்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தினர்.

1700 ஆம் ஆண்டில் சவரம் செய்யப் பயன்படும் ரேஸர் கண்டுபிடிக்கப்பட்டது; அதிலிருந்து விக்டோரியா காலத்தின் நடுப்பகுதி வரை சவரம் செய்யும் பழக்கம் ஆண்களிடையே பிரபலமாகியிருந்தது. ஆனால், மருத்துவரகளின் இந்தப் புது அறிவுரை அதை முற்றிலும் மாற்றத் தொடங்கியது.
மேலும், அக்காலம் ஆய்வின் பொற்காலமாக இருந்தது;  ஆய்வாளர்களும் வேட்டைக்காரர்களும் ஆராயச்சியாளர்களும் உலகைச் சுற்றி வந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுள் பெரும்பாலானோர் தாடி வைத்திருந்ததால் , ஆண்களிடையே அதுவே மரபாகி விட்டது.

தற்போது, எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றுவது போல , ஏற்கனவே நச்சுக்கற்றுக்குப் பேர் போன  தில்லியில் ,  தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் , நிலையை மேலும் மோசமாக்கி உள்ளன.

இதையெல்லாம் பார்க்கும் போது, தாடி வளர்க்க இதை விட சிறந்த நேரம் இருக்க முடியாது போலும் .

 DiscussionsLatest News