பெரிய தரவைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய 7 செய்திகள்

3:58 pm 2 Jul, 2016

நீங்கள், ‘ பெரிய தரவு’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு அதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? இன்றைய  காலத்தில் எங்கும் கொட்டிக் கிடக்கும் புள்ளி விவரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து எப்படி பல நிறுவனங்களும் தங்கள் தொழிலில் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்கின்றன என ஆராய்வதே பெரியதரவு . சுருக்கமாகச் சொன்னால் , இருக்கும் எல்லாத் புள்ளி விவரங்களையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதே பெரியதரவு. இந்தச் சிந்தனை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதால் பலரும் இதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.  அதைப் பற்றி அறிய விரும்பவோர் கீழ்வரும் தொகுப்பைப் படித்துப் பயன் பெறலாம்.

7.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடைய ஈடுபாட்டை வளர்க்க வேண்டும்

முன்பெலாம், தகவல் வைத்திருந்தது முக்கியமாகக் கருதப்பட்டது ; இப்பொழுதோ, “அந்தத் தகவல்களால் தங்களின் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் ஈடுபடுத்தலாம் ? ” என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தம் சாதனைகளைப் புள்ளியிட்டுக் காட்டுவதை விட புள்ளிகளால் சாதனைப் படைப்பதை நோக்கிச் செல்கிறது உலகம். சேகரித்த புள்ளி விவரங்களில் ‘அவற்றுள் ஒரு பாங்கு அல்லது முறை உள்ளதா? அதாவது அவை வியாபாரத்தை வளர்க்க ஏதாவது ஒரு குறிப்பை அல்லது துப்பைத் தருகின்றனவா?’  என்பதை அறியலாம். இந்த பகுப்பாய்வால் எது  மக்களால் முக்கியம் எனக் கருதப்படுகிறது என்பது வெளிப்படும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் பொருட்களையோ அளிக்கும் சேவைகளையோ தகுந்த முறையில்  எடுத்து சொல்லலாம் அல்லது விளம்பரம் செய்யலாம்.

7.-Engaging-its-Audience

 

6.நுகர்வோர்களை அல்லது வாடிக்கையாளர்களை மையப்படுத்தியது

பெரியதரவில் கிட்டத்தட்ட 66 விழுக்காடுகள் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டது எனலாம் ; எனவே, அதை இலேசாக மதிக்கக் கூடாது. அவர்கள் பதிவேற்றம் செய்யாமல் ஒரு தகவலும் இருக்காது . இதற்கு உதாரணமாக, பிளிப்கார்ட்டின் மதிப்பாய்வு முறையைக் கூறலாம். நுகர்வோர்களுக்கு பொருள்களைப் பற்றியோ அல்லது விற்பனையாளர்களைப் பற்றியோ கருத்து தெரிவிக்க ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதால் நிறுவனங்களால் பல முக்கியத் தகவல்களைத் திரட்டி  ஆய்வு செய்ய முடிகிறது. எனவே , ‘வாடிக்கையாளர்களுடைய விருப்பு-வெறுப்பு’ என்பதின் தொகுப்பே பெரியதரவு எனலாம்.

6.-Consumer-Driven

 

5.’கிளவுடு ப்ராஸஸிங்’ (cloud processing) செயல்முறைக்குள்ளாக்குவது

செயல்முறைப்படுத்த பெரிய அளவிலான தகவல்கள் ( நாள்தோறும் 4.5 TB ) இருப்பதால் ‘சர்வர் ‘ போன்ற கருவி அவசியமாகிறது.   இதற்குக் ‘கிளவுடை’ (cloud)  ஒரு தளமாக பயன்படுத்துவதே சரியானத் தீர்வாக அமையும்.  நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் புள்ளி விவரங்களை சேகரித்து வைக்காமல், இன்டர்நெட் மூலம் பிற கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைத்து தேவையான போது பயண படுத்துவதே ‘கிளவுடு ப்ராஸஸிங்’ (cloud processing) எனப்படுகிறது. எந்த ஒரு செய்தியையும் பதிவேற்ற, பதிவிறக்க, சேமிக்க, செயல்முறைக்குள்ளாக்க, பரிமாற உதவும் ஒரு வெளிசேமிப்புக் கருவியாகக் கிளவுட் செயல்படும். இன்றளவில் , 25 விழுக்காடுகளான தகவல்கள் கிளவுடில் உள்ளன ; விரைவில் இது 40 விழுக்காடாக உயருமாம். இதனால், பெரியதரவின் போக்கு ‘கிளவுடை’ நோக்கி உள்ளது எனலாம்.

5.-Cloud-Processing

 

4. அளவற்ற ஆற்றல்

மொத்தமுள்ள தகவல்களில் வெறும் 5 விழுக்காடுகளான தகவல்களே ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வளவு நிறுவனங்கள் இருந்தும் கிட்டத்தட்ட 95 விழுக்காடுகளான தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலிருப்பது , பெரியதரவு இன்னும் ஒரு புதிய துறையாக இருப்பதையும், கூகுள் போன்ற நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் ஒன்றாகவும் இருப்பதையும்தான்  காட்டுகிறது.  புதிதாக தொழில் முனைவோர்களுக்கு இத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
4.-Unlimited-Potential

 

3.வேகமே தாரக மந்திரம்

NoSQL தான் பெரியதரவுக்கான சாவி.  NoSQL புள்ளி விவரங்களை சேமிக்கும் மற்றும் அதனை மீட்டெடுக்கும் முறையில் திருத்தம் செய்ய உதவும் ஒரு வழிமுறை.  இதனால், இயக்கங்கள் வேகமாகின்றன.மேலும், NoSQL ஐப் பயன்படுத்துவோர்க்கு தாங்கள் குறியிடும் வேகத்தைக் கூட்டவும் , பயன்பாடுகளையும் அவற்றின் பன்முறைச் செயல்களை உருவாக்கவும் வசதிகள் உள்ளதால் , மொத்த வளர்ச்சிக்கான சுழற்சி நேரத்தைக் குறைக்க முடிகிறது. NoSQL பலரால் பயன்படுத்தப்பட இத்தன்மைகளே காரணம்.

3.-Speed-is-Always-the-Key

 

2.இயக்கத்தின் மொத்த செலவு குறையும்

தகவல்களை எளிமையாகச் செயல்முறைப்படுத்துவதும் , அவற்றைச் சேமிக்கவும் திருத்தவும் மீட்கவும் கிளவுடைப் பயன்படுத்துவதும்  இயக்கத்தின் மொத்த செலவைக் குறைக்க முக்கியமாகின்றன. பயன்பாடுகளை உருவாக்கிப் பயன்படுத்த எடுக்கப்படும் நேரம் இயக்கத்துக்காகச் செலவிடப்படும் மொத்த செலவுகளைப் பாதிக்கும். முதலில் கிளவுட்,  விலை உயர்வாகத் தோன்றினாலும் , காலப்போக்கில் பயன்பாடுகளின் நிர்வாகத்தையும் பயன்படுத்துதலையும் எளிதாக்கிச் செலவுகளைக் குறைக்கும். தனியான சர்வரைப் பயன்படுத்தினால் தகவல்களை எளிதாக சேமிக்கவும் மீட்கவும் முடியம்.

2.-Reducing-the-Total-Cost-of-Operation-TCO

 

1.இணையதளமும் ஸ்மார்ட்போன்களும்

இன்று உருவாகும் தகவல்களுள் 25 விழுக்காடுகளுக்கு மேல் இணையதளம், கைப்பேசி மற்றும் அது தொடர்பான தளங்களில் தான் (pad, tablet, smartcard, laptop)  உருவாகின்றன. சுயமாய்த் தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் “ஸ்மார்ட் வீடுகள்/ உபகரணங்களுக்கு” முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட் பிரிட்ஜ்,  பால் இல்லை என்று (நீங்கள் எங்காவது வெளியே சென்றிருந்தால் கூட) உங்களுக்கு அறிவுறுத்தும் திறனுள்ளது. இது,  பிரிட்ஜ்-ஐ பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கியமான தகவலாகும்.  வருங்காலத்தில், புள்ளி விவரங்கள்  ஸ்மார்ட் உபகரணங்களால் தான் கொடுக்கப்படும். எனவே, இன்றைய நவநாகரீக உலகில் இவற்றை பகுப்பாய்வு செய்யது முக்கியமாகிறது.

1.-Smartphones-and-The-Internet-of-Things

 DiscussionsTY News