இந்தியாவின் மிக அழகான 7 இரயில் பாதைகள்

Updated on 19 Jan, 2018 at 2:19 pm

Advertisement

வருடந்தோறும் கிட்டத்தட்ட 900 கோடி பயணிகளை, பன்முகப்பட்ட நிலப்பரப்புகளின் வழியே 71,000  மைல்களுக்கு மேல் நீளமுள்ள இரயில் தடங்களில் சுமந்து செல்லும் இந்திய இரயில்வே, ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்றே கூறலாம்.

‘சிக் புக் சிக் புக்’ என்ற இரயிலின் ஒசைக்கும், ஓடும் இரயிலின் ஜன்னலின் வழியே காணும் அழகான நிலப்பரப்புகளின்  காட்சிகளுக்கும் ஈடுஇணையே இல்லை. இரயில் பயணம்,  அதுவும் கீழ்க்கண்ட பட்டியலில் இடம் பெறும் மிக அழகிய இரயில் பாதைகள் வழியே சென்றால், அந்த அனுபவமே ஒரு தனி சுகம் தான்.

7. ஹூப்லி – மட்கா(ன்)வ் – வாஸ்கோடாகாமா இரயில் பாதை

மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகே ஒருவரை கொள்ளை கொண்டுவிடும். அதோடு , பாற்கடல் என்று பொருள்படும் “தூத் – சாகர்”  நீர்வீழ்ச்சியின் அழகும் சேர்ந்தால் ,  அக்காட்சியை விவரிக்கவே முடியாது! அப்படிப்பட்ட காட்சியை வழங்குவதாலேயே இப்பாதை இந்தியாவின் அழகான இரயில் பாதைகளில் ஒன்றாகிறது. சுமார் 310 மீட்டர் உயரத்திலிருந்து விழும் ‘பால் வண்ண  நீர்’ முதலில் பல சிறு நீரோடைகளாகத் தென்படும; அருகில் வர வர,  இந்த நான்முக நீர்வீழ்ச்சியின் அழகு காண்போரை பிரமிக்க வைக்கும். இந்த நீர்வீழ்ச்சியை காண விரும்புவோர் , அருகிலுள்ள லோந்தா சந்திப்பு இரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.

madgaon-train-route

 

6. ஜெய்ப்பூர் – ஜெய்சால்மர் இரயில் பாதை

இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு நேர் மாறான காட்சிகளை  ,  இந்த இரயிலில் பயணம் செய்யும் போது  ஒருவர் காணலாம். எட்டுத்திக்கும் கண்ணுக்கு எட்டிய மட்டும்  பரந்து விரிந்துள்ள மணல் குன்றுகளுக்கு மத்தியில் காணப்படும் ஒட்டகக்கூட்டங்கள், கொதிக்கும் பாலை நிலம், ஆயர்குடிகள், செங்கற்களால் கட்டப்பட்ட குடிசை வீடுகள், எளிமையான வாழ்விடங்கள் போன்றவை யாவும் ராஜஸ்தானின் அழகான கிராமப்புற வாழ்வைச் சித்தரிக்கின்றன.

Jaipur- Jaisalmer rail route

5. பாம்பன் – ராமேஸ்வரம் (கடல் பாலம்) இரயில் பாதை

இயற்கையின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், கடலிடையே  உறுதியாய் நிற்கும் பாம்பன் – ராமேஸ்வரம் கடல் பால இரயில் பாதை, இந்திய இரயில்வே துறையின் திறனுக்குச் சான்றாகிக இருக்கிறது.  இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்பாலமாய் விளங்கும் இந்த இரயில் பாதை,  1965-ல் ஏற்பட்ட சுனாமியில் ஒரு இரயிலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டு, பின்பு  சீர்மைக்கப்பட்டது. 143 தூண்கள் சுமக்கும் 2 கிலோமீட்டர் நீளமான இப்பாலமே பாம்பனிலுள்ள ராமேஸ்வரத்திற்கும் இந்திய நிலப்பகுதிக்கும் இடையே இருக்கும் ஒரே போக்குவரத்து இணைப்பாகும். பாக் ஜலசந்தியில் பயணிக்கும் அனுபவம் ஒப்பில்லாதது!

Rameswaram seabridge

 

4. கொன்கன் இரயில் பாதை


Advertisement

கர்நாடகாவில் உள்ள தொக்கூருக்கும் மகாராஷ்டிராவில் உள்ள ரோஹாவுக்கும் இடையே இருக்கும் எழில்மிகு கொன்கன் கரையோரம் ஓடுவதாலே இப்பெயராம்; 91 சுரங்கங்களும் 2,000 பாலங்களும் நிறைந்த இப்பாதை மேற்கு தொடர்ச்சி மலைகளின் வழியே ஊர்ந்து செல்லுகையில் காணக்கூடிய பசுமையான காடுகளும் அழகான காட்சிகளும் பார்ப்போர் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Konkan Rail Route

 

3. கால்கா – சிம்லா இரயில் பாதை

இரயில் பயணம் செய்ய விரும்பும் எல்லோரின் விருப்பப்பட்டியலிலும் இருக்கும் பாதை தான், கல்கா – சிம்லா இரயில் பாதை. இமய மலைகளுக்கு இடையே செல்லும்  96 கிலோமீட்டர் நீளமான  இந்தக் குறுகிய இரயில் பாதை  , பயணிகளின் கண்களுக்கு விருந்தாய் அமையும் காட்சிகளை அளிக்கிறது. இதோடு 102 சுரங்கங்களும் 864 பாலங்களும், 48 டிகிரியில் ஙப்போல் வளையும் ஒரு வளைவும் அடங்கிய 919 வளைவுகளும்  இப்பாதையை மயிர்க்கூர்செரியும் இரயில் பாதையாக்குகின்றன.

Kalka-Shimla Rail Route

 

2. ஜம்மு -உதம்பூர் இரயில் பாதை

பனி பொழியும் மலைத்தொடர்கள் முதல் கொந்துழு விட்டெரியும் பாலைவனம் வரை , இயற்கையின் பல்வேறு தாக்கங்களை சமாளித்து செல்லும் இந்த இரயில் பாதை , கண்ணுக்கினிய பாதையாய் அமைகின்றது. சிவாலிக் மலைத்தொடரின் கீழே 53 கிலோமீட்டருக்கு நீண்டிருக்கும் இப்பாதையின் அழகு158 பாலங்களாலும் 20 சுரங்கங்களாலும் கூடுகிறது.

Jammu-Udhampur Rail Route

1. டார்ஜிலிங் இமய மலை இரயில் பாதை

‘பொம்மை இரயில்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த இரயில்  ஓடும் இரயில் பாதை 1881 இல் கட்டப்பட்டது. இது 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாய் அறிவிக்கப்பட்டது. உலகிலேயே இந்தப் பெருமை அப்போது, ஆஸ்திரியாவின் செம்மரிங் இரயிலுக்கு மட்டுமே இருந்தது. அற்புதமான காடுகள்,  தேயிலைத் தோட்டங்கள், சிற்றூர்கள், இமய மலை – இவற்றுக்கிடையில் ஓடும் இந்தப் பாதை இந்தியாவிலேயே தனிச்  சிறப்பு உள்ளதாகும்.  நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், கஞ்சஞ்சங்கா மலை உச்சியைக் கூட இரயில் சன்னலிலிருந்து காணும் வாய்ப்புண்டு!

Darjeeling - Himalaya Rail Route

 

Advertisement


  • Advertisement