ஐஐடி மெட்ராஸ் பற்றி வியப்பூட்டும் 7 தகவல்கள் 

Updated on 19 Jan, 2018 at 2:18 pm

Advertisement

‘ஐஐடி’ என்ற பெயரைக் கேட்டவுடன் பல எண்ணங்கள் தோன்றும் ; லட்சக்கணக்கானோரின் கனவாக உள்ள  ஐஐடியில் சேர எத்தனையோ பேர் தங்கள்  பள்ளிப்பருவத்தை புத்தகங்களோடு செலவழித்துள்ளனர்.  இன்றளவும் ஐஐடி மீதான மோகம் குறையவில்லை. எல்லா ஐஐடிக்களை விடவும் நம்ம சென்னையில் உள்ள ஐஐடிக்கு எப்போதும் தனி இடம் இருக்கும். அப்படி,  உங்களை வியக்கவைக்கும் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரி  ( ஐஐடி மெட்ராஸ்) பற்றிய 7 சுவையான தகவல்கள் :

7.அசத்தலான உணவு விடுதி

ஐஐடி மெட்ராஸில் உள்ள உணவு விடுதியில் சமைக்கும் சாப்பாடு அவ்வளவு நன்றாக உள்ளதா இல்லை அங்கு படிக்கும் மாணவர்களுக்குத் தென்னிந்திய உணவுகள் அவ்வளவு பிடிக்குமா என்று தெரியவில்லை. அமைப்பு வளாகத்தில் தங்கும் 8,000 மாணவர்களுள் 6,380 மாணவர்கள் தங்களின் காலையுணவை , தவறாமல் உணவு விடுதியில் தான் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் உள்ள  எந்தப் பல்கலைக்கழகத்திலோ கல்லூரியிலோ இவ்வளவு எண்ணிக்கையில் மாணவர்கள் தங்கள் உணவு விடுதியில் சாப்பிடுவதில்லை.

Iron-Stomachs

 

6.மிகவும் தகுதிபெற்ற ஆசிரியர்கள்

தங்கள் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக , அதிகமாக விருதளிக்கப்பட்ட ஆசிரியர்கள்  ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்தவர்கள் தான்; சிறந்த விளக்கங்கள், ஆய்வறிக்கைகள் , விருதுகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளனர்.ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான,  முனைவர் அனந்து அகர்வால்,  சிலிகான் செதில்கள் தயாரிப்பில் ஈடுபடாமல் குறைகடத்திகள்  வடிவமைப்பு (fabless semi-conductors design) பற்றிய ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களில்  உலகளவில் முன்னோடியாக உள்ளார்.  ‘சீடிஓ'(CTO) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். இத்துறையில் அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர், ‘ எம் ஐ டி'(MIT) யிலுள்ள கணினி அறிவியல் மற்றும் செயற்கையான நுண்ணறிவின் ஆய்வுக்கூடத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்; மேலும், அவருக்கு கணினி வடிவமைப்பில் ‘மாரிஸ் வில்க்ஸ்’ விருது வழங்கப்பட்டது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கேற்ப இவரைப் போல இந்நிறுவனத்தைச் சேர்ந்த பலரும் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.

Most-acclaimed-faculty

 

5.கை நிறைய சம்பளம்


Advertisement

ஐஐடிக்கள் எல்லாமே நிறைய சம்பளத்திற்குப் பேர் போனவை தான். எனினும், அவற்றுள் ஐஐடி மெட்ராஸ் மற்றவற்றை விட ஒரு படி மேலே உள்ளது.பல நிறுவனங்கள் வருடாந்திரம்  90 லட்சம் ரூபாய்க்கும் மேலான சம்பளத்தோடு மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. இதுவரை அதிக பட்சமாக 1.5 கோடி ரூபாய் சம்பளத்துடன் மாணவர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல், மின்னியல் பொறியியல், விண்வெளி பொறியியல் ஆகிய துறைகள் அதிகச் சம்பளத்தை ஈர்க்கின்றன.

 

4.உலகின் தலைசிறந்த 500 கல்லூரிகளுள் ஒன்று

உலகில் 1,00,000 பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில் , அவற்றுள் தலைசிறந்த 500 கல்லூரிகளில் ஒன்றாக பெயர் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால், 2013 -14 ஆம் கல்வி ஆண்டில் , உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் 313 ஆவது இடத்தைப் பெற்றது;  குடிமுறைப் பொறியியல் துறை (சிவில்) மற்றும் சேவைகள் துறை 49 ஆவது இடத்தையும், கணினிப் பொறியியல் துறை 110 ஆவது இடத்தையும் பிடித்தன.

3.இந்தியாவின் அதிவேக ‘ சூப்பர் கணினி’யைப் பெற்றது

‘ டாப் 500 ‘ என்ற ஒரு சர்வதேச திட்டம்,  மிகவும் சக்திவாய்ந்த ‘சூப்பர் கணினிகளை’ ப் பற்றி ஆராய்ச்சி செய்ய உருவாக்கப்பட்டது. அத்திட்டம் , “ஐஐடி மெட்ராஸில் உள்ள சூப்பர் கணினி , இந்தியாவிலேயே வேகமானது ; சொல்லப் போனால் , உலகிலேயே அது 224 ஆவது வேகமான சூப்பர்  கணினி ஆகும். மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள கணினிகளாலான இந்த ‘ சூப்பர் கணினி’ 36 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்படுகிறது.” என்ற செய்தியை வெளியிட்டதன் மூலம் இந்நிறுவனத்தின் சிறப்பு மேலும் உயர்ந்தது.

2.ஷாஸ்த்ரா

ஐஐடி மெட்ராஸின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா தான், ஷாஸ்த்ரா. உலகிலேயே ஐஎஸ்ஓ 9001:2000 தரச்சான்றிதழைப் பெற்ற ஒரே மாணவர் விழா இது தான். மேதாவிகளின் சொர்க்கமாகக் கருதப்படும் இத்திருவிழாவில் பங்கேற்க பல நகரங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வருவர். இப்படிப்பட்ட அமைப்பிலிருந்து தேர்ச்சி பெறும் பலரும் அவரவர் துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணத்திற்கு, ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான கிருஷ் கோபாலகிருஷ்ணன், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவராகவும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1.மேற்கு ஜெர்மனியால் நிறுவப்பட்டது

1959 ஆம் ஆண்டில் , பொதுமக்களுக்கு உயர்கல்வி கற்பிக்கவும் ,ஆராய்ச்சிக்கு உலகத்தரம் வாய்ந்த  வசதிகளைச் செய்துத் தரவும் , அப்போதைய மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் இந்தியாவின் மூன்றாவது ஐஐடி ஆக உருவெடுத்தது, ஐஐடி மெட்ராஸ். அன்று மேற்கு ஜெர்மன் அரசு சென்னையை அதன் வளர்ச்சித் திட்டத்தில் ஒரு அங்கமாய்க் கருதியதால் தான், இன்றளவும் ஜெர்மனி முன்னோடியாக உள்ள , வாகனங்கள் துறையில் சென்னையும் சிறப்பாக செயல்படுகிறது; சொல்லப்போனால் இந்தியாவில் தயாராகும்  வாகனங்களுள்  40 விழுக்காடுகளுக்கும் மேலான வாகனங்கள் சென்னையில் தான் தயாராகின்றன.

 

Advertisement