காதலைப் பற்றி வியத்தகு விஷயங்கள் 15

5:19 pm 30 Jun, 2016

நிறைய பேர், காதலை ஈர்ப்போடும் காமத்தோடும் ஒப்பிட்டு அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் ; நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்கும் வரை,  காதலின் தூய்மையையும் முழுமைமையும் உணர மாட்டீர்கள். நீங்கள் இன்னும், உங்கள் அன்புக்குரியவரைச் சந்திக்கவில்லை எனில் வருத்தப்படாதீர்கள். அதைப் பற்றி உணர வேண்டிய  விஷயங்களை அறிய காத்திருக்க வேண்டியதில்லை. நாடெங்கும், ஏன்  உலகெங்கும் கூட அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான் என்பதை படம் பிடித்துக் காட்டும் இந்தக் கட்டுரையைப்  படியுங்கள்.

1.மோகம், காதலின் ஒரு பகுதி தான்

காதல் அளிக்கும் சுகத்திற்கும் நிம்மதிக்கும் முன்னால் காமம் அளிக்கும் பரவசம் ஒன்றுமே இல்லை!

Love-and-sex

2. காலத்தோடு சேர்ந்து காதலும் வளரும்

காலம் செல்லச்செல்ல , காதல் காதலிப்போரின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிடும் ; “அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்? ” என்று சும்மாவா சொன்னார்கள்?

True-love

 

3. தன் தனித்தன்மையை மறப்பது காதலன்று

இருமனங்கள் சங்கமிப்பது தான் காதல் . காதலிப்பதால் ஒருவர் தன் தனித்தன்மையை முற்றிலும் இழக்க நேரிட்டால் அது உண்மையான காதலன்று.

One-own-self[1]

 

4. நீங்கள் காதலில் விழ பிழையில்லாத ஓவியம் போன்ற தோற்றமோ பிசிறில்லாத காரணமோ வேண்டியதில்லை

இந்த  உலக உண்மையை உணர்த்துவதில் தான் பாலிவுட்டின் ,” தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே”  மற்ற திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.

Perfect-person[1]

 

5. உலகம் முழுவதும் அறியுமாறு பறைசாற்றினால்தான் காதலென்று இல்லை

நீங்கள் உங்களின் அன்பை உலகம் அறியும் வண்ணம் செய்தால்தான் அது காதலாகும் என்று ஒன்றுமில்லை.  பேஸ்புக்கில் உங்கள் ஈடுபாட்டையும் அன்பையும் வெளிப்படுத்தாமலே காதல் மலரும். காதலுக்கு அடிப்படை, ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான்.

PDA1[1]

 

6. உறவு நீடிக்க வேண்டி விட்டுக்கொடுக்க அவசியமில்லை

சில சமயங்களில்  அனுசரித்து செல்ல வேண்டியது  தேவை தான்;  எனினும், அதை இயற்கையாக, தொடர்ந்து செய்வார்கள் ; பெரிய அளவு வயது வித்தியாசம்  இருந்தால் கூட இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வர்.

Compromise[1]

 

7. தூரம் தடையாய் இருக்காது

நீங்கள் உண்மையாக காதலித்தால், நீங்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும்  அந்த ஊர்களுக்கிடையிலுள்ள தூரம்  வெறும் எண் ஒரு பொருட்டாகத் தெரியாது; சந்தேகங்களுக்குச் சற்றும் இடமிருக்காது.

Distance[1]

 

8. சாதி, மதம், தகுதி – எதுவும் கண்ணுக்குத் தெரியாது
உங்களின் அன்புக்குரியவர் மட்டுமே உங்களுக்குத் தெரிவார்.

untitled

 

9. காதலரே  தோழராகவும் அமைவார்

தினமும் உங்கள் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் உங்களின் மனம் கவர்ந்தவரிடம் தான் முதலில் பகிரத்தோன்றும். உங்கள் வாழ்வில் நடந்த எல்லா மறக்க முடியாத நினைவுகளையும் அவரிடம் சொல்லி மகிழ்வீர்கள்.

Best-friend

 

10. கேலி, கிண்டல் இல்லாமல் காதல் இல்லை

இயல்பாகவே எல்லைகளை மீறாமல் , ஒருவரை ஒருவர் வேடிக்கையாக கலாய்ப்பதும் காதலில் ஓர் அங்கம் தான்.

Teasing

 

11. நெஞ்சு வேகமாக அடிப்பது மட்டும் காதல் ஆகாது

கடினமாய் உழைத்த பிறகு , தம் அன்பிற்குரியவரின் தோளில் சாய்ந்து நிம்மதியாக ஓய்வு எடுப்பதும் காதல் தான்.

Increasing-hearbeat

 

12. நிகழ் காலம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உணர்வது

எதிர்காலத்தைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் , நடக்கும் நிகழ்வுகளில் மகிழ்ச்சியடைவது காதல்.  Safe-and-happy    

13.கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்

ஜேன் ஆஸ்டினைப் படித்தவருக்குத் தான் தெரியும் அவர் காதலைச் சித்தரிக்கும் விதம் எவ்வளவு உண்மையாக இருக்கும் என்று! இருவர் தங்களின் வேறுபாடுகளைத் தூசாக எண்ணி, சகிப்புத்தன்மையோடு வாழ்வது தான் காதல்.

Differences

 

14.வீட்டுக்கு வீடு வாசப்படி

வாழ்வில் சண்டைகள் வரும்; போகும். ஆனால் , சண்டை முடிந்தவுடன் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்வு தொடர்ந்திடுவதே , உண்மையான காதலுக்கு அடையாளம்.

Fights1

 

15. முழுமை பெற்றதாக உணர்வீர்கள்

தன் காதலரே தனக்கு நண்பராக, குடும்பமாக , அன்பிற்குரியவராக இருப்பதைத் கண்டு எல்லையற்ற ஆனந்தம் கொள்வீர்கள் .

Complete-and-happy

 

 DiscussionsLatest News