பிரமிக்க வைக்கும் எழில் வாய்ந்த தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 இடங்கள்

Updated on 19 Jan, 2018 at 2:19 pm

Advertisement

நினைத்துப் பாருங்கள்… நிசப்தமான கடற்கரைகள், கண்கவர் இயற்கைக்
காட்சிகள், எழில்மிகு கோவில்கள்,
வரலாற்று நினைவுச் சின்னங்கள், கலை, கலாச்சாரம், உணவு,
விருந்தோம்பல்… நினைத்துப் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது அல்லவா?
இவற்றை எல்லாம் காண வேண்டுமென்றால்  நீங்கள் பின்வரும் தென்னிந்தியாவின் சிறந்த சுற்றுலாதலங்களை அவசியம் பார்க்க வேண்டும்

1. கன்னியாகுமரி

இந்தியாவின் தெற்கு முனையான,  முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி இந்தியாவின் சிறந்த சுற்றுலாதலங்களில் ஒன்று. இங்கு சூரியன் உதித்து மறையும் அழகே அழகு தான்!

Kanyakumari[1]

2. கொடகு

இந்தியாவில் பேர் போன மலைவாசஸ் தலங்களில் ஒன்றான கொடகு மற்ற மலைவாசஸ்தலங்களைப் போன்று இல்லாதிருப்பதே தனிச்சிறப்பு ; உணவுகள், மக்கள், நீர்வீழ்ச்சிகள் , காடுகள், தேயிலைத் கோட்டங்கள், யானைப் பயிற்சி முகாம்கள், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் என கொடகில் எல்லாமே வித்தியாசமான அழகு தான்!


Advertisement

Coorg[1]

 

3. புதுச்சேரி

தவிர்க்க முடியாத இடங்களில் ஒன்று, புதுச்சேரி.  தேவாலயங்கள், கோவில்கள், கடற்கரைகள், பிரெஞ்ச் கால கட்டிடங்கள் எல்லாம் பெற்று நாட்டில் எங்கும் பார்க்க முடியாத சூழ்நிலை  இங்குள்ளது.

Pondichery[1]

4. குமரகம்

உலகம் சுற்றும் ஆர்வலர்களுக்கான சொர்க்கம் தான் , குமரகம்.  வேம்பநாடு ஏரிக்கரையில் இருக்கும் உப்பங்கழியில் படகுப் பயணம் அனுபவிக்க வேண்டிய ஒன்று.  இங்குள்ள படகுவீட்டில் ஒரே ஒரு நாளை நிம்மதியாக கழித்தால் கூடபோதும், புத்துயிர் பெற்று விடலாம்.

Kumarakom[1]

5. கோகர்ணம்

கடற்கரையில்,  நிம்மதியாக படுத்து களிக்க நீங்கள் விரும்பினால்  கோகர்ணத்தின் ஆள் அரவமற்ற கடற்கரைகளே உங்களுக்கு ஏற்ற இடம்!

Gokarna[1]

6. ஆலப்புழா

‘ கீழை நாடுகளின்  வெனிஸ் ‘ என  அழைக்கப்படும் ஆலப்புழா,  மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு சுற்றுலாத்தலம் ; கடற்கரைகள் , காயல்கள், வாய்க்கால்கள், உயரமான தென்னை மரங்கள், உப்பங்கழிக் கப்பல்கள்,எண்ணற்ற முந்திரித் தோட்டங்கள்  ஆலப்புழாவிற்கு ஒரு தனி சூழலைத் தருகின்றன.

Alleppey[1]

 

7. ஹம்பி

கர்நாடகாவில் உள்ள  நகரமான ஹம்பியில் இன்று சுமார் 400 வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களின் இடிபாடுகள் உள்ளன. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாகவும் சிறப்புப் பெற்றது. விடுமுறையைக் கொண்டாட சரியான இடம். மறக்காமல் விருப்பாக்ஷ  கோவிலை பார்த்து வாருங்கள்.

Hampi[1]

 8. ஊட்டி

சொர்க்கத்திற்கு நிகரான ஊட்டியை எத்தனை முறை அனுபவித்தாலும் அதன் சூழலில் மனதைத் தொலைக்காமல் இருக்க முடியாது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் கண்களை கவர்பவை . மலைகளில் நீண்ட தூர நடைபயணமும் (Trekking) மீன்பிடிக்கும் போட்டிகளும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Ooty[1]

9. கோவளம்

காலையில் எழுந்தது முதல் இயற்கையை ரசிப்பத்தைத் தவிர வேறெதுவும் செய்யாமலிருக்க ஏற்ற இடம்  என கோவளத்தைக் கூறலாம்.  பிறை வடிவத்திலுள்ள மூன்று கடற்கரைகளும் ஆயுர்வேத நிலையங்களும் கோவளத்தின்  புகழுக்கான காரணங்கள்.

Kovalam[1]

 

10. ஏற்காடு

தமிழ்நாட்டில் ஏற்காட்டிற்கு ‘ ஏழையின் ஊட்டி’ என்று பெயர்.

நீர்வீழ்ச்சிகள் , குகைகள், காப்பித் தோட்டங்கள், பட்டுத் தோட்டங்கள், வனவிலங்குப் பூங்கா, ஆங்கிலேயர் கால கட்டிடங்களின் இடிபாடுகள் என எங்கு பார்த்தாலும் அழகான காட்சிகளே ஏற்காட்டில் தென்படுகின்றன.

Yerkaud[1]

 

11. அந்தமான் நிக்கோபார் தீவுகள்

சாகச விளையாட்டுகளையும் நீர் விளையாட்டுகளையும் விரும்புவராக நீங்கள் இருந்தால் இது தான் உங்களுக்கு ஏற்ற இடம். அதுவும் நம்ப முடியாத அளவுக்கு குறைவான செலவில்!

Andaman-and-Nicobar-Island[1]

12. ராமேஸ்வரம்

இந்துக்களுக்கு மிக முக்கியமான புனிதத் தலமான ராமேஸ்வரம், சிவபெருமானின் நான்கு தலவீடுகளில் ஒன்றாகும். ராமநாதசாமி கோவில், அக்னிதீர்த்தம் , தனுஷ்கோடி கடற்கரை, ஆதம் பாலம், பாம்பன் பாலம், கந்தமந்தன பர்வதம் எனப் பல்வேறு சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியது ராமேஸ்வரம்.

Rameswaram[1]

 

 

 


Advertisement


  • Advertisement