பண்பாடு தவிர இந்திய பெற்றோர் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டிய 11 விஷயங்கள்

11:27 am 7 Jul, 2016

1.சிறுவர்களுடன் பழகும் பெரியவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்?

துரதிஷ்டவசமாக , நம் நாட்டில் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன ; குறிப்பாக, 90 விழுக்காட்டிற்கும் மேலான சமயங்களில் , குற்றவாளிகள் அந்தக் குழந்தையின் குடும்பத்தாராகவோ அல்லது சுற்றத்தாராகவோ தான் உள்ளனர்.

Child-abuses

 

2. உடலமைப்பு

குழந்தைகள் தங்களின் உடல்களைப் பற்றித் தவறான முறையில் அறிவதை விட பெற்றோர் எடுத்துரைத்தால் நன்மைகள் பல விளையும்.

Knowing-self

 

3. மாதவிடாய் பிரச்சனை

சொல்லப்போனால், பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பெண்களின் உடலமைப்பைப் பற்றியும் மாதவிடாயைப் பற்றியும் சரியான வகையில் கற்பித்தால் ,  அவர்கள் மூடநம்பிக்கைகளற்ற நலவாழ்வு வாழலாம்.

Menstrual-taboos

 

4. தற்காப்புக் கலை

இன்றைய சூழலில், தொழில்முறையாக திறன்களை வளர்த்துக் கொள்வதை விட சுயமாகவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்  திறன்களை வளர்த்துக் கொள்வது நன்று.

Martial-arts

 

5. பாதுகாப்பான உடலுறவு

இந்தியர்கள் அனைவரும் தன் குடும்பத்தின் மத்தியில் உடலுறவைப் பற்றிப் பேசத் தயங்குவர் ; ஆனால், இந்த நிலையை மாற்றி உடலுறவைப் பற்றிப் பக்குவமாக குழந்தைகளுக்கு எடு்த்துக் கூற வேண்டும்.

Save-sex

6. அவசரப்பட்டு மற்றவர்களை விமர்சிப்பவராக இருக்கக்கூடாது

பிறரிடம் பழகும் போது தன் எல்லைகளை அறிந்து நடக்க வேண்டும்.

Judgemental
 

7. முடிவெடுக்கும் சுதந்திரம்

தங்களுக்குப் பிடித்த துறையையும் தொழிலையும் வாழ்க்கைத் துணையையும் தேர்ந்தெடுக்கும்  சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

Freedom-of-choice

 

8. சமையல்

கல்யாணத்துக்கு மட்டுமல்லாமல் சுயமாக வாழவும் சமையல் தெரிந்திருக்க வேண்டும் ; எனவே, இருபாலரும் சமையலைக் கற்றல் அவசியம்.

12725942-young-casual-indian-man-cooking-in-kitchen-Stock-Photo

 

9. வாகனம் செலுத்துதல்

வாழத் தேவையான அடிப்படையான திறன்களுள் ஒன்று, வாகனம் செலுத்தும் திறன். அதையும் இருபாலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

47669823

 

10. பண மற்றும் வங்கி  விஷயங்களைப் பற்றிய அடிப்படையான அறிவு

கேட்க சலித்தாலும் , பணத்தை நிர்வாகம் செய்து வரவுக்குள் செலவிட்டு சேமிக்கும் கலை மிகவும் அவசியமானது.

Banking

 

11.கடைசியாக, தயவு செய்து ” ஊர் உலகம், சாதி சனம்” என்ன பேசும் ?  என யோசிக்காதீர்கள்

ஏனெனில், உலகம் எப்போதும் பேசிக்கொண்டே தான் இருக்கும்; அது தான் அதன் வேலை.

5_mug1

 

 DiscussionsTY News