சிறந்த பெற்றோராக விளங்க 10 வழிகள்

6:49 pm 2 Jul, 2016

பெற்றோரக, ஒரு குழந்தையை நல்லபடியாக வளர்த்து , சமூகத்துக்கு நன்மை பயக்கும் நபராக கொண்டு வருவது தான் உலகிலேயே கடினமான வேலை. ஆனால், பெற்றோர்களுக்கு அதை விடப் பெரிய சாதனை எதுவுமில்லை. குழந்தை வளர்ப்பது பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டாலும், தெளிவான பதில்கள் இன்றளவும் கிடைத்த பாடில்லை. ஒவ்வொரு குழந்தையின் தேவைகளும் வேறுபடவே, நிலையான ஆலோசனையாகச் சிலவற்றையே கூற இயலும். அவற்றுள் சில  கீழ்வருமாறு.

10. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அரவணைத்துச் செல்லுங்கள்

பலரும் , ஒரு குழந்தையின் வரவால் தங்களின் வாழ்வில் செய்ய வேண்டிய மாற்றங்களால் விரக்தி அடைகின்றனர். சிலர், தாங்கள் இழந்த தொழில் வாய்ப்புகளை நினைத்து வருந்துவர்.  கைக்குழந்தைகள் தூக்கத்தைக் கெடுக்கும் என்றால், ஓரிரு வயதானபின் அவர்கள் பின்னே ஓயாமல் ஓட வேண்டியிருக்கும்; “டீன்-ஏஜ்” என்றால் கேட்கவே வேண்டாம். வரப்போகும் மாற்றங்களுக்கு முன்னரே  தயாராவது ஒன்றே இதற்கான தீர்வாகும்.

Adapt-Peacefully-To-Changes-in-Life

 

9. உங்கள் குழந்தை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்

இதுவே , நல்ல பெற்றோர்க்கான முதல் அடையாளம். குழந்தைகளின் இயல்பான தன்மைகளை மாற்றி, தாம் விரும்பும் படி குழந்தைகளை நடத்த முயன்றால் எல்லாருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். உலகில் அனைவரும் ஏதோ ஒரு தனித்திறமையோடும் ஆற்றலோடும் தான் பிறக்கிறார்கள். அவற்றைக் கண்டுபடித்து வெளிக்கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

Accept-Your-Child-for-What-He-Is

 

8.அளவற்ற அன்பைத் தாருங்கள்

” அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் ? ” என்பது உண்மை தான். ஆகவே, குழந்தைகளிடம் எல்லையற்ற நேசத்தை செலுத்துங்கள். அன்பு செலுத்துவதால் எந்த ஒரு தீங்கும் நேராது ; அது தான் சரியும் கூட. நீங்கள் உங்கள் அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவற்றிற்குப் பதிலாக செல்லம் கொடுத்தால் தான் பிரச்சனைகள் வரும்.

Give-Loads-of-Love

 

7.குழந்தைகளுடன் அர்த்தமுள்ள வகையில் நேரத்தைக் கழியுங்கள்

உங்கள் குழந்தையுடன் , தொலைக்காட்சியைப் பார்க்கும் போதும் சாப்பிடும் போதும் வேலையைச் செய்யும் போதும் மட்டும் நேரத்தைக் கழித்தால், அதற்கு நீங்கள் குழந்தைதளுடன் நேரம் போக்குவதாக அர்த்தமில்லை. மனதளவிலும் உடலளவிலும் குழந்தைகளோடு நேரம் போக்குங்கள். இல்லத்தில் பல குழந்தைகள் இருந்தால் , எல்லாரிடமும் நேரம் கழிக்க முயலுங்கள்; யாரையும் தனிமையாக இருப்பதாக உணர விடாதீர்கள்.

Spend-Quality-Time-with-Your-Child

 

6.விதிமுறைகள் மீறுவதற்கல்ல

வீட்டில் குழந்தைகளுக்கு விதிகளிடுவதால் , குழந்தைகள் அவர்களை வெறுப்பர் எனப் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள் ; இது ஒரு தவறான எண்ணம். எளிமையான சில விதிகளிட்டுக் குழந்தைகளை அதன்படி நடக்க வைத்தால் , குழந்தைகள் தங்களின் பெற்றோர் தங்கள் மேல் அக்கறை எடுத்து நடப்பதாகத் தான் எண்ணுவர் என ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. ” பாவம் குழந்தை! இந்த முறை விட்டு விடுவோம் ” எனப் பெற்றோர்கள், குழந்தைகள் இட்ட விதிகளை ஒரு முறை கூட மீற விடக் கூடாது.

Rules-are-Not-Meant-To-Be-Broken

 

5.குழந்தைகளுடனான தொடர்பு கொள்ளும் முறைகளை மெருகேற்றுங்களே


நீங்கள் சொல்ல விரும்புவதைச் தெளிவாகச் சொன்னால் குழந்தைகளுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். சுற்றி வளைத்துப் பேசுவது, ஜாடை மாடையாக பேசுவது போன்றவை எல்லாம் குழந்தைகளிடம் வேலைக்கு  ஆகாது. உங்கள் குழந்தை சொல்லும் விஷயங்களைப் பொறுமையாக கவனித்து, அதற்கேற்ப உங்கள் மறுமொழியையும் பதில்களையும் கொடுத்தால் நல்லது. குழந்தைகள்  தங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனி்க்கும் பண்பு கொண்டவர்கள். எனவே, அவர்களின் முன்பாக எப்படி நடக்க வேண்டும் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

Improve-Your-Communication-Skill

 

4.குழந்தையின் வாழ்வில் பங்கு கொள்ளுங்கள்

உங்கள் குழந்தையின் படிப்பு மற்றும் சாதனைகளில் மட்டுமில்லாமல் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ள பொழுதுபோக்குகளிலும் நண்பர்களிலும் பங்கு கொள்ளுங்கள்.உங்களுக்கு ஆர்வமில்லாத இசையிலோ புத்தகத்திலோ அவர்கள் ஆர்வம் காட்டினால் , அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து ஊக்கமளியுங்கள்.  இல்லாவிடின் அவர்களின் மனதில் அது கிளர்ச்சியை உருவாக்கும். அவர்கள் நண்பர்கள், விருப்பங்கள் இவற்றை தவறாக விமர்சிக்காதீர்கள்.

Be-Part-of-Your-Child’s-Life

 

3.பொறுமையாக யோசித்துப் பதில் அளியுங்கள்

பாசமிகு பெற்றோர்களும் தம் குழந்தைகள் தவறு செய்யும் போது, யோசிக்காமல் திட்டிவிடுகிறார்கள். இதன் விளைவாக, தண்டனைக்குப் பயந்து அவர்கள் பொய் சொல்லவும் ஏமாற்றவும் துவங்குவார்கள்.  எனவே , குழந்தைகள் தவறு செய்யும் போது நிதானமாக அவர்களுக்கு அந்தத் தவறின் விளைவுகளை எடுத்துக் கூறினால் நன்மைகள் பல விளையும்.

Be-Patient-and-Check-Your-Response

 

2.மன்னிப்புக் கோர தயங்காதீர்கள்

நீங்கள் குழந்தைகளின் பெற்றோராக இருப்பதனாலும் பல வருட வாழ்க்கை அனுபவம் பெற்றிருப்பதாலும் தவறு செய்யாமல் இருப்பீர்கள் என்றில்லை. அவ்வாறு குழந்தைகளுக்கு முன்னால் தவறு செய்யும் போது ஏதாவது காரணங்கள் கூறி மழுப்பாதீர்கள் ; மன்னிப்புக் கோர தயங்காதீர்கள். ஏனெனில்,  உங்களின் செயல்கள் தான் குழந்தைகளுக்கு உலகத்தை விளக்கும்.நல்லது செய்யுங்கள் ; அவர்களும் அதையே பின்பற்றுவர்.

Say-Sorry-and-Admit-When-You-Are-Wrong

 

1.குழந்தைகளுக்கு மதிப்பளித்து அவர்களை நம்புங்கள்

குழந்தைகளின் உலகமே பெற்றோர்கள் தான் ; அப்படிப்பட்டவர்கள் , தங்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கும் போதும் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் முன் தங்களின் கருத்துகளைக் கேட்கும் போதும் அவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்களாக உணர்கின்றனர்.கவனத்தோடு பெற்றோர்கள் அளிக்கும் இந்த  மதிப்பும் நம்பிக்கையும் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிடும்.

Trust-and-Respect-Your-Child

 

 

 

DiscussionsTY News