இந்த 10 தொழில்கள் உங்களை மார்க் ஜக்கர்பர்க் போல் கோடீஸ்வரனாக்கும்

1:36 pm 18 Jun, 2016


இன்றைய உலகில் பேஸ்புக் (Facebook) பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம்.  பேஸ்புக் அதிபர் மார்க் ஜக்கர்பர்க்  சமீப காலமாக  உலகின்  கோடீஸ்வரர்களுள் முன்மாதிரியாக கருதப்படுகிறார்; இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவர் உலகின் முதல் இருபது பணக்காரர்களின் பட்டியலில் கூட இடம்பிடிக்கவில்லை; இருப்பினும் முன்மாதிரியாக கருதப்படுகிறார் என்றால், அவர்  பணக்காரர்  என்பதை விட , பணக்காரரான விதமும், வேகமும் தான் காரணமாக இருக்க வேண்டும். இச்செய்தியை  அஸ்திவாரமாகக் கொண்டு ,  ஒரு தனிமனிதன்  கோடீஸ்வரனாவதற்கு  (இலட்சாதிபதி என்பதெல்லாம் ஹைதர் காலப் பழசு!) வழிசெய்யும் உலகின் மிக சிறந்த (Top ten) பத்துத் தொழில்களைக் காண்போம் :

1. வலைப்பதிவு செய்தல் (Blogging)

இது போன்ற செய்தியை நீங்கள் படித்தால், எழுதுபவருக்கு ஐந்து டாலர் (முன்னூறு  ரூபாய்க்கு மேல்) கிடைக்கலாம். இன்று,  இணையதளத்துக்கு எழுதுவது இலாபகரமான தொழிலாகி விட்டது. ‘ Tech crunch’-ன் நிறுவரும் இணை ஆசிரியருமான மைக்கல் ஆரிங்டன் மாதந்தோறும் 1.35  கோடி ரூபாய் சம்பாதிக்கிறாராம் ; ‘mashable.com’ என்ற தளத்தைச் சேர்ந்த பீட் கேஷ்மோர் மாதாமாதம் 1.20 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் ;இது போன்ற பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. ஒருவர், லட்சங்களில் சம்பாதிக்கும் போது, சரியான முறையில் முதலீடு செய்தால் விரைவில் கோடீஸ்வரராகலாம்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : வலைப்பதிவு மட்டும் செய்தால் , கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆகும் ; பணத்தை ஒழுங்காக முதலீடு செய்தால் 150 ஆண்டுகள் போதும்!

blogging

 

2. ‘மாடலிங்’ (விளம்பரங்களில் நடிப்பு)

மாடலிங் தான் இருக்கும் எல்லாத் தொழில்களுள் கவர்ச்சியானதாகும். உலகில் மாடலிங் தொழிலில் மட்டும் அதிகமாக சம்பாதித்தவர் , ஜிசல் பண்ட்சென் என்பவராவார் ; அவரது  நிகர மதிப்பு  சுமார் 1500 கோடி ரூபாயாம்! மற்றொரு மாடலான கேத்தி ஐயர்லாந்தின் நிகர மதிப்போ  (துணி வியாபாரத்தில் சம்பாதித்த கணிசமான தொகையும் இதில் அடக்கம் என்றாலும்) மலைக்க  வைக்கும் 2,௦௦௦ கோடி ரூபாய் !!

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : 2 வருடம் மட்டுமே! காரணம், மாடல்கள் ஒரு இலட்சம் சம்பாதித்தால் போதும்; பாக்கி 99 இலட்சங்கள்? அதுதான் அவர்களை மணந்துகொள்ளும் கோடீஸ்வரர்கள் கொடுக்கப் போகிறார்களே !!

Tamil actress

 

3.விளையாட்டு

உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கெனத் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் விளையாட்டை மட்டும் மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் , அவர்கள் விளம்பரங்கள் முலம் பரிந்துரைக்கும் சோப்பு முதல் சீப்பு வரை நாம் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். வருடந்தோறும் விளம்பரங்களுள் நடித்தே 350 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ‘ கோல்ப்’ வீரர் டைகர் வுட்ஸின் நிகர மதிப்பு 3,300 கோடி ரூபாய் !!  அவர் வரியாய்ச் செலுத்திய தொகையே பல கோடிகளை எட்டும்.  டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ( 1000 கோடி நிகர மதிப்பு), மைக்கல் ஜார்டன்   ( 4000 கோடி நிகர மதிப்பு) , மைக்கல் ஷூமேச்சர் ( 2,700 கோடி நிகர மதிப்பு) போன்ற விளையாட்டு வீரர்கள் கோடிகளில் புரள்கிறார்கள். கோல்ப், கூடைப்பந்து, கால்பந்து, அமெரிக்கக் கால்பந்து, பேஸ்பால் முதலிய விளையாட்டுகளில் சிறந்தால் சீக்கிரமாக காசு சம்பாதித்து விடலாம்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : சரியான விளையாட்டை தேர்ந்தெடுத்து , தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.

IPL-Indiagames-Cricket-T20Fever-Lite_2_programView

 

4. நடிப்பு

‘நடிகர்’ என்ற அந்தஸ்தோடு பல சலுகைகளும் சேர்ந்து வரும் – புகழ், ரசிகர்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த சுதந்திரம். அதோடு பணமும் சேர்ந்து வரும். நடிகர்கள், பணம் சம்பாதிக்க பணத்தைச் செலவு செய்யும் தன்மையுடையவர்கள். லிஸ் டெய்லர், ஜாக் நிகல்சன், டாம் ஹான்க்ஸ், மெல் கிப்சன் , கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆகியோர் ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் ஆவர். லிஸ் டெய்லரின் நிகர மதிப்பு 3,600 கோடி;  கிப்சன் மற்றும் நிக்கல்சன் ஆகியோரின் நிகர மதிப்பு 2,400 கோடி . பாலிவுட்டின் ஷாருக்கான் 3,600 கோடி மதிப்புடையவராம்; சல்மான் கான் 1,200 கோடி மதிப்புள்ள சொத்துகளின் அதிபதியாம். பிரான்சின் கெராட் டிபார்டியூவும் 1,200 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : நீங்கள் மகன் வேடத்தில் தொடங்கி தாத்தா வேடம் சூடும் வரை நடித்தால் 30 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

sivaji image 1

 

sivaji image 2

 

 

5. தொலைக்காட்சித் தொகுர்பாளர்

ஆங்கிலத்தில் தொலைக்காட்சியை ‘ முட்டாள்களின் டப்பா’ என்று வர்ணிப்பதுண்டு. என்ன தான் ‘ முட்டாள்களின் டப்பா’ என்று அழைத்தாலும் , அதை நாம் விட்டொழித்தாகவில்லை. பக்கத்து வீட்டிலுள்ள திறனற்ற இளைஞனைச் சைமன் கவுல் அவமானப்படுத்துவதும் , சினிமா நட்சத்திரங்களை டேவிட் லெட்டர்மன்  வார்த்தைகளாலே வதட்டி எடுப்பதும் யாருக்குத் தான் பிடிக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றால் , ஓப்ராவின் நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏற்றனவாய் அமையும். ஒரு பெரிய நிகழ்ச்சியைத் தனித்தன்மையோடு நடத்தி, பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் இருந்தால் நீங்களும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.  17,000  கோடி ரூபாய் நிகர மதிப்புடன் ஓப்ரா உலகின் பணக்கார ஆப்ரிக்க அமெரிக்க பிரபலங்களுள் முதல் இடத்தில் உள்ளார். அவரின் சீடரான, பில் மெக்ரா 1,200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார் ; சைமன் கவுல் 1,920 கோடியோடு அவரையும் முந்திவிட்டார்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : நீங்கள் பன்முகம் கொண்டவராக அல்லது தன்னை  ஒரு வரையறைக்குள் விளக்க முடியாதவராக அல்லது வெறும் ஓப்ராவாக இருந்தால் , சுமார் 8 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

Bhavana Tamil Tv Anchor 12

 

6. கண்டுபிடிப்பாளர்கள்

நீங்கள் எதைக் கண்டுபிடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ; அதற்குச் சரியாக காப்புரிமை பெற்றால் அதில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் முன் வருவர் ; நீங்களும் விரைவில் பணக்காரராக மாறிவிடலாம். கூகுள் பீனி பேபீஸைக் கண்டுபிடித்த வார்னருக்கு கிட்டதட்ட 27,000கோடி  கொடுத்கப்பட்டது எனப்படுகிறது.  ‘ரெட் புல் ‘ ஐ உருவாக்கிய சாலியோ யூவித்யா மற்றும் டெய்டிரிச் மாடெஸ்சிச் ஆகிய இருவருக்கும் 48,000 கோடி சன்மானமாக அளிக்கப்பட்டது. மாரியோ போல்காட்டோ என்பவர் , நாற்றம் வீசாமலிருக்க காலணிகளில் ஓட்டையிட்டு ஒரு வித்தியாசமான காலணியை வடிவமைத்து 17,000 கோடி ரூபாய் சம்பாதித்தார். எனவே, புதுமையான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் , நீங்கள் விரைவில் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புண்டு.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : சரியான கண்டுபிடிப்பாக இருந்தால் 3 முதல் 8 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

Inventor

 


7. மருத்துவம்

உன்னதமான தொழில்களிலே உன்னதமானது, மருத்துவத் தொழில். மருத்துவம், பணம் விளைக்கும் தொழிலாய் மாறிவருகிறது. மருத்துவர்கள் எப்போதும் எந்தச் சமூகத்திலும் தேவையானவர்களாக  இருந்தாலும், சமீப காலமாக அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவு சம்பாதிக்கின்றனர். பாட்ரிக் ஷூன் ஷியாங் என்பவர் 16 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து 23 வயதில் மருத்துவரானார் ; பின் தனக்குச் சொந்தமான இரண்டு மருந்து நிறுவனங்களை விற்று  51,000 கோடி சம்பாதித்தார். ரோண்டா ஸ்டிரைக்கர் என்ற இன்னொரு எலும்பியல் மருத்துவர் செயற்கையான மாற்று முட்டுக்களையும் அது தொடர்பான மற்ற பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்து 15,800 கோடிகளை வசூலித்தார். இவர்களைப் போல பிலிப் பிராஸ்ட் என்ற தோல் மருத்துவரும் (நிகர மதிப்பு – 14,400 கோடி ரூபாய்), காரி மைக்கல்சன் என்ற எலும்பியல் மருத்துவரும் ( நிகர மதிப்பு 8,400 கோடி ரூபாய்) மருத்துவப்பணியின் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் :  உன்னதமான மருத்துவத் தொழிலில் கோடீஸ்வரனாக ஆகும் காலத்தை கணக்கிட்டு கொச்சை படுத்த வேண்டாமே.

Doctor image 4

 

8. பேஷன் நிபுணர்கள்

உலகில் மக்கள் அழகுக்கு  முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெளிவாகத் தெரிகிறது; ஏனெனில் உலகின் முதல் 20 பணக்காரர்களுள்  வால்மார்ட்டைத் தவிர  ஐந்து பேர் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தான். 3,42,000 கோடி நிகர மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரரான அமான்சியோ ஒர்டீகா , இண்டிடெக்ஸ் என்ற குழுமத்தின் கீழ் உலகப் புகழ்பெற்ற ஜாரா மற்றும் பெர்க்ஷா முதலிய ஆடை ரகங்களை நிர்வாகம் செய்பவர். அவரைத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் ‘லா ரியாலை’ ச் சேர்ந்த லில்லியன் பெட்டன்கோர்ட்டும் , பத்தாவது இடத்தில் ‘ லூயி விட்டனை’ச் சார்ந்த பெர்னார்ட் அர்னால்டும், அடுத்த படியாக ‘ ஹென்ஸ் அண்ட் மாரிட்ஸை’ச் சேர்ந்த ஸ்டீபன் பெர்சனும் உள்ளனர். எனவே, நீங்கள் ‘ குசி’ அல்லது ‘ பிரதா’ போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக அமையும் எனலாம்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் : நற்பெயரும் விசுவாசமான வாடிக்கையாளர்களும் இருந்தால் நீங்கள் 30 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகலாம்.

fashion designer

 

9. முதலீட்டாளர்கள்

பணம் ஒரு நோய்க்கிருமியைப் போன்றது; அதைச் சரியான சூழலில் விதைத்தால் அது அசுர வேகத்தில் பெருகி விடும்.  3,21,000 கோடி நிகர மதிப்புடன் உலகின் நான்காவது பணக்காரரான வாரன் பப்பெட், ” நீங்கள் புத்திசாலித்தனமான செயல்களைச் செய்தால் நிச்சயமாக செல்வந்தராகி விடுவீர்கள் ! ” என ஒரு முறை கூறினார். தலா 1,20,000 கோடி நிகர மதிப்புடன் கார்ல் ஐகானும் , இளவரசர் அல்வலீதும் தங்களிடமிருந்த பணத்தை முதலீடு செய்து பணக்காரர்களான இருவர் ஆவர்.

கோடீஸ்வரர் ஆக எடுக்கும் காலம் :  சுமாராக 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

global investors meet

 

 

10. தொழில்நுட்ப மேதாவி

இந்த நூற்றாண்டு தொழில்நுட்ப மேதாவிகளுத்கு ஏற்ற நூற்றாண்டாக உள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்ற தொலைநோக்குப் பார்வை பெற்றவர்கள் முன்னோடிகளாக இருக்க மற்ற தொழில்நுட்ப மேதாவிகளும் இப்போது முன்னேறி வருகின்றனர். 1990களின் பிற்பாதிகளிலும் 21 ஆம் நூற்றாண்டின் பத்தாண்டுகளி லும் உலகின் முதல் பணக்காரராக இருந்த பில் கேட்ஸ் , இப்போது 4,02,000 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ‘ ஆரக்கலின்’ லாரி எல்லிசனும் ( நிகர மதிப்பு 2,58,000 கோடி ரூபாய்) கூகுளின் லாரி பெய்ஜும் , சர்ஜி பிரின்னும் ( நிகர மதிப்பு 1,38,000 கோடி ரூபாய்) உள்ளனர். பேஸ்புக்கின் மார்க் ஜக்கர்பர்க்கு 79,800 கோடி ரூபாயுடன் அருகில் உள்ளார். எனவே, மணிக்கணக்கில் கணினி குறியீடு (கம்ப்யூட்டர் code) எழுதுவது உங்களுக்கு ஏற்ற வேலை என்றால் விரைவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

nr narayanamurthy image 3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular on the Web

Discussions  • Co-Partner
    Viral Stories

TY News