வழக்கமான இந்தியப் பெண்ணை ‘டேட்’ செய்கையில் உதவிடும் 10 ஆலோசனைகள்

12:32 pm 23 Nov, 2016

பல நூற்றாண்டுகளாக, ஆண்களுக்குப் பெண்களின் மனம் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது; அதுவும் இந்தியப் பெண்களின் விஷயத்தில் இந்தச் சிக்கல் பன்மடங்காகி விடுகிறது. ஆனால், தான் நேசிக்கும் ஒரு பெண்ணை மனதளவில்  புரிந்து கொள்ள எவன் ஒருவன் தன் நேரத்தையும் காலத்தையும் அர்ப்பணிக்கிறானோ, அவன் முயற்சிகள் வீண் போகாது; வாழ்வில் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாகவே இருப்பர்.

அவ்வாறு, இந்தியப் பெண்களின்  மனதைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினம் இல்லை; அதற்காக, ஆறே நாட்களில் நினைத்த பெண்ணைப் புரிந்திட 6 ஆலோசனைகள் போன்ற உரையாகக் கருதிவிடாதீர்கள். காதலும் அன்பும் அப்படிப்பட்டவை அன்று. மாறாக, தன்னவளை அறிந்து கொண்டவர்களின் அனுபவங்களின் தொகுப்பாகப் பாருங்கள்!

10) இந்தியக் கலாச்சாரம் எந்நிலையிலும் வேரூன்றி இருக்கும் :

ஒரு இந்தியப் பெண்ணாணவள்  எவ்வளவு நவீனமாகவும் , சுயாதீனமாகவும், , கடவுள் மீது நம்பிக்கையற்றவளாகவும் இருந்தாளும்,  அவளின் ஆழ்மனதில்  இந்திய நாட்டுக் கலாச்சாரமும் பண்பாடும் வேரூன்றியிருக்கும்; அதனால், அவசரம் கூடாது. அவசரப்பட்டால், சிறந்ததொரு உறவும் கூட முறிய நேரிடும்.

9) மௌனம் தோல்விக்கு அறிகுறி:

உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவருக்கும் அர்த்தமளிப்பவற்றைப் பற்றிப் பேசுங்கள்; வெளிப்படையான உரையாடல்கள் தான் நல்ல உறவுக்கு ஆதாரம்; நேரில் பார்த்துப் பேசுவதைப் போல் வேறெதும் கிடையாது. எனவே, அவள் தன் வாழ்வில் முக்கியமாகக் கருதுவதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்; அவளை நீங்கள் எளிதாக அறிந்து கொள்வீர்கள் !

8) அவள் குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் :

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியர்களின் வாழ்வில் தங்கள் குடும்பம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன; அந்த விஷயத்தில் பெண்களும் விதிவிலக்கல்ல. ஆகவே, நீங்கள் நேசிப்பவரின் குடும்பத்திலும் வேலையிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்; அவற்றைத் தம்மதாகக் கருதுங்கள். அவளின் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைச் சமாளிக்க உதவுங்கள். கஷ்ட காலங்களில் , தோளோடு தோள் சாயத்துக் கொண்டு, உறுதுணையாக இருந்தவர்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்?

7) அடக்கம் வேண்டும் :

உங்களைப் பற்றி மட்டும் யோசிக்காதீர்கள்; தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவர்களைப் பெண்களுக்கு அறவே பிடிக்காது. இரு மனங்களின் சங்கமம் தான் உறவு. அதில் இருவருமே சமம் தான். உம்மைப் பற்றியே பேசிக் கொண்டஇருந்தால் , உம்மவளை அறிந்து கொள்ள இயலாது.

6) மறுப்புகளுக்கு மதிப்பளி :


அந்த மறுப்பு எதற்காக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்ளுங்கள். அது ஏதோ ஒரு வேலையாக இருக்கலாம்; நீங்கள் அளித்த ஆலோசனைக்காக இருக்கலாம்; நெருக்கமாகப் பழகிடவும் இருக்கலாம். எதாயினும், அவளின் விருப்பங்களை மதியுங்கள். தனக்குப் பிடித்த  ஆடையை அணிந்திட அவருக்கு உரிமை உண்டு; அதில் உங்களுக்கு விருப்பம் இல்லாவிடினும் அதை மறுக்காமல், அதை மதித்தால் தான், அவளும் உங்களை மதிப்பாள். திரைப்படங்களில் காட்டுவது போல், பெண்களின் மறுப்புக்கு “இசைவு “ என்று பொருள் என நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

5) ஒப்பீடுகளுக்கு இடமளிக்காதீர்கள் :

மனிதர்கள் எல்லாரும் தனித்தன்மை மிக்கவர்கள்; ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்க மாட்டார். அதைப் புரிந்து கொண்டு, நீங்கள் நேசிப்பவரை உங்கள் தாயோடும் சகோதரியோடும் நண்பரோடும் அல்லது வேறொருவரோடும் ஒப்பிட்டாதீர்கள். இந்த நடிகையைப் போல் வெள்ளையாக இல்லை, அந்த நடிகையைப் போல் ஒல்லியாக இல்லை என்றெல்லாம் கருதினால் , அந்த நடிகைகளைத் தான் நீங்கள் விரும்பியிருக்க வேண்டும். மொத்தத்தில், உங்களின் அன்பிற்குப் பாத்திரமானவர் யாராக இருக்கிறாரோ அதற்காக அவரை நேசியுங்கள் .

4) எல்லைகளை அறிந்திடுங்கள் :

சிறு சிறு சில்மிஷங்களில் ஈடுபடுங்கள்; தவறில்லை. ஆனால் , அவற்றிற்கான எல்லைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  வருமுன் காப்பது நன்று.

3) வேஷங்கள் வேண்டாம் :

நீங்கள் விரும்புவோருக்குப் பிடிக்குமென்று, வேறு ஒருவர் போல் வேடமிடாதீர்கள். சாயம் போன பின் தெளிந்திடும் என்பதைப் போல நீங்கள் வேடத்தைக் களைத்தவுடன் அவர் உங்களை விட்டுப் பிரிந்து விடுவார். உங்களை நீங்கள்  விரும்பாவிடின் யார் விரும்புவார், சொல்லுங்கள்? அதனால் பிடித்தவளுக்காக உங்களை  நீங்கள் இழப்பதை விட, உங்களைப் பிடித்தவளை நேசிப்பது நன்மை பயக்கும்.

2) அவளுக்குச் சுதந்திரம் அளியுங்கள் :

ஏற்கனவே கூறியது போல், இந்தியக் குடும்பங்களில் பல கட்டுப்பாடுகள் இருக்கும்; அதற்கும் மேலாக அவளுக்கு நீங்களும் கட்டப்பாடுகள் விதிக்காதீர்கள். அவளுக்கு எல்லா விதத்திலும் சுதந்திரத்தை அனுபவிக்க அனுமதியுங்கள் ;   உம்மைப் பற்றி எண்ணினால் அவள் மனதில் பரந்த வானத்தில் சுதந்திரமாகத் திரியும் பறவையைப் போல் அவள் உணர வேண்டும்.

1) உங்களின் பொன்னான நேரத்தை அவளுடன் கழியுங்கள் :

ஒரு ஆணிடம், ஒரு பெண் பணத்தையோ பொருளையோ எதிர்ப்பார்ப்பதில்லை; அன்பையும் அரவணைப்பையும் தான் தேடுகிறாள். அதனால் , உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்வின் பொன்னான நிமிடங்களைப் பகிர்ந்திடுங்கள்.

DiscussionsTY News