பச்சையாகும் முன் ‘தாஜ் மஹாலை’ப் பார்த்து வாருங்கள்!

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக , இந்தியாவின் தாஜ் மஹால் விளக்குகிறது. பளிங்கினால் ஆன  மாளிகையான இந்தப் பிரம்மாண்டமான சமாதி 1653 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எல்லாராலும் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய இந்த வரலாற்றுச் சின்னம், சமீபத்தில் பெய்துவரும் அமில மழையால் மஞ்சளாகி வருகிறது. சுற்றுச்சூழலில் மாசு உருவாக முக்கிய காரணமாக இருப்பது , அமில மழை.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளியான ஒரு அறிக்கையின் படி, தாஜ் மஹால் இருக்கும் ‘ஆக்ரா’, வளிமண்டலத்தில் அதிக அளவிலான கரிபொருளைக் கொண்ட நகரமாய்த் திகழ்கிறதாம்.

tajacid

 

இது பழைய செய்தி. தற்போது ஒரு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. தாஜ் மஹாலின் வெள்ளையான நிறம், ‘கிரோனோமஸ் காலிகிராபஸ்’ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட கொசு போன்ற பூச்சிகளை ஈர்க்கிறது. இந்தப் பூச்சிகள் விட்டுச் செல்லும் கரும்பச்சை நிறத்திலான கழிவுகள் தாஜ் மஹாலைப் பச்சை நிறமாக்குகின்றன.

taj-mahal-insect.jpg.838x0_q80-768x506

 

மனிதர்களே மூலக் காரணம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிப் பல அரசு அலுவலகங்களுக்கு ஆணையிட்டிருந்தும், பயனில்லை. கடந்த சில வருடங்களாக இந்தப் பிரச்சனை பெரிாக வளரத் தொடங்கியுள்ளது. இதற்கும் மனிதர்களாகிய நாம் தான் காரணம்.

நகராட்சியின் திட மற்றும் திரவக் கழிவுகளெல்லாம் யமுனை ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள், நதியில் பாசியும் பாஸ்பரஸும் பல்கி்ப் பெருகிட வழி செய்கின்றன. இவ்விரண்டும் தான் அந்தப் பூச்சிகளின் பிரதான உணவுகள்; எனவே, அவற்றின் அசுர வளர்ச்சிக்கு நாமும் மறைமுகமாக காரணமாகிறோம்.

yamuna

 

தீர்வு

“தாஜ் மஹாலின் மீது ஏற்பட்டுள்ள கறைகளைச் தண்ணீரால் போக்கி விடலாம்; ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. இந்தப் பிரச்சனை உருவாக உதவும் காரணங்களை நாம் அறிவோம்; எனவே, இவற்றை வேரிலே  கிள்ளி எடுப்பது தான் சரியாக இருக்கும். அப்போது தான் தாஜ் மஹாலின் பழைய அழகை மீட்க முடியும் ” என்கிறார், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  புவன் விக்ரம் சிங்.

 

 

 

 

Facebook Discussions