வட இந்தியர்கள் சந்தோஷமாக விருந்துண்ண 8 உணவு விடுதிகள்

3:40 pm 23 Nov, 2016

தென்னிந்திய வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், சென்னையைப் பற்றி ஒரு வித்தியாசமான தகவல் தெரியும்; அதாவது சென்னையில் பல நூற்றாண்டுகளாக, வெளியூர்களிலிருந்து மக்கள் வந்து தங்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் சென்னையின் சமூகமும் பொருளாதாரமும் இந்தப் பன்முகத்தன்மைக்கு ஏற்றாற் போல் தான் வளர்ச்சி அடைந்துள்ளன.

அதன் விளைவாகத் தான் நம்மால் பலதரப்பட்ட கடைகளையும் தொழில்களையும் பார்க்க முடிகிறது. சென்னையில் நீங்கள் மாதம் 2,000 ரூபாய் வாடகைக்கும் வீடு எடுக்கலாம், மாதம் 2,00,000. ரூபாய் வாடகைக்கும் வீடு எடுக்கலாம். அதே போலத் தான் உணவு வகைகளும்; ஆனால், என்ன தான் எக்கச்சக்கமாக உணவு விடுதிகள் இருந்தாலும், அவரவர்க்குப் பிடித்தவாறு சமையல் அமைவது வெகு சில இடங்களில் தான்.

அப்படி வட இந்தியர்களுக்குத் தங்கள் வீட்டு உணவை உண்பது போன்ற ஒரு உணர்ச்சியைப் பெறக் கூடிய 8 உணவு விடுதிகளைப் பற்றிப் பார்க்கலாம் :

8. லிட்டில் இத்தாலி :

முகவரி           :  எண்- 112,  எல்டொராடோ கட்டிடம், நுங்கம்பாக்கம் பிரதான சாலை , நுங்கம்பாக்கம், சென்னை.

தொலைபேசி எண் :  044 42601234 , 044 42601230
உலகளவில் பிரசித்திப் பெற்ற அசலான இத்தாலிய உணவுகள், சென்னையில் சில இடங்களில் தான் கிடைக்கும்; அதிலும் தரத்துடன் கூடிய உண்மையான இத்தாலிய உணவுகள்,  ‘லிட்டில் இத்தாலி ‘ போன்ற விடுதிகளில் தான் காண இயலும். நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் இந்த விடுதி அமைந்துள்ளது எனக்  கண்டுபிடிப்பது சற்று சிரமம்; ஏனெனில் ஒரு பெரிய பச்சை நிற விளம்பரப் பலகையைத் தவிர இதைக் கண்டுபிடிக்க வேற எந்த அடையாளமும் இல்லை.

‘லிட்டில்  இத்தாலியின்’ அமைப்பு எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது; பஃபே, மேசைகளுக்கு அருகிலேயே நாற்காளகளை  அமைத்திருப்பதால், உணவை உண்ண ஏதுவாக உள்ளது.

700 ரூபாய் மதிப்பிலான மதிய உணவுக்குக் கொடுக்கும் பணத்துக்கு மேல் மதிப்பு கிடைக்கும்; எதிர்ப்பார்த்த பீட்சாக்களும் பாஸ்தாக்களும் ருசியாக இருக்கும்; அவற்றை விட இங்கு கிடைக்கும் மாம்பழ மசியலின் சுவையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அதோடு, நமக்குத் தேவைப்படும் உணவைச் சொன்னவுடனே சமைத்துத் தர, ஒரு செப் எப்பொழுதும் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

லிட்டில் இத்தாலியில் உணவு உண்ட அனுபவத்தை நீங்கள் மறக்க முடியாத அளவுக்கு சேவையும் உணவும் இருக்கும்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

7. ஹாஜி அலி :

முகவரி : 65பீ, முருகேசன் நாயக்கர் காம்ப்லெக்ஸ், ஐடிபீஐ வங்கிக்கு அருகில், க்ரீம்ஸ் ரோடு, சென்னை.

தொலைபேசி எண் : 044 28292220, +91 9840716733

இந்த விடுதி இன்றைய வாழ்க்கை முறையைச் சாதகமாகப் பயன்படுத்துகிறது எனலாம்; யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து, பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சட்டென்று கிளம்பிடலாம்.

ஹாஜி அலியில் அமைப்பு அவ்வளவு அழகாக இல்லை தான்; எனினும் அங்கு கிடைக்கும் இனிப்புகள் இந்தக் குறையே தெரியாத அளவுக்கு அருமையாக இருக்கின்றன. மொத்தத்தில், ஹாஜி அலி ஒரு நல்ல உணவகம்; அது மற்ற உயர்ரக விடுதிகளைப் போல, பதிவுகளைக் கட்டாயப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து உணவு அருந்திப் பாருங்கள்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

6. பாபக்யூ நேஷன் :

முகவரி : ஶ்ரீ தேவி பார்க் ஹோட்டல், 1, ஹனுமன்தா சாலை, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை.

தொலைபேசி எண் : +91 7811098623

இந்தப் பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பார்பக்யூ நேஷன் பிடித்துள்ளது. சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்துக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடையே பெரும் மவுச இருக்கிறது. ஏன் இல்லாமல்?  அருமையான உணவு, அற்புதமான சூழல், சிறப்பான சேவை- இவையெல்லாம் இருக்கும் போது வேறு என்ன வேண்டும்?

இந்த விடுதியில் , ஸ்டார்டர்களைச் சுவைக்கத் துவங்கினால் நிறுத்தவே மாட்டீர்கள்; அதைத் தான் நாங்களும் அறிவுறுத்துகிறோம். பிரதானச் சாப்பபாட்டைக் கூடச் சாப்பிடாமல் ஸ்டார்டர்களை முடித்தவுடன் இனிப்பகளில் திழையுங்கள்.

பார்பக்யூ நேஷனுக்கு நிகராக சிகிரி என்ற உணவகத்தைச் சொல்லலாம்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

5. ராஜ்தாணி :

முகவரி : 3ஆவது மாடி, எக்ஸ்பிரெஸ் அவென்யூ மால், வைட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.

தொலைபேசி எண் : 044 28464422, 044 28464433

பெரும்பாலான உணவகங்கள் சுய லாபத்தை மட்டும் நோக்குவர்; அதற்கு விதி விலக்காக ராஜ்தாணியைச் சொல்லாம். ராஜ்தாணியின் வாசலில் யாராவது சாப்பிட ஆர்வம் காட்டுவது போல் தெரிந்தால் போதும், உடனே ராஜ்தாணியின் பணியாளர்களெல்லாம் மலர்ந்த முகத்தோடு பார்ப்போரை வரவேற்பர்.


பெயருக்கு ஏற்றாற் போல் இங்கு குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி உணவுகள் தான் விசேஷம்; சாப்பிட ஆரம்பித்தால், மடை திறந்த வெள்ளம் போல 17-18 வகையான உணவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒரு முறை சாப்பிட்டாலே, உப்பினக் கொழுகட்டையைப் போல் உணர்வீர்கள், இங்கு அடிக்கடி உண்டு வந்தால் நீங்கள் கண்டிப்பாக  உடற்பயிற்சி செய்ய வேண்டும்படி இருக்கும்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

4. தி பாஸ்தா பார் வெனிட்டோ :

முகவரி : 32/59, பர்கிட் ரோடு, தி நகர், சென்னை.

தொலைபேசி எண் :  +91 8144914782

இந்தப் பட்டியலில் இருக்கும் உணவகங்களிலே, சிறியது எனத் தி பாஸ்தா வெனிட்டோவைச் சொல்லலாம். இங்கு மொத்தம் 7-8 மேசைகள் தான் இருக்கின்றன; ஒவ்வொன்றிலும் 4 முதல் 5 நபர்கள் உட்காரலாம். மற்றவற்றை விட இது குறிப்பிடத்தகும் அளவு அமைதியாகவும் இருக்கும். உணவு நன்றாக இருந்தாலும் மிகச் சிறப்பானது எனக் கூற முடியாது. அப்படியிருந்தும் இந்த உணவு விடுதி நான்காவது இடம் பிடிக்க, இதன் கட்டிட அமைப்பும் சுற்றுச்சூழலும் தான் காரணம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்? பெரிய ஆலமரத்தை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆலமரக் கிளைகளுக்கு இடையிடையே புகுந்து வரும் நிலவொளியின் வெளிச்சத்தில், காதில் தேனாகப் பாயும் பறவைகளின் சப்தங்களுக்கு மத்தியில், நமக்குப் பிடித்தவர்களோடு உணவு உண்ணும் வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது. இயற்கையுடனான இந்த அற்புதமான அனுபவத்தை நீங்கள் எப்பொழுதும் மறக்க மாட்டீர்கள்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

3. காப்பர் சிம்னி :

முகவரி : CSIR சாலை, தரமணி பிரதானச் சாலை, அஸென்டாஸ் ஐடி பார்க்  அருகில், தரமணி, சென்னை.

தொலைபேசி எண் : 044 22541700, +91 9840518213

சில விடுதிகளை , அங்கு சாப்பிட்ட உணவின் காரணத்தால் மனதில் நினைவு வைத்திருப்போம்; தி பாஸ்தா வெனிட்டோவைப் போன்ற இடங்களை அங்கு சாப்பிடும் போது நமக்குக் கிடைத்த அனுபவத்தால் நினைவு வைத்திருப்போம்; ஆனால் வெகு சில இடங்களைத் தான் உண்ட உணவுக்கும் , சாப்பிட்ட அனுபவத்துக்கும் ஞாபகம் வைத்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு இடம் தான், காப்பர் சிம்னி.

இங்கு பெரும்பாலும் இந்திய உணவுகள் தான் பரிமாறப்படுகின்றன. உணவு உண்ணும் அறையில் , வீணை, சித்தார் மற்றும் தபலா போன்ற பாரம்பரிய  இசைக்கருவிகள் வாசிக்கப்படவே , அந்த உணவுக்கெனத் தனி ருசி கிடைக்கிறது. எந்தப் பக்கம் சுற்றிப் பார்த்தாலும்,அழகான நுண்ணிய வேலைப்பாடுகளைக் காண முடியும்.

காப்பர் சிம்னி ஜி ஆர் டி கிராண்ட்ஹோட்டலில் இருப்பதால், இங்கு உணவுகளெல்லாம் விலையுயர்ந்ததாகத் தான் இருக்கும்; ஆனால் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்புக் கிடைக்கும். எனவே, அடுத்த முறை உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது, கொஞ்சம் பணத்தைச் சேமித்து வையுங்கள்.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

 

2. எண் 10, டௌனிங் தெரு

முகவரி : கென்ஸிஸ் இன் பொட்டிக் ஹோட்டல், 50, வடக்கு போக் ரோடு, தி நகர், சென்னை.

தொலைபேசி எண் : 044 28152152, +91 9840510203

10, டௌனிங் தெரு , சென்னையின் சிறந்த பப் ஆக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது; இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பப்பில் மேசையைப் பதிவு செய்வதே கடினமான ஒரு செயல்; அவ்வளவு மவுசு இருந்தும் சென்னையில் உள்ள மற்ற பப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உணவுகளின் விலைகளெல்லாம் குறைவாகவே இருக்கின்றன.

இங்கு உணவும் சேவையும் நன்றாகவே இருக்கும்; குறிப்பாக இங்கு ஒவ்வொரு இரவும் , சங்கீதத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது. சொல்லப் போனால், வாரம் ஒரு முறை பெண்களுக்காக மட்டும் திறக்கப்படுகிறது. டென் டீ என்ற பெயரால் தான் இந்த பப் அழைக்கப்படுகிறது.

ஆக மொத்தம், டென் டீ ஒரு ஆல்ரவுண்டரைப் போல் எல்லா விதத்திலும் உங்களைத் திருப்தி அடையச் செய்யும்; மது அருந்துவோர்க்குக் கூட இந்த பப் பல முறையில் பிடித்திருக்கிறதாகத் தெரிகிறது.

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously

1. க்ரீம் சென்டர்:

முகவரி : 55, 2 ஆவது பிரதானச் சாலை, (காலியப்பா மருத்துவமனைக்கும், பார்க் ஷெராட்டனுக்கும்  இடையே) , ராஜா அண்ணாமலைப்புரம், சென்னை.

தொலைபேசி எண் : 044 42815777

இறுதியாக இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது, க்ரீம் சென்டர். மற்ற உணவகங்களை விட அமைப்பிலும் சேவையிலும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், உணவின் சுவையில் இதற்கு நிகர் வேறெதுவும்  இல்லை. இங்கு கிடைக்கும் பல்வேறு வகையான ஐஸ் க்ரீம்களுக்கும், வண்ணமிகு உணவுகளுக்கும் ஈடு இணையே கிடையாது. அதைப் பற்றி எண்ணினாலே, நாக்கில் எச்சில் ஊறத் துவங்கிடும்.

சிச்லர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்; அதுவும் சிச்லிங் பிரௌனியைப் பற்றி .. சாப்பாட்டைத் தட்டில் இடக் கூட நம்மால் காத்திருக்க இயலாது. இதற்கு மேல் நான் சொல்லவா வேண்டும் ?

நீங்களே நேரில் வந்து அனுபவியுங்கள் இந்த அற்புதத்தை!

Restaurants In Chennai Where North Indians Can Dine Deliciously
 

DiscussionsTY News