கை, கால் இரண்டும் இல்லாத ஓவியர் – ஊனத்தை வென்ற அனு ஜெயின்

1:15 pm 22 Jun, 2016


படைப்புத் திறனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது –  கை, கால்கள் இல்லாத குறை உள்பட!  புதுமையான எண்ணங்களும் மனதில் உறுதியும் இருந்தால் யாராலும் சாதிக்க இயலும் என்பதற்கு, அனு ஜெய்ன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  கை, கால்கள்  இரண்டும்    இல்லாத  அனு ஜெயினை நேரில் பார்ப்பவர்கள், அவர் ஓவியர்  என்று நம்பமாட்டார்கள்!

e-2

 

 

பிறப்பால் , அவருக்குக் கால்கள் கிடையாது; கைகளோ முழங்கை வரை தான் இருந்தன. ஆனால் அவர், தனக்கு உடல் ஊனம்  இருப்பதாக எண்ணாமல்   ஆரோக்கியமாகவுள்ள பலரும் செய்யாத காரியங்களைச் செய்துள்ளார்.

c-2

முப்பத்திரண்டு வயதான அனு ஜெய்ன், ஓர் ஓவியர்; புகைப்படப் பிடிப்பாளர்; வடிவமைப்புக் கலைஞர். சண்டிகரிலுள்ள ‘ பிரச்சின் கலா கேந்திரா’வின் ” சித்திர பாஸ்கர்- பாகம் 2″ -ல் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

a-3

 

 

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,  தன் குடும்பம் தான் தனது பலம் என்றும், தனது தம்பியும் அக்காவும் பெற்றோரும் தனக்கு பக்கபலமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

“ஒரு நாள், என் தாய் என்னிடம் ஒரு தூரிகையைக் கொடுத்து, சித்திரப்படத்தில் தீட்டச் சொன்னார்; மெல்ல மெல்ல என் ஆர்வம் கூடியது. நான் வீட்டிலேயே ஓவியம் பயின்றேன். என் ஓவியங்கள் என் எண்ணங்களின் வெளிப்பாடுகளாகவே இருக்கும்.  பெரும்பாலும் எனது ஓவியங்கள் ” பூக்கள்,பறவைகள், சூரிய உதயம், சூரியனின் மறைவு – இவை  இருக்கும்.  என் ஓவியங்களில் உள்ள மலர்கள் எல்லாம் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் நிறங்களிலிருக்கும். எனக்குப் பிடித்த நிறம் , இளஞ்சிவப்பு. ஏனெனில், அது அன்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் குறிக்கும். அதனால் தான் என் ஓவியங்களில், பல இளஞ்சிவப்பு மலர்களை நீங்கள் காணலாம். கலையில் சிறக்க கவனமும் பொறுமையும் இருந்தால் போதும் என நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

d-2


 

 

மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் வளர்ந்த அனு, தன் தந்தையின் ஓய்வுக்குப் பின் பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவரின் வளர்ச்சிக்கு அவரின் தன்னம்பிக்கையும் அவர் வளர்த்துக் கொண்ட திறமைகளும் தான் காரணம். அனு, தனது இணையப் பக்கத்தில், தன் ஆர்வங்களைப் பற்றி எழுதுகிறார்:

“எனக்கு ஓவியத்தின் வெவ்வேறு பரிணாமங்கள் பிடிக்கும் – சுவரொட்டி, எண்ணெய் வெளிர், கண்ணாடி, துணி, நீர் வண்ணங்கள், பென்சில், கரி – என எல்லாமே பிடிக்கும். அதைத் தவிர, நான் இப்போது ஒலிப்பானை  (Synthesiser) வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன்; புகைப்படம் எடுப்பதிலும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு; சுடுமண் பானைகளிலும் களிமண்ணிலும் நுட்பமான வேலைப்பாடுகள் செய்ய விரும்புகிறேன். சில சமயங்களில் , இந்த உலகைப் பற்றிய ,வாழ்க்கையைப் பற்றிய எனது உணர்வுகளைப் பாடல்களாகவும் சிறு கட்டுரைகளாகவும் எழுதுவேன்.” என்றார்.

b-2

 

 

அவரது படைப்புகள் பல கண்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளன; சமீபத்தில் கூட ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் உதவியோடு பெங்களூரில் உள்ள ‘பாரதிய வித்யா பவனில்’ அவரின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  மறுக்க முடியாத அவரது திறமைக்கு ஒரு மேடை கிடைத்தால் போதும், குன்றிலிட்ட விளக்காய் ஜொலிப்பார்!

f-1

 

 

Popular on the Web

Discussions  • Co-Partner
    Viral Stories

TY News