காலணிகளால் வரிசை அமைத்த ஜெயப்பூர் கிராமத்து மக்கள்

12:14 pm 16 Nov, 2016

தான் ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காசியில் இருக்கும் ஜெயப்பூர் கிராமத்தைத் தத்தெடுத்துக் கொண்டார். அதற்கு முன்பு வரை, அடிப்படை வசதிகள் கூட இந்தக் கிராமத்தில் இருந்திருக்கவில்லை; ஆனால், பிரதமரின் தத்தெடுப்புக்குப் பின் இது ஒரு முன் மாதிரி கிராமமாக மாறிவிட்டது. இங்கு புதிதாகத் திறக்கப்பட்ட வங்கி, இந்தக் கிராமத்துக்கு மட்டுமில்லாமல் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

தற்போது, நாடெங்கும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிட மக்கள் பெரும் திரல்களாக வரும் நிலையில் பல இடங்களில், சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் அவற்றைத் தவிர்க்க இவ்வூர் மக்கள் எடுத்துள்ள முயற்சி வித்தியாசமாக உள்ளது.

இங்கு,  தாங்களே வரிசைகளில் நிற்காமல் , மக்கள் தங்களின் செருப்புகளால் வரிசை உருவாக்கியிருப்பதைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

 
கொழப்பங்கள் வராமல் இருக்க, செருப்புகளில் தங்களின் பெயர்களையும் தங்களுக்குத் தேவையான தொகையையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி ஒட்டியுள்ளனர். விடியற்காலையிலிருந்து வரிசையில் நின்று சோர்ந்து போவதை விட, இந்த முறை சுலபமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.

நாட்டின் மற்ற இடங்களில் எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வரும் இந்நேரத்தில் இவர்களின் அணுகுமுறை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சிலருக்குத் தங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் திருமணங்களுக்காக ரொக்கமாகப் பணம் தேவைப்படுகிறது; சிலருக்குத் தங்களின் அன்றாட வாழ்வை நடத்திடப் பணம் தேவைப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலால் , தங்கள் வாழ்வில் நிறுத்தம் ஏற்பட்டு விடுமோ என  அவர்கள் அஞ்சுகின்றனர். வங்கிகளில் கூட்டத்தைச் சமாளிப்பது கடினமாக இருப்பதால் இதற்குத் தீர்வாக, டி எம் இயந்திரங்களிலேயே நோட்டுக்களை மாற்றும் வசதியைக் கொண்டு வருமாறு அதிகாரிகளை வேண்டுகின்றனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி அவர்கள் இது குறித்துக் கூறுகையில் “ ஏ டி எம் இயந்திரங்கள் மூலம் புதிய ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்க அவற்றில் அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால், இதை நடைமுறைப்படுத்த 2-3 வாரங்கள் ஆகும். எனவே, அரசின் இந்த சீர்த்திருத்தத்தால்  பொருளாதாரத்துக்குக் கிடைக்கும் அதீத நன்மைகளை மனதில் கொண்டு மக்கள் இந்தத் தற்காலிகச் சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறேன். “ என்றார்.DiscussionsTY News