தென்னிந்தியர்கள் பற்றி 7 தவறான கருத்துகள்

11:56 am 22 Nov, 2016

இந்தியர்கள் பலருக்குத் தென்னிந்தியர்கள் பற்றித் தவறான அபிப்ராயங்கள் உண்டு; அவற்றில் பல வேடிக்கையாக இருக்கும் ; சில அர்த்தமற்றதாகவும் இருக்கும். அவற்றைக் கண்டிப்பாகச் சீர்த்திருத்த வேண்டும்.

பலரும் தென்னிந்தியர்கள் மதராஸிலிருந்து வருவதாகக் கருதுகிறார்கள். உண்மையில் , தென்னிந்தியாவில் 6 மாநிலங்கள் இருந்தும், தற்போது மதராஸ் “ என்ற பெயரில் ஒரு இடமும் இல்லை. நீங்கள் அடுத்த முறை கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி உங்கள் பக்கத்துத் தெருவைப் பற்றி ஆராயும் போது, சிறிது இந்திய வரைபடத்தைக் கூர்ந்து பாருங்கள்!

இந்த 6 மாநிலங்களிலும், வெவ்வேறு மொழிகளும் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன; இருக்காமலா பின்ன? மொழி வாரியாகத் தானே இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டன! எனவே, வருங்காலத்தில்  யாரவது அண்டா குண்டா தண்டா பானி  “ என்று சொன்னால் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் எனத் தெரியும் என நினைக்கிறேன்.

பாலிவுட்டில் சென்னை எக்ஸ்பிரெஸ் , 2 ஸ்டேட்ஸ் போன்ற படங்கள் இருந்தும் இந்த நிலை நீடிக்கிறது என்றால் ஆச்சரியம் தான். இதற்குத் தீர்வாக அந்தத் தவறான கருத்துகளை ஒவ்வொன்றாகத் தீர்க்கலாம் .

1) இட்லி, தோசை இல்லாமல் தென்னிந்தியர்களால் வாழ முடியாது :

இது போலத் தான் குஜராத்திகளால்  தோக்லா இல்லாமலும், பஞ்சாபிகளால் பட்டர் சிக்கன் இல்லாமலும் இருக்க முடியாது என்ற கருத்து இருக்கிறது. ஊரில் யார் இது போன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

இட்லியும் தோசையும் பிரதானமான காலை உணவுகளாக இருந்தாலும் அவற்றையே அவர்கள் மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை.

2) தென்னிந்தியர்களெல்லாம் கருத்த நிறத்தவர்கள் :

தென்னிந்தியர்களெல்லாம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் என்பதால் அவர்கள் எல்லாரும் அவரைப் போலவே கருநிறத்தில்  மட்டும் இருப்பார்கள் என்றில்லை. அவர் நிறத்தால் பின்னடைவு பெற்றிருந்தாலும் , அவர் இன்றளவும் சூப்பர்ஸ்டாராக இருப்பதில் தான் அவரின் சிறப்பு இருக்கிறது

அப்படியானால் தீபிகா படுக்கோனேவுக்கு எந்த ஊர் என்று நினைக்குறீர்கள்?

3) எல்லாத் தென்னிந்தியர்களும் மதராஸிகள் :

சொல்லப் போனால், மதராஸ் என்ற இடம் தமிழ்நாடாக மாறிக் கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன; தற்போது அந்தப் பெயரில் எந்த இடமும் இல்லை. ஆனால், இன்றளவும் தென்னிந்தியாவிலிருந்து யாராவது வந்தாலே அவர் பலருக்கும் மதராஸி தான்.
4) தென்னிந்தியர்களெல்லாம் புத்திசாலியான ஐயர் பசங்கள் :

தென்னிந்தியாவில் பிராமனர்கள் மட்டும் வாழ்வதில்லை; அனைத்துச் சாதியைச் சேர்ந்த மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர். எனவே, தென்னிந்திய மாணவர்கள் என்றாலே அறிவாளித்தனமான பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் மட்டும் இருக்க மாட்டார்கள்.

5) தென்னிந்தியர்கள் எல்லாரும் ஹிந்தி தெரிந்தவர்கள் :

கில்லாடி என்ற பாலிவுட் படத்தில் ஜானி லீவர் பேசுவதைப் போல் , ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பின்னாலும் டா என்று சொன்னால் தான் அவர் தென்னிந்தியர்; அதிவும் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் போன்றவர்களின் பஞ்சு டையலாக்குகளைச் சொல்லாவிட்டால் அவர் தென்னிந்தியரே இல்லை.

6) எல்லா தென்னிந்தியர்களுக்கும் நீண்ட பெயர்கள் உண்டு :

தென்னிந்தியர்கள்  சிலரின் பெயர்களைப் பார்த்தால் அவர்களின் மொத்தப் பரம்பரையையே பெயராக வைத்தாற் போல் இருக்கும்; சிலரின் பெயரைப் பார்த்தால் மிருகங்களின் ஓசைகள் போல் இருக்கும்.

இக்காரணத்தால் , தென்னிந்தியர்களுக்கு,  எங்கு போனாலும் சாம்பார் சாதம், இட்லி தோசை என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வைக்கப்படுகின்றன.

7) தென்னிந்தியர்களுக்கு இங்கிதமே தெரியாது :

சில சமயம்,  அவர்களின் நடவடிக்கைகள் முகத்தில் அடித்தாற் போல் இருந்தாலும் , உண்மையில் அவர்கள் விருந்தாளிகளை மிகுந்த அக்கறையோடு பார்த்துக் கொள்வார்கள்; ஒரு முறை அவர்களின்  விருந்தோம்பலைக் கண்டால் போதும், நீங்கள்  மனம் உருகிப் போவீர்கள்.

இனி மேலாவது, தென்னிந்தியர்களை, லுங்கிக் கட்டிக்கொண்டு  இட்லி சாப்பிடும்  பொறியாளர்களாகக் கருதாமல் இருந்தால் சரி.

 

 DiscussionsTY News