பிரசித்தி பெற்ற 11 பாட்டி வைத்தியங்கள்

2:14 pm 26 May, 2016


பாட்டி வைத்தியம் பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் வீணாக மருத்துவரிடம் ஓடாமல் பாட்டி வைத்தியத்தை உபயோகிக்கலாம். பாட்டி வைத்திய முறைகள் எளிமையானவை;  எனினும் வீரியம் பெற்றவை. ஆனால், பொதுவாக இவற்றை சிறு பிரச்சனைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.  இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில பிரச்சனைகளையும்  அவற்றிற்கான பாட்டி வைத்திய முறைகளையும் பாருங்கள் !

11. வயிற்றில் அமிலத்தன்மை (acidity)

நீங்கள் அமிலத்தால் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் எரிச்சலுக்கு ஆளாகினால், தினமும் காலை வெறும் வயிற்றில் 2 கப் தண்ணீர் குடித்துவிட்டு நாளைத் துவங்குங்கள் ; தண்ணீர் அமிலத்தை ஈடுகட்டி விடும். மேலும், வாழைப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழங்களும் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு தரும்.

 

 

young teenager drinking water after exercise.

young teenager drinking water after exercise.

10. அஜீரணக் கோளாறுகள்

உணவு உண்டபின்னர்  ஒரு கப் அன்னாசிப்பழச் சாற்றைப் பருகினால், அஜீர்ணப் பிரச்சனைகள் வாரா .  ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றை ஒரு டம்ளர்  வெந்நீரில் கலக்கியும் குடிக்கலாம். ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைச் சரிவர உண்டு வந்தால் ஜீரணத்துக்கு உகந்தது; ஆனால்,  உணவு உண்ட உடனே இவற்றைச் சாப்பிடக்கூடாது.

Pineapple juice

 

 

9. சொத்தைப் பல்

தினமும் பச்சை வெங்காயத்தைப்  வாயில் மூன்று நிமிடம்  மென்று வந்தால் வாயிலிலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து சொத்தைப் பல் பிரச்சனையை நீக்கி விடும்.உடனடி நிவாரணத்திற்கு, சிறிது பூண்டுடன் கல் உப்பைச் சேர்த்துச் சொத்தையான பல்லின் மீது வைக்கவும்.

onion

 

 

 

8.  ஜலதோஷம்

வெந்நீரில் குளிப்பதும் , ஆவி பிடிப்பதும்ஜலதோஷத்துக்கு நல்லது; எலுமிச்சம் பழச்சாற்றையும் வெந்நீரில் கலந்து சிறிது தேனுடன் குடித்தால் ஜலதோஷத்துக்கு காலம் காலமாய் பயன்பட்டு வரும் பாட்டி வைத்தியம்.

Honey-for-Common-Cold.

 

7. முகப்பரு அடையாளங்கள்

பன்னீரையும் எலுமிச்சம் பழச்சாற்றையும் சம அளவில் கலந்து பருக்கள் இருந்த இடத்தில்தினமும் ஒரு மணி நேரம் வீதம்  15 – 20 நாட்கள் தடவி வந்தால், முகப்பரு அடையாளங்கள்  மறைந்திடும்.  இலவங்கப்பட்டையைத் தூளாக்கிச் சிறிது தேனுடன் கலந்து பசையாகும் படிச் செய்யுங்கள். இதை நாள்தோறும் இரவு உறங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் தீர்வு கிடைக்கும்.

Lemon-Juice-and-Rose-Water for acne

 


 

6. கறுத்த அக்குள்கள்

இதற்குச் சிறந்த உபாயம் அக்குள்களில் எலுமிச்சம் பழத்தைத் தினமும் தேய்ப்பதே.விட்டமின் இ எண்ணெயைத் தடவலாம் ; குளித்த பிறகு சமையல் சோடாவை இடுவதும் நல்ல தீர்வாக அமையும். உருளைக்கிழங்கை  மசித்துச் சாறாக்கி அக்குள்களில் இடவும் ; இது அக்குள்களின் கருந்தன்மையைக் குறைக்குமாம்.

Lemon-for-Dark-Underarms

 

5. வெடித்த இதழ்களுக்கு வெறும் தண்ணீர் போதும்

நிறைய தண்ணீர் குடித்து வந்தால் வெடித்த இதழ்கள் சரியாகிவிடும். சுத்தமான நெய், வெண்ணெய் முதலியன வறண்ட இதழ்களுக்கு நல்லது. காய்ச்சாத பாலோடு ரோஜா இதழ்களைச் சேர்த்துப் பசையாக்கி இட்டால் இதழ்கள் புத்துயிர் பெற்று, மீண்டும் சிவப்பாக மாறிவிடும்.

Water-for-Dry-Chapped-Lips

 

4. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுவது

ஈரமான துணியை அல்லது ‘ஐஸ் பேக்கை’த்   தலையில் வைத்தால் மூக்கிலிருந்து வரும் இரத்தம் நின்று விடும். ஆப்பிள் பழச்சாற்றைப் பஞ்சுத்துணியால் இடவே, மூக்கிலிருந்து வழியும் இரத்தம் நின்று விடும்.

Ice-Pack for Nose-Bleeding

 

3. தொண்டைப்புண்

தொண்டைப்புண்ணுக்கு வெதுவெதுப்பான உப்புத்தண்ணியில் கொப்பளிப்பதே சிறந்த தீர்வு ; மாறாக மிளகு மற்றும் கிராம்பைப் பொடியாக்கித் ,ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தண்ணீரில் கலந்து குடிப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

Lukewarm-Water-for-Sore-Throat

 

2. வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்குக்குத் தயிருடன் வாழைப்பழத்தைச் சேர்த்து உண்பதே சிறந்த பாட்டி வைத்தியம் . ஆரோரூட் கஞ்சி, பார்லி கஞ்சி, அரிசி கஞ்சி போன்றவை வயிற்றுப்போக்கின் போது தேவையான சத்தைத் தரும்.

Banana for Diarrhoea

 

1. வரித்தழும்புகள் :

லாவண்டர் எண்ணெயை ஒரு நாளைக்கு மூன்று வேளை இடுவது தான் வரித்தழும்புகளுக்கு சரியான தீர்வு. சர்க்கரை பாதாமி, ‘ அரோமா’ எண்ணெய், ‘கொக்கோ’ வெண்ணெய் ஆகியவையும் வரித்தழும்புகளை விரைவில் போக்கி விடும்.

Lavender-Oil-for-Stretch-Marks

 

Popular on the Web

Discussions



  • Viral Stories

TY News