ஹட்டூ கோவில் – இராவணன் மனைவி, மண்டோதரியின் கோவில்

4:40 pm 13 Jul, 2016

ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிம்லா/ நார்கண்டம் பகுதியில் , அடர்ந்த காடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஹட்டூ சிகரம் தான் இப்பகுதியின்  மிக உயர்ந்த சிகரமாகும்; இவ்விடத்தில் மோட்டார் வாகனத்தால் செல்லக் கூடிய  மிக உயரமான பகுதியும் இதுவே.  (கடுங்) குளிர் காலத்தின்  போது  இந்த இடம் மற்ற பகுதிகளிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்படும்.

இந்தச் சிகரத்தின் உச்சியில் தான் , இராமாயணத்தில்,  முக்கியமான கதாபாத்திரங்களுள் ஒருவரான மண்டோதரிக்கு (இராவணனின் மனைவி)  சொந்தமான ஹட்டூ மாதா (துர்க்கை அம்மன்) கோவில் இருக்கிறது.

Hatu temple

 

கோவிலிலிருந்து ஒருவரால் , கண்ணுக்கு எட்டிய மட்டும் நீண்டிருக்கும் இமாலய மலைத்தொடர்களையும், அடர்ந்த வனப்பகுதிகளையும் பழத்தோட்டங்களையும்  பார்க்க முடியும். கோவிலின் சுவர்கள் மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்டுள்ளன; தூண்களில் பூக்கள் முதல் அதிசய விலங்குகள் வரை வெவ்வேறு வடிவங்கள்  நுண்ணிய மரவேலைப்பாடுகளால் அழகாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஆனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கும் விழாவுக்குப் பக்தர்கள் திரளாக வருவர் .  பழைய மரபுகளின் படி இன்றும் கோயிலின் அருகில் கடாக்கள்  பலி கொடுக்கப்படுகின்றன.

CigrL9-WgAUPUks.original
 

இக்கோவிலுக்கு அருகில் ,  அடுப்பை ஒத்த பழம்பெரும் கல் அமைப்பு உள்ளது ; உள்ளூர் மக்கள் , பாண்டவர்கள், தங்கள் வனவாசத்தின் போது இந்த அடுப்பில் தான் சமைத்து உண்டனர் என நம்புகின்றனர்.

random-28-12-07-030

 

 

 

 DiscussionsTY News