வார இறுதியைக் கொண்டாட, சிறந்த 8 மலைப் பிரதேசங்கள் :

2:30 pm 11 Nov, 2016

தற்காலத்தில், சென்னையில் பணிபுரியும் பல பேருக்கு வார இறுதியில் விடுமுறைக்காக வெளியூர் செல்ல விருப்பம் உண்டு.  இரண்டே நாட்களக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தால், இந்த ஆசை நிறைவேறாமல் போகிறது. ஆனால், பெரும்பாலானோர் எண்ணுவது போல , விடுமுறைக்காகச் சென்னையை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை.

சென்னைக்கு அருகாமையிலேயே, பல மலைப் பிரதேசங்கள் இருக்கின்றன; இவற்றைப் பார்த்து விட்டு வர நீண்ட திட்டமிடுதெல்லாம் தேவையில்லை. உங்களுக்கு இவற்றிற்குச் சென்று வருவதற்கான வழிகள் தெரிந்திருந்து, உங்களிடம்  காரும் இருந்தால் போதும். இல்லை என்றால் கூடப் பரவாயில்லை ; இந்த இடங்களுக்கு நீங்கள் பேருந்துகளிலே சென்று விடலாம். உங்கள் மனதுக்கு நெருக்கமானோர்களோடு 2 நாட்கள் சந்தோஷமாக நேரத்தைக் கழித்திட, இதோ சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறந்த 8 மலைப் பிரதேசங்கள் :

8)  ஏலகிரி :

சென்னையிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் தள்ளி, சென்னை-பெங்களூர் இடையேயான நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிறது, வரும் வழியில் , 14 வளைவுகளைக் கடந்து வர வேண்டியிருப்பதால் வண்டி ஓட்டும் போது கவனம் தேவை. ஆச்சரியப்படும் விதமாக, இந்த வளைவுகளெல்லாம் தமிழ்ப் புலவர்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன. நான்கு மலையுச்சிகளுக்கு இடையே இருக்கும் ஏலகிரி, இந்தியாவில் நான்காவது உயரமான மலைப் பிரதேசமாகும். கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் உயரத்தில் இருப்பதால், நடைபயணங்கள், மலை ஏறுதல், பாராகிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. சுவாமி மலையை ஏறவே 1 மணி நேரம் எடுக்கும். ஆனால், இந்த உயரத்தில் மழையால் ஏறுவது இன்னும் சிரமம்.

மழையையும் கடந்து வந்தால், அழகான புங்கனர் ஏரியையும் ஜலகம்புரி நீர்வீழ்ச்சியையும் காணலாம்.

இயற்கையான காடுகளும், பூச்செடிகளும் செழித்து ஏலகிரியில் செழித்து வளர்கின்றன. இந்த இயற்கைக்கு நடுவே நகர வாழ்வின் தடையமே தெரியாது.

அப்படியானால் , நீங்கள் உங்களின் எரிவாயுப் பெட்டிகளை நிரப்பட்டுத் தான் வர வேண்டும்.

7) ஏற்காடு :

உலகப் பிரசித்தி பெற்ற ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று வெறும் வாய் வார்த்தைக்காக அழைக்கப்படுவதில்லை; ஊட்டியில் நீங்கள் பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் இங்கும் காணலாம். பட்டுப் பண்ணைகள், காலனித்துவக் கட்டிடங்கள், பழைய கோவில்கள், பழத்தோட்டங்கள் எனப் பல விதமான இடங்களுக்குச் சென்று வரலாம்.

பிரபலமான ஷேவ்வராயன் கோவிலில் இருந்து காணக் கிடைக்கும் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு விருந்தாய் அமையும்; இங்குள்ள ஒரு அழகான ஏரியில் படகுச் சவாரி சென்று வர வேண்டும்; 3,000 அடி உயரமான கிள்ளியூர் நீர்வீழ்ச்சியையும் பார்த்திடனும். இங்கு அரிய வகைப் பறவைகளைப் பார்க்க முடிவதால் ஏற்காட்டில் நடைபயணங்கள் பிரபலமாகி வருகின்றன. சென்னையிலிருந்து 360 கிலோமீட்டர் (சேலத்திருந்து வெறும்  22 கிலோமீட்டர் தான் ) தள்ளி இருந்தாலும் இங்கு வந்து பார்த்தவுடன், உங்கள் பைசா வசூல் என்று தான் சொல்வீர்கள்.

6) மசினங்குடி :

மசனங்குடியை அடைய, நீங்கள் ஊட்டியிலிருந்து காலஹஸ்தி வழியாக வருவதே சிறந்த வழி, மசினங்குடியை நெருங்கவே சாலைகள் வளைவுகளாக மாறத் தொடங்கும்; கிட்டத்தட்ட 30-35 வளைவுகளைக் கடந்து தான் மசினங்குடியை வந்து அடைய முடியும். கர்நாட்டக்காவின் பண்டிப்பூர் தேசிய பூங்காவுக்கும் தமிழ்நாட்டின் முதுமலை தேசிய பூங்காவுக்கும் மத்தியில், நீலகிரி மலைகளின் அடியில் இருக்கிறது,  மசினங்குடி.

குறிப்பாக , வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இந்த இடம் பிடிக்கும். ஒதுக்கப்பட்ட காடுகளுக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என்றாலும் மற்ற இடங்களிலேயே நிரைய வன விலங்குகளை நீங்கள் காண நேரிடலாம். இரவில் நீங்கள் தங்கும் இடத்துக்கு அருகிலே கூடக் காட்டு எருமையையோ புள்ளி மானையோ யானையையோ காட்டு நாய்யையோ இந்தியப் பெரு அணிலையோ சுட்டி மானையோ பார்க்க வாய்ப்புண்டு.  மேலும், கிட்டத்தட்ட 320க்கும் மேற்பட்ட வகையான பறவைகளையும் காண இயலும். இங்குள்ள கோபாலசுவாமி பேட்டா மலையிலிருந்து அற்புதமான காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

உள்ளூர் மக்கள் , இங்குள்ள முருகன் கோவிலுக்குச் சிறுத்தைகள் சென்று வழிபடுவதாக நம்புகின்றனர்.

5) வால்பாறை :

இன்னொரு பிரபலமான இடம்; கோயம்பத்தூரிலிருந்து 100 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் வால்பாறைக்கு வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் வந்து போகிறார்கள். அதனால், இங்குள்ள பெரும்பாலான விடுதிகளெல்லாம் எப்பொழுதும் நிரம்பி வழிகின்றன.
பொதுவாக, சுற்றுலாவுக்காக வருவோரெல்லாம், அலியாறு, சோழையாறு, நிராறு அணைகளுக்குச் சென்று வருவர். அதைத் தவிர்த்தும் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலையத்துக்கு வந்து போவர். எனினும், வால்பாறையில் அவற்றைத் தவிர அனுபவிக்கப் பல இடங்கள் இருக்கின்றன.

இங்கு கண்ணக்கு எட்டிய மட்டும் எழில் மிகுந்த தேயிலை, காபி, சின்சோனா தோட்டங்கள் தான் தென்படும்; தோட்டங்களுக்கு இடையிடையே கூட வனத்தில் வாழும் விலங்குகளைத் திறந்தவெளியில் பார்க்கலாம்; அதிர்ஷ்டம் இருந்தால், புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை ஆகியவற்றைக் கூடப் பார்க்கலாம்.

இங்கு வாழும் மக்களில் பெரு வாரியானோர் இத்தோட்டங்களில் பணிபுரிபவராகத் தான் இருப்பார்கள்; அவர்களிடம் பேசிப்பாருங்கள்; நிச்சயம் ஒரு புது விதமான அனுபவமாக அமையும்.

4) மேகமலை :

இந்தப்  பட்டியலில் உள்ள மற்றவற்றைக் காட்டிலும் , மேகமலை அவ்வளவு பிரபலம் இல்லை; மதுரையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் , தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலையில் சுற்றுலாப் பயணத்துக்கான வசதிகள் இல்லாத காரணத்தால், நீங்கள் இங்கு வந்தால், வாடகைக்கு அறைகள் எடுத்துத் தான் தங்க வேண்டி இருக்கும்.

628 சதரக் கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள மேகமலைப் பகுதியில், சுற்றிப் பார்க்கப் பல இடங்கள் இருக்கின்றன. தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், அணைகள் என்று சொல்லிக் கொண்டே  இருக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் 4,500 அடி உயரத்தில் இருப்பதாலோ என்னமோ, மேகமலையில் இருக்கும் கிராமங்களெல்லாம் அதைச் சுற்றியே பெயரிடப்பட்டுள்ளன; மேகநிலம், மணலார், மேல் மணலார், பெருவழி போன்றவை அவற்றில் சில. கடல் மட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க உயரத்தில் இருப்பதால், எப்பொழுதும் பனி மூட்டமாகவே இருக்கும். இவ்விடம் பலருக்கு, முக்கியமாக சென்னைவாசிகளுக்குக் களைப்பாற ஏற்ற இடமாக இருக்கிறது.

3) கொடைக்கானல் :

குண்டாறு மற்றும் பரப்பாறு சமவெளிகளுக்கு இடையே, பழனி மலைகள் மேல் இருக்கும் பீட பூமயில் அமைந்துள்ளது, கொடைக்கானல். கொடைக்கானலுக்கு , “ மலைப் பிரதேசங்களின் இளவரசி  “ என்ற பெயர் உண்டு. இங்கு பொழுதுபோக்கிற்காகப் பல செயல்கள் செய்யலாம்; பசுமையான காடுகள் வழியாக நடைபயணம்  மேற்கொள்ளலாம்; அழகான கொடைக்கானல்  ஏரியில்  படகுகளில் பயணிக்கலாம்; சுற்றியிருக்கும் பல நீர்வீழ்ச்சிகளில் நீராடி ஆனந்தம் அடையலாம். கொடைக்கானலின் இதமான வானிலைக்காக மட்டுமே இங்கு வந்து போகலாம்.

2)ஹார்ஸ்லே மலைகள் :

ஐந்து நாட்கள் தொடர்ந்து வேலைப் பார்த்து, சோர்ந்த கண்களுக்கு  புத்துயிர் ஊட்டும் விதமாக இருக்கும், ஹார்ஸ்லே மலைப்பகுதியின் சூழல். மலையுச்சியில் இருந்து அற்புதமான காட்சிகளைக் காண இய

ல்கிறது. நீண்ட நடைபயணங்களை மேற்கொள்ள ஒரு சிறந்த இடம் இது. கௌந்தின்யை வனவிலங்குப் பூங்காவின் ஒரு வாயிலாகவும் இந்த மலைகள் செயல்படுகின்றன. இங்கு நிலவும் அமைதியான சூழல் மனதிற்கு இன்பத்தை அளிக்கிறது.

1) கொல்லி மலைகள் :

வாழ்வில் எப்படிப்பட்ட ஆர்வங்களை வைத்திருந்தாலும், அவற்றிற்குத்   தீனி போடும் விஷயம் கொல்லி மலையில் இருக்கிறது. சாகசப் பிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள், புதுத்தம்பதியினர் என அனைவருக்கும் ஏற்ற இடம், கொல்லி மலை. இங்குள்ள அரபலீஸ்வரர் திருக்கோவில் பிரசித்தி பெற்றது; வருடாவருடம் மக்கள் பெரும் திரளாக வந்து, வழிபடுவது உண்டு.  இங்குள்ள சுற்றுலாத் துறையினர், தங்களின் சுயநலத்துக்காக இயற்கைக்கு மாறான மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்; ஆயினும், கொல்லி மலையின் இயற்கையான அழகு இன்றளவும் குறையாமல் இருக்கிறது.

 

 

 DiscussionsTY News