எவரஸ்ட் மலைச் சிகரத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் நபர் 

3:42 pm 7 Jul, 2016

1852 ஆம் ஆண்டு, இந்தியக் திரிகோணவியல் சுற்றுநோட்டத்தைச் செயல்முறைப்படுத்தும் குழுவின் உறுப்பினரான, ராதாநாத் சிக்தார் என்ற கணித மேதை ,வட இந்தியாவைச் சுற்றிக் கொண்டிருந்தார்; அப்போது அவர் ஒரு உயரமான சிகரத்தைக் கண்டார்; பார்த்த நொடியில் அவருக்கு “அதுதான் உலகின் உயர்ந்த சிகரம்” என்ற எண்ணம் தோன்றியது. இந்த உண்மை பல ஆண்டுகளுக்குப் பின், இந்திய நிலம் அளப்போரின் தலைவராய் இருந்த ‘சர் ஜார்ஜ் எவரஸ்ட்’  அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

25 ஆண்டுகள் நீடிக்கவிருந்த திரிகோணவியல் சுற்றுநோட்டத்துக்குப் படைத்தலைவர் லாம்ப்டன் தலைவராக அறிவிக்கப்பட்டார். 1816 ஆம் ஆண்டு, லாம்ப்டனிடம் ,ஜார்ஜ் எவரஸ்ட்  உதவியாளராகச் சேர்ந்தார்.

George-Everest.-755x350

 

எவரஸ்ட் அவர்கள் , தன் வேலையில் புதுமையைக் காட்டினார்; அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கருவிகளில் சில திருத்தங்களைச் செய்து , அவற்றை எளிதாக உபயோகிக்கும் படிச் செய்தார். மேலும், ‘ ஹென்ரி பாரோ’ என்பவரை  இந்திய துணைக்கண்டத்துக்கு உபகரணங்களை உருவாக்கும் பொறுப்பை  அளித்தார். இதனால்,  உபகரணங்களை பழுது பார்க்க இங்கிலாந்து செல்ல வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

வருடக்கணக்கில் இந்தியாவிலிருந்த எல்லாக் காடுகளையும் மலைகளையும் பாலைவனங்களையும் கடந்து, எவரஸ்ட்டும் அவர் குழுவினரும் உலகின் மிகப் பெரிய கோணவியல் சுற்றுநோட்டத்தை நடத்தி முடித்தனர்.

Everest_House_1_1.original-768x431

 

1843 ஆம் ஆண்டு, சர் ஜார்ஜ் எவரஸ்ட் அவர்கள் ஓய்வு பெற்றார். ராதாநாத் சிக்தாரால் கண்டுபிடிக்கப்பட்ட உயர்ந்த மலைச்சிகரத்துக்கு என்ன பெயர் வைப்பதென்று 1856 -ல் ஆங்கிலேயர்கள்  யோசனையில் இருந்தனர். திபெத்தியர்கள் அதை, “சோமோலுங்மா” என்றும் ,நோபாளியர்கள் அச்சிகரத்தைச் “சாகர்மாதா” என்றும் அழைத்து வந்தனர்.  இந்நிலையில் (1856 ஆம் ஆண்டு) எவரஸ்ட் அவர்களுக்கு அடுத்த படியாக, நிலம் அளப்போரின் தலைவராகப் பதவி ஏற்றிருந்த   ‘ ஆண்ட்ரூ வா’,  எவரஸ்ட் அவர்களின் பெயரையே அச்சிகரத்துக்கு வைக்குமாறு பரிந்துரைத்தார்.

புகழில் நாட்டமில்லாத எவரஸ்ட், சிகரத்துக்கு தன் பெயரை வைப்பதற்கு  மறுப்பு தெரிவித்தார். எனினும், அதை மீறி அச்சிகரம் ‘எவரஸ்ட்  மலைச்சிகரம்’ என்று பெயரிடப்பட்டது.


Everest news

 

சொல்லப்போனால், அவர் பெயர், “ஈவ்  ரெஸ்ட்”  என்று தான்  உச்சரிக்கப்பட வேண்டும். ஆனால் நாம் அவரையும் அந்த மலையை ‘எவரஸ்ட்’ என்றே அழைத்து வருகிறோம்.

Everest_House_1_3.original-768x431

 

 

ஓய்வு பெற்ற பின் , எவரஸ்ட் அவர்கள் 11 ஆண்டு காலம் மசூரியிலே ஒரு தனிமையான இடத்தில் வாழ்ந்தார். இன்று கூட, அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து எழில் மிக்க ‘டூன்’ பள்ளத்தாக்கையும் , ஈடில்லா இமாலய மலைத்தொடர்களையும் பார்க்க முடியும். பாரம்பரிய தலமாகப் பாதுகாக்கப் பட வேண்டிய இந்த இடத்தை, பலரும்  நாசம் செய்கின்றனர். அறியாமையால் இந்த வீட்டின் சுவர்களில் கிறுக்கி , இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை அழிக்கின்றனர்.

பாரம்பரிய தலமான  சர் ஜார்ஜ் எவரெஸ்ட் அவர்களின் வீட்டை காக்க, அதிகாரிகள் ஆவன செய்வார்கள்,   அந்த வீடு மீண்டும்  அனைவரையும் வரவற்கும் என்று நம்புவோம்.

Everest_House_1_2.original-768x431

 

DiscussionsTY News