அஞ்சா நெஞ்சம் கொண்ட கூர்க்கா படைப்பிரிவுகளைச் பற்றி  23 தகவல்கள்

10:39 pm 5 Jul, 2016

” ஒருவர் ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை ‘என உரைத்தால் , அவர் பொய் உரைத்திருக்க வேண்டும் அல்லது கூர்க்காவாக இருந்திருக்க வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் சாம் மேனக்ஷா கூறியதிலிருந்தே கூர்க்காக்களின் அஞ்சாநெஞ்சம் நன்றாக வெளிப்படுகிறது.

Gorkha-regiment

 

உலகிலிருக்கும் எல்லாப் படைவீரர்களைக் காட்டிலும் மிகவும் அஞ்சப்படும் படையான  கூர்கா படைப்பிரிவுகள் இந்திய இராணுவ படையில் முக்கிய அங்கமாக உள்ளன. அந்த வீரமிக்க படைப்பிரிவைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் கீழ்வருமாறு :

1) ஆங்கிலோ நேப்பாள போரின் போது, ‘டேவிட் ஆக்டர்லனி’ என்ற ஆங்கில படைத்தளபதி தான் கூர்க்காக்களின் ஆற்றலை முதன்முதலில் உணர்ந்தவர். அவர்களின் விசுவாசத்தின் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கையால் அவர்களை லெப்டினன்ட் ராஸ்ஸின் கீழ் ஒரு படைப்பட்டாளமாக உருவாக்கினார். கூர்க்கா படைப்பிரிவு அப்போது         ‘ நாசிரி படைப்பிரிவு ‘என வழங்கப் பட்டிருந்தது.

Nasiri-regiment

 

2) நாசிரி படைப்பிரிவு, பின்னர் அரசர் ஜார்ஜுடனான அதன் தொடர்பை நீட்டிக்கும் எண்ணத்தில் ‘ முதலாம் அரசர் ஜார்ஜின் கூர்க்கா துப்பாக்கிப் படை ‘ எனப் பெயர் மாற்றப்பட்டது.

Nasiri-regiment21

 

3) மலவுன் கோட்டையில் கூர்க்காக்களின் தலைவராய் இருந்த லெப்டினன்ட் லாடைய், ” ஆக்டர்லனியின் முயற்சிகளுக்குப் பின்னால் இருந்த காரணத்தை நான் இப்போது உணர்கிறேன் ” என்றாராம்.

Gorkhas (1)

 

4)  பரத்பூரைக் கைப்பற்றிய போது , கூர்க்கா துப்பாக்கிப் படையின் முதல் பிரிவுக்கு வழங்கப்பட்ட விருது தான் கூர்க்காகளுக்கு வழங்கப்பட்ட முதல் விருதாகும்.

1-Gorkha-Rifles

 

5) முதலாம் கூர்க்கா படைப்பிரிவு பாலஸ்தீன், மெஸப்பொட்டேமியா ஆகிய நாடுகளில் நடந்த போர்களிலும் 1919 இல் நடந்த ஆப்கான் போரிலும் பங்கேற்றது.

1-Gorkha-Regiment

 

6) மொத்தமுள்ள பத்து படைப்பிரிவுகளில் , ஆறு கூர்க்கா படைப்பிரிவுகள் ( 1,3, 4,5,8,9) இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய இராணுவத்தில் சேர்ந்தன.

Gorkha-regiments

 

7)  ஏழாம் மற்றும் பத்தாம் படைப்பிரிவுகளைச் சேர்ந்த பல வீரர்களும் ஆங்கிலேயரின் படையில் சேர விருப்பமில்லாமல் இந்திய இராணுவத்தில் சேர விரும்பியதால் , இந்திய இராணுவம் பதினோராவது கூர்க்கா படைப்பிவை உருவாக்கியது.

7-Gorkha-Rifles

 

8) பதினோராம் படைப்பிரிவில் சேர்ந்த பின், அந்த கூர்க்காகளின் பழைய மரபுகளும் மரியாதைகளும் விடப்பட்டன.

11-Gorkha-Rifles

 

9) சியாச்சினில் நடத்தப்பட்ட ‘ ஆப்பரேஷன் மேகதூத் ‘ இல் ‘ பிலபான்டு லா ‘ என்ற இடத்தைக் காக்கும் போது நான்காம் கூர்க்கா படைப்பிரிவின் மூன்றாவது  பட்டாளத்தின்  13 வீரர்கள் இறந்தார்கள் ; 23 பேர் படுகாயப்பட்டார்கள்.அந்தச் சமயத்திலும்  ஒப்பற்ற வல்லமையை வெளிப்படுத்தி, அவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் நீங்கா இடத்தைப் பெற்றனர்.

Operation-Meghdoot-in-Siachen

 

10) சியாச்சினில் கூர்க்காக்கள் புரிந்த சாதனையைப் பாராட்டி , அவர்களுக்கு மூன்று ‘மகா பரம்வீர் சக்ர ‘ விருதுகளும், ஐந்து ‘பரம்வீர் சக்ர ‘  விருதுகளும், இரண்டு ‘ சேனை விருதுகளும் ‘ , மூன்று படைத்தளபதியின் பாராட்டு அட்டைகளும், ஒரு இராணுவ ஊழியர்களின் தலைவரின் பாராட்டு அட்டையும் வழங்கப்பட்டன.

4-Gorkha-Rifles

 

11) மற்ற கூர்க்கா படைப்பிரிவுகளை விட அதிகப் படியான ‘ விக்டோரிய சிலுவைகள் ‘ ஐப் பெற்றது, ஐந்தாம் கூர்க்கா துப்பாக்கிப் படைப்பிரிவு (எல்லைப் பாதுகாப்புப் படை)தான்.

5-Gorkha-rifles

 

 

12) இந்தியாவின் இரண்டு பீல்டு மார்ஷல்களுள் ஒருவரான , சாம் மேனக்ஷா ‘ மின்னும் எட்டு ‘ என்றழைக்கப்படும் எட்டாம் கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்தவர்.

Field-Marshal-Sam-Manekshaw
 

13) 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாக்கிஸ்தான் உடனான போராடங்களிலும் , 1972 இல் நடந்த சீன இந்தியப் போரிலும், பல காஷ்மீர் நடவடிக்கைகளிலும் பங்கேற்றதற்காக  எட்டாம் கூர்க்கா படைப்பிரிவு இன்றும் பேசப்படுகிறது.

8-Gorkha-Rifles (1)

 

 

14) ” வெற்றி, அன்னை காளிக்கே! கூர்க்காக்களே! முன்னேறுங்கள் !” என்பது தான் அவர்களின் போர் முழக்கம்.

 

 

15) எல்லாக் கூர்க்கா படைப்பிரிவுகளையும் விடப் பதினோராவது படைப்பிரிவே வயதில் இளையது.

11-Gorkha-Rifles2

 

16) 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் தாம்
ஆற்றிய பணிகளுக்காகப் ‘ பரம் வீர் சக்ர ‘ விருதைப் பெற்ற லெப்டினன்ட் மனோஜ்குமார் பாண்டே பதினோராவது கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்தவர்.

Manoj-Kumar-Pandey

 

17) ஐந்தாம் கூர்க்கா படைப்பிரிவின் ஐந்தாம் பட்டாளத்தைச் (எல்லைப் பாதுகாப்புப் படை)சேர்ந்த நாயக் நார் பஹதூர் தப்பா, சுதந்திர இந்தியாவின் முதல் வகுப்பிலான அசோகச் சக்கிர விருதைப் பெற்ற முதல் நபராவார்.

Naik-Nar-Bahadur-Thapa

 

18) ஐந்தாம் கூர்க்கா படைப்பிரிவின் நான்காவது பட்டாளம் ,சில்ஹெட் போரின் போது நடத்திய வான்வழித் தாக்குதல் தான் இந்திய இராணுவத்தின் முதல் வான்வழித் தாக்குதலாகும்.

Gorkha-rifles

 

19) 1962 இல் நடந்த சீன இந்தியப் போரின் போது தான் வெளிப்படுத்திய வீரத்திற்காக , ‘ பரம் வீர் சக்ர ‘ விருதை வென்ற படைத்துணைத் தலைவர் தன் சிங் தாபா எட்டாவது கூர்க்கா படைப்பிரிவின் முதல் பட்டாளத்தில் பணி ஆற்றினார்.

Major-Dhan-Singh-Thapa

 

20) வங்காளதேசம், இலங்கை, சியாச்சின் ஆகிய இடங்களில் நாட்டிற்காகவும், லெபனான் மற்றும் சியாரா லியோன் ஆகிய நாடுகளில் ஐ.நா. வின் அமைதி காக்கும் படைகளாகவும் கூர்காக்கள் பணியாற்றி உள்ளனர்.

UN-peacekeeping-mission

 

21) ‘குக்ரி’ என்ற வளைந்த நேப்பாளிய கத்தியை, எல்லா கூர்க்காக்களும் தனிப்பட்ட ஆயுதமாக வைத்திருப்பர், இது அவர்களின் இயற்கைப் பண்பைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

Khukhri

 

22) எல்லாக் கூர்க்கா படையினரின் பதக்கங்கள்லும் , ஒரு ஜோடி ‘குக்ரி’ கத்திகள் வெவ்வேறு விதங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

Gorkha-Regiment-badge

 

23) தற்போதைய இராணுவ ஊழியர்களின் தலைவரான , படைப்பெருந்தலைவர் தல்பீர் சிங் சுஹக் ஐந்தாம் கூர்க்கா ரைப்லஸின் நான்காவது     படைப்பிரிவில்   சேர்க்கப்பட்டார்.

General-Dalbir-Singh-Suhag

 

 

உலகமெங்கும் இருக்கும் படைவீரர்களை விட மிகவும் துணிச்சலானவர்கள் , கூர்காக்கள் தான்.இதை நிரூபிக்கும் வண்ணம்,

“என் உடம்பில் ஓடும் இரத்தத்தின் பெருமையை நிலைநாட்டும் முன் மரணம் என்னை நெருங்கினால், நான் மரணத்தையும் சாய்த்து விடுவேன்! ” என்ற லெப்டினன்ட் மனோஜ்குமார் பாண்டேவின் கூற்று அமைந்துள்ளது.DiscussionsTY News