படிப்பில் சிறந்து விளங்கிய  9 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

2:55 pm 13 Jul, 2016

கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது ; மக்கள் அதை மதத்தைப் போல் பின்பற்றுகின்றனர்.  அனேகமாக,  இந்தியர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்திருப்பார்கள். ஆனால், தங்கள்  மனம் கவர்ந்த வீரர்களின் கல்வித்தகுதியைப் பற்றி யாருக்கும் தெரியாது. கிரிக்கெட் உலகில் கலக்கிய வீரர்கள் பலரும் கல்வியிலும் சிறந்துள்ளனர்.  பல கிரிக்கெட் வீரர்கள், பொறியியல் முதல் ஐ.ஏ.ஸ். வரை உயர் கல்வி கற்றுள்ளனர் என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

அப்படிப்பட்ட 9 வீரர்களைப் பற்றிக் கீழ்வருமாறு காணலாம்.

1. ராகுல் டிராவிட்

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த மட்டையாளர்களுள்  ஒருவரான  ராகுல் டிராவிட்டை  பலரும், களத்தில் அசைக்க  முடியாதவர் என்று பொருள்பட, செல்லமாக  ‘The Wall’ ‘ சுவர் ‘   என அழைப்பர். 1996- ஆம் ஆண்டு தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்; இவரது அற்புதமான ஆட்டம் 2012 ஆம் ஆண்டு வரை நீடித்தது. அவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இப்படிப்பட்டவரான ராகுல் டிராவிட், பெங்களூரில் உள்ள  புனித ஜோசப் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தார் ; பின் புனித ஜோசப் வணிகவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து முடித்தார்.  இவர் , தொழில் நிர்வாகம் (MBA) குறித்த தன் முதுகலைப் பட்டப்படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு இந்திய கிரிக்கெட் அணியில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார்.

dravid (1)

 

2.அனில் கும்ப்ளே

கிரிக்கெட் திடலில் பல சாதனைகளைப் புரிந்த கும்ப்ளே, அணியின் தலைவராகவும் சேவை செய்து திறம்பட பணியாற்றினார். கிரிக்கெட்டில் அவரது பயணம் 1989 முதல் 2010 வரை நீடித்தது. பசவனகுடியிலுள்ள தேசிய கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்து, பின் ராஷ்ட்ரிய வித்யாலயா பொறியியல் கல்லூரியில் படித்து ஒரு இயந்திர பொறியாளராக தேர்ச்சி பெற்றிருந்தார்.

Kumble

 

3. ஜவகல் ஸ்ரீநாத்

தற்போது சர்வதேச கிரிக்கெட் குழுவில் , போட்டி நடுவராய்ப் பணியாற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராவார். தன் வேகப்பந்து வீச்சால் ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வேகப்பந்து வீச்சாளர், இவர். 1991 ஆம் ஆண்டு தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்; 2003-ல்  அவரது கடைசி ஒருநாள் போட்டியையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் ஆடினார். அவர் ஜெயச்மசாமராஜேந்திரா    பொறியியல் கல்லூரியில்,  Instrumentation கிளையில் தேர்ந்தார்.

Srinath

 

4. வி வி எஸ் லக்ஷ்மண்

1996 ஆம் ஆண்டு தென்னாப்ரிகாவுக்கு எதிராக தன் முதலாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். சாதனைகள் நிரம்பிய அவர் கிரிக்கெட் பயணம் 2006-ல்

தென்னாப்ரிகாவுக்கு எதிரான போட்டியுடன் முடிவடைந்தது . ஐதிராபாத்தில் உள்ள லிட்டில் ப்ளவர்  உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பைத் தொடங்கினாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவர் வாழ்க்கையை மாற்றியது.

VVS

 

5. அஜின்கிய  ரஹானே


இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய வளரும் நட்சத்திர மான அஜின்கிய ரஹானே, டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக 2013 ஆம் ஆண்டு முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஹானே, கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2015 இல் விளையாடினார்.இந்திய அணியில் சேர்வதற்கு முன் அவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தார்.

Rahane

 

6. ரவிச்சந்திரன் அஷ்வின்

அஷ்வின் 2011-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தனது பயணத்தை ஆரம்பித்தார் ; பிறகு ஒருநாள் போட்டியிலும் பங்கேற்று, தன் திறமையால் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஆனால், SSN பொறியியல் கல்லூரியில் அவர்  தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றது பலரும் அறியாத செய்தி.

Ashwin

 

7. ஆவிஷ்கர்  சால்வி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான  ஆவிஷ்கர் சல்வி, ஒரு வலக்கை வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அவர்  வான் இயற்பியலில்  முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

Salvi

 

8. முரளி விஜய்

2006 -ல் இந்தியாவுக்காக தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிக்கு எதிராக விளையாடிய முரளி விஜய், கடைசியாக 2013-ல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார்; அவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

Vijay

 

9.அமய் குராசியா

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அமய்  குராசியா இந்திய அணியில் இடக்கை மட்டை வீச்சாளராக சேர்வதற்கு முன் ஐ.ஏ.ஸ். அதிகாரியாக பணிபுரிந்தார்.

Khurasia

 

 

DiscussionsTY News