நெரிசலில் முதலிடம் பிடித்துள்ளன, சென்னைப் பேருந்துகள்!

2:52 pm 25 Oct, 2016

நீங்கள் எப்பொழுதாவது  நெரிசல் மிகுந்த  பேருந்துகளில் பயணித்துள்ளீர்களா? இல்லையெனில் இந்தியாவுக்கு வாருங்கள்; இங்குள்ள பெரும்பாலான ஊர்களில். குறிப்பாக பெரிய நகரங்களில் பேருந்துகள் எப்பொழுதும் நிரம்பித் தான் காணப்படும்.

சமீபத்தில், சாலை மற்றும் நெடுஞ்சாலை  அமைச்சகம், ‘ஏப்ரல், 2014 க்கும் மே, 2015க்கும் ‘ இடைப்பட்ட  காலத்தில் “பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின்” அடிப்படையில்  பொதுத்தைறை நிறுவனங்களாகச் செயல்பட்ட மாநில போக்துவரத்து கழகங்களை ஆய்ந்து மதிப்பீடு செய்ததில், இந்தியாவிலேயே அதிகப்படியான நெரிசலடைந்த பேருந்துகள் சென்னையில் தான் இருக்கின்றன எனக் கண்டுபிடித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி ஒவ்வொரு சென்னை மாநகரப் போக்குவரத்துக்  பேருந்தும் சராசரியாக நாளொன்றிக்கு 1,300 பயணிகளை சுமந்துச்  சென்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.


ஆய்வுக்கு உட்பட்ட காலத்தின்  போது,  தமிழ்நாட்டில்  மொத்தம் இருக்கும் 20,864 பேருந்துகளில் 18,120 இலட்சப் பயணிகள் பயணித்துள்ளனர்; சென்னையில் 3,787 பேருந்துகள் ஓடிய நிலையிலும் இந்த அவல நிலை நீடிக்கத் தான் செய்கிறது.

தனியார் பத்திரிக்கை நிறுவனமான, தி டைம்ஸ் ஆப்   இந்தியா  இப்பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களாகக்  கீழ் வருவனவற்றைக் கூறுகின்றது :

  • தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
  • பேருந்துகள் செல்லும் வழிகள் வெகு நீளமாக இருக்கின்றன; மாநிலப் பேருந்துகள் செல்லும் தூரங்களுக்கு மாநகரப் பேருந்துகள் செல்கின்றன.
  • செயல்பாட்டிலிருக்கும் பல பேருந்துகள் பழையனவாய் உள்ளன.
அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் 56.85% பேருந்துகள் பழைய பேருந்துகளாம்.

மொத்தத்தில், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பழைய பேருந்துகள் நீளமான வழிகளில் செயல்படுவதால், தடுப்புக்கருவி பயன்படுத்தியும் உடனே நிக்காத அளவுக்கு நெரிசல் மிக்கதாய் சென்னையின் பேருந்துகள் மாறிவிட்டன.

DiscussionsTY News