திறமை இல்லாமலே, கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் 10 பாலிவுட் நட்சத்திரங்கள்

5:04 pm 15 Jun, 2016

இந்திய சினிமாவின் நூறு ஆண்டுகளை வெற்றிகரமாக கொண்டாடி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்  பாலிவுட் ல் சில நட்சத்திரங்கள் ஏன் அதிகமாக கொண்டாடப்படுகின்றனர் என்பதை ஆராய்ந்தோம்.  பத்தில் எட்டு நடிகர்  நடிகைகள் அலங்கார பொம்மைகள் – பார்க்க அழகாக இருக்கும் இவர்களுக்கு சரியாக நடிக்க  வராது .

40 வயதில் இளமை திரும்புகிறது என்று நம்பும் ஷாருக்கான் “சமக் சலோ” பாட்டிற்கு சுழன்று ஆடுகிறார், பண விஷயத்தில் சல்மான்கானின்  கை பாலிவுட்டில் இன்னும் ஓங்கி இருக்கிறது. 40 வயதிலும் அதிக சம்பளம் வாங்குவதில் முதல் இடத்தில இருக்கிறார் சல்மான் கான்.  அவரை போல நிறைய நடிக நடிகையர்  தன் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குகின்றனர்.

இதோ அதிக சம்பளம் வாங்கும் முன்னணி  10 பாலிவுட் நட்சத்திரங்களின் தொகுப்பு

10.ஷாஹிது கபூர்

மிகவும் மிகைபடுத்தப்பட்ட மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஷாஹிது கபூர்.

தான் கம்மேர்சியல் நடிகரா, ஆர்ட் பட நடிகரா என்று அவருக்கே தெரியாது போலும்.  தன்னை நிரூபிக்க ஷாஹிது இன்னும் முயற்சிக்க வேண்டும்.  ஆனால் இது அவர் சம்பளத்தை குறைக்கவில்லை.  ஒரு படத்துக்கு 10 – 12 கோடிகள் வாங்கும் இவர் கரீனா  கபூருடன் காதலில் இருந்த வரை தலைப்பு செய்திகளில் இருந்தார்.

Shahid-Kapoor

 

9.சைப் அலி கான்

இவர் நடித்த ஜேம்ஸ் பாண்டு படத்தை போன்ற துப்பறியும் படமான ஏஜெனட் வினோதிற்கு 18 கோடி கேட்டதாக செய்தி.  இவரின் கவனம் நடிப்பை தவிர மற்றதில் எல்லாம் – ஒரு வேளை திருமதி படௌடியிடம் இருக்கலாம் – திரும்பிக் கொண்டு இருக்கிறது.  விளம்பரத்துறையில்   இவர் குறிப்பிட தக்கவராக இருந்தாலும் இவர் நடிபாற்றலும், நட்சத்திர அந்தஸ்தும் ஒரு கேள்விக்குறியே .

Saif-Ali-Khan

 8.அஜய் தேவ்கன்

100 கோடி வசூல் சாதனை புரிந்த “Son of சர்தார்” படத்திற்கு இவர் 20-25 கோடிகள் வாங்கியதாக சொல்கிறார்கள் .  இவர் படங்களின் வசூல் நன்றாகவே இருந்தாலும் இவர் சிங்கம் படத்திற்கு பிறகு வேறு படம் எதுவும் சிறப்பாக அமையவில்லை.  இவர் தன் அருமையை சீக்கிரம் புரிந்து கொண்டால் நல்லது

Ajay-Devgan

 

7.ஹ்ரிதிக் ரோஷன்

சந்தேகமே இல்லாமல் மிகவும் திறமையான நடிகர் இவர்.  ஒரு தேவன் போன்ற தோற்றம், கட்டுமஸ்தான உடல், நடன திறமை மற்றும் மிக சிறந்த நடிபாற்றல் மிக்க இவர்  நட்சத்திர அந்தஸ்தில் நூற்றுக்கு நூறு பெறுகிறார்.  ஆனாலும் இவரின் கிருஷ் 2 விற்கு – மிகவும் பிரபலமான கிருஷ் ன் தொடர்ச்சிக்கு – ரூ.25 கோடி வாங்கியது தன் தகுதிக்கு மீறிய தொகையே.

hrithik-roshan

 

6.கத்ரீனா கைப்

ஒப்பனை இல்லாமலேயே தேவதை போல் இருக்கும் கத்ரீனா மிகவும் அழகானவர்.  இருந்தாலும் யஷ் சோப்ராவின் “jab tak hai Jaan?” படத்துக்கு எதற்காக 12 கோடி வாங்கினார் என்று தெரியவில்லை.  வெள்ளித் திரையில் அடிகடி தோன்றும் இவர் பிரியங்கா சோப்ராவிற்கு போட்டியாக கருதப் படுகிறார்.   சிறிதளவு கூட இவரை பிரியங்கா சோப்ராவிற்கு இணையாக கொள்ள முடியாது – ஏனென்றால் பிரியங்கா தன்னை மீண்டும் மீண்டும் மிக தேர்ந்த நடிகையாக நிரூபித்தவர்.

Katrina-Kaif1

5.கரீனா கபூர்

Agent வினோதிற்கு இவர் 10-15 கோடி வாங்கினதாக வதந்திகள் உண்டு.  தனது அக்கா கரிஷ்மா கபூர்  போல இவர் நடிப்புக்கு பெயர் போகவில்லை ஆனாலும் இவரின் கபூர் பரம்பரை இவரை புகழ் ஏணியில் ஏற்றியது.  இதனாலயே இவர் அதிகத் தொகை பெரும் பாலிவுட் நடிகர்களில் ஒருவராகிறார்
kareena_kapoor

 

4.ஷாருக் கான்

பாலிவுட்டின் பாத்ஷா என்றும் கிங் கான் என்றும் அழைக்க படும் இவர் உண்மையிலேயே மிகவும் மிகை படுத்தப்பட்ட ஒரு நடிகர்.  நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிரபலமான புகழ் வாய்ந்தவர்.  “jab tak hai Jaan” படத்திருக்கு 35 கோடி வாங்கியுள்ளார்.  புகழ் ஏணியில் இறங்கி கொண்டுயிருக்கும் இவரை சிலர் குறைத்து மதிப்பிட தயங்குவதற்கு காரணம், “முன்னர் பாலிவுட்டை ஆண்ட சிங்கம் ” என்பதுதான்.

Shah-Rukh-Khan

3.அக்ஷய் குமார்

தனது Rowdy Rathore படம் மூலமாக 40 கோடி வாங்கி, ஆமிர் கானின் 3 idiots படத்திற்கு வாங்கிய தொகைக்கு இணையாக வந்தாலும்  இரண்டு படங்களின் வெற்றி வேறு வேறானது. அக்ஷய், 5 வெற்றி படங்களை வரிசையாக தந்தவர் என்ற அந்தஸ்திலிருந்து இறங்கியிருந்தாலும்  ‘விடாக்கொண்டன் ’ ஆவார்.  ஏற்கனவே தன் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குகின்ற இவர், 100 கோடி வசூலில் சங்கத்தில் விரைவில் நுழையப்போகிறார்.

akshay-kumar

2.ஆமிர் கான்

எதையும் கச்சிதமாக செய்யும் ஆமிர் கானுக்கு படத்தின் லாபத்தை அள்ளி செல்வதில் தனிக்காட்டு ராஜா.  இவரது தலாஷ் படத்தின் 80% லாபம் இவருக்கு அளிக்கப்பட்டதாக சொல்லபடுகிறது.  3 idiots படத்திற்கு 45 கோடி வாங்கிய இவர் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார்.  வயதாவதால் இவரால் வசூலில் சிறந்த படத்தை இனிமேல் கொடுக்க முடியாது அல்லவா?

aamir-khan-wallpapers

 

1.சல்மான் கான்

சல்மான் கானின் தனிப்பட்ட கவர்ச்சியே  மக்களை மயக்கி திரை அரங்கிற்கு இழுக்கிறது.  படத்தின் கதையோ, திரை கதையோ திருப்தியாக இல்லாமல் போனாலும் இவரது ரசிகர்கள் பொருட்பதுதுவது இல்லை.  இவர் படங்களைப் பட்டியலிட்டு பாலிவுட் பட  உலகின் கணக்கு வழக்கை பார்த்தால் இவர் செல்வாக்குக்குக் காரணம் புரியும்.எதிலும் சல்மானே முதல் –  பாலிவுட்டில் தன் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குவதிலும் தான்!

salmankhan-1

 

 

 

 

 

 

 DiscussionsTY News