ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்வைப் பற்றி 8 வியக்கத்தக்க  அம்சங்கள்

6:13 pm 23 May, 2016

இந்தியர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தது அரசியல். காலைப் பொழுதில், ஒரு கையில் காபியுடனும் மறு கையில் செய்தித்தாளுடனும் ஆண்கள்  பேசும் அரசியல் அற்புதமாக இருக்கும்.  ஊரிலுள்ள எல்லா அரசியல்வாதிகளையும் எண்ணற்ற விமர்சனங்களால் விமர்சிப்பர். பொது வாழ்க்கையில் உள்ள  ஒருவர்   பற்றி பேச்சு என்றால் அவருக்கு எதிரான சில விமர்சனங்கள் இருக்கும். ஆனால், வழக்கமான விமர்சனங்களைக் கடந்து,  மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.  அவர்களில் ஒருவர் தான் தமிழரும், நம் முன்னாள் குடியரசுத் தலைவருமான, அவுல் பக்கிர் ஜெய்னுலாபுதின் அப்துல்கலாம்  அவர்கள்.  அவர் வாழ்வைப் பற்றிப் பல விஷயங்கள் உங்களக்குத் தெரிந்திருக்கலாம்;  இருந்தாலும்,  அவரைப் பற்றி சில வியக்கத்தக்க விஷயங்கள் இதோ…

1. இன்னல் நிறைந்த ஆரம்ப வாழ்க்கை

ஏபிஜே அப்துல்கலாம் 15/10/1931 அன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தார். தந்தை ஜெய்னுலாபுதின் ஒரு படகுக்குச் சொந்தக்காரர் ; தாய் ஆஷியம்மா இல்லத்தரசி. ஏழ்மை அவரை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பியது ; பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு,  செய்திதாள்களை வீடு வீடாக விநியோகம் (பட்டுவாடா) செய்து, வரும் பணத்தில் அவர் தன் கல்லூரிப் படிப்புக்கான செலவுத் தொகையை சம்பாதித்தார்.

rare-picture-of-dr-apj-abdul-kalam-300x204[2]

 

 

2. உயர் படிப்பு படித்தார்

ராமநாதசாமி ஸ்குவார்ட்சு மேனிலைப பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின் திருச்சியிலுள்ள புனித ஜோஸப் கல்லூரியில் சேர்ந்தார்; பின் 1955-ல் MIT  எனப்படும் ‘மெட்ராஸ் இன்ஸ்டிடுட்யுட் ஆப் டெக்னாலஜி’யில் ‘விண்வெளிப் பொறியியல்’ குறித்த தன் உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1960 ஆம் ஆண்டு அவர் பட்டப்படிப்பை முடித்தவுடன் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்’ (DRDO) விண்வெளி மேம்பாட்டுத் துறையில் ஒரு விஞ்ஞானியாகச் சேர்ந்தார்.

21-1432224765-apjabdulkalam[2]

 

3. கடுமையாக உழைத்த சராசரி மாணவர்

அப்துல்கலாம் , ”  வகுப்பின் கடைசி வரிசையில் இந்நாட்டின் சிறந்த  அறிவாளிகளைக் காணலாம் ”  என்ற போது வேறு யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லவில்லை போலும். அவர் விண்வெளிப் பொறியாளராய் இருந்தாலும் பள்ளிப்படிப்பின் போது வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெறவில்லை; மற்றவர்களை மிஞ்சிய அறிவாளியாகவோ விளங்கவில்லை.  ஆனால், அவர்  பள்ளி நண்பர்களும் ஆசிரியர்களும்  அவரை, ‘ கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவராகவும் சாதிக்கத்துடித்தவராகவும்’  நினைவு கூர்கின்றனர்.

பள்ளிக்காலத்தில் அப்துல்கலாம், கணக்கில் புலியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abdul-Kalam_3[1]

 

4.   முனைவர் பட்டம் பெறாத விஞ்ஞானி

எல்லாருக்கும் அவரை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஆகவே தெரியும். ஆனால், அவர் எந்த பல்கலைக்கழகத்திலிருந்தும் முறையான முனைவர் பட்டம் பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (I.I.Sc.) முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த போது, ‘போதுமான அறிவியல் தகுதி  இல்லை’ எனக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.  ஆனால், இதனால் மனம் தளராத  அப்துல் கலாம், கடின உழைப்பால்,  முப்பதுக்கு மேற்பட்ட பல்கலைகழகங்களிலிருந்து  கௌரவ முனைவர் (Honorary Ph.D.) பட்டம் பெற்று, நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராய்ப் போற்றப்படும் அளவுக்கு முன்னேறினார்.

apj[1]


 

5. இந்தியா, விண்வெளித்துறையில் அடியெடுத்து வைக்க வழி காட்டியவர்

விண்வெளி பொறியாளராக பட்டம் பெற்றிருந்தால்,  இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை ( எஸ் எல் வி) உருவாக்கும்பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இவர்  தலைமையில் தான் 1980 -ல் இந்தியா தன் முதல் செயற்கைக்கோளான  ‘ரோகணி’யை  விண்வெளியில் செலுத்தியது.  இவ்வாறு, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்  ஆதிக்கம் செலுத்திய விண்வெளித் துறையில் பிரவேசித்தது இந்தியா.

abdulkalam[1]

 

6. இளைஞர்களின் முன்னோடி

நிதிஷ் மிஸ்ராவைத் தவிர எம் டிவியின் (MTV) ‘ இளைஞர்களின் முன்னோடி’ என்ற பட்டத்தைப் பெற்ற ஒரே அரசியல்வாதி என்ற பெருமை அப்துல்கலாம் அவர்களுக்கு 2003 ஆம் ஆண்டு கிடைத்தது .அரசியல்வாதிகளை ஏளனமாகப் பார்க்கும் இந்தியாவிலிருந்து ஒருவர் இவ்விருதைப் பெறுவது ஒரு பெரிய சாதனை தான். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ளோருக்கும் ஒரு முன்னோடியாக விளங்கினார்; இதை நிரூபிக்கும் வண்ணம் இவரின் 79 ஆவது பிறந்தநாளை ‘ உலக மாணவர் தினமாக’ ஐநா சபை கொண்டாடியது.

apj_abdul_kalam_hd_wallpapers[1]

 

 

7. நாட்டுக்கே ஆசிரியராய் இருந்தவர்

அப்துல்கலாம் அவர்கள் ஒரு விஞ்ஞானியாகவும் பொறியாளராகவும் இந்தியாவின் விண்வெளி வெற்றிப் பயணத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்றாலும்,  அவர் ஆசிரியர்களையும் ஆசிரியர் பணியையும் தான் உயர்வாக எண்ணினார். சக இந்தியர்களிடம் , “ஆசிரியர்களின் நலனுக்கு உழைக்க வேண்டும்! ஆசிரியப் பணியை மேற்கொள்ள வேண்டும் ! ” என வெறும் வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை .உயர்ந்த பதவியில் இருந்த போதும் , சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலே பேராசிரியராய்ப் பணியாற்றினார். ஆசிரியராக இருந்த போது தொழில்நுட்பம் மற்றும் சமுதாயமாற்றத்துக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த பல அமைப்புகளிலும் சேர்ந்து தொண்டாற்றினார். ‘இளைஞர்களின் முயற்சியால் ஏற்படும் முன்னேற்றத்தை ‘ அவர் நம்பியதாலே தான் அவர் தன் பதவிக் காலத்தில் நாடெங்கும் உள்ள இளைஞர்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை சந்தித்தார். விளம்பரத்துக்காக அல்ல அது; அப்பழக்கத்தை அவர் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்தார்.

Dr_Kalam_Amrita_Learning[1]

 

 

8. கடமையாற்றிய கர்ம வீரர்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி , நம் நாட்டின் குடியரசுத் தலைவர் அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஆனால், பல குடியரசுத் தலைவர்களும் இச்சட்டத்தை மதிக்கவில்லை. எனினும், அப்துல்கலாம் அவர்கள் , குடியரசுத் தலைவராகவும் ஒரு இந்தியக் குடிமகனாகவும் தன் கடமையை ஆற்றி எல்லாருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

kalam_042613053626[1]

Discussions



TY News