இந்தியாவில் பாதி , மியான்மாரில்  பாதி உள்ள நாகாலாந்து கிராமத்தலைவரின்  குடிசை

3:55 pm 27 Jun, 2016


நாகாலாந்தின் ‘ மோன்’ மாவட்டத்திலுள்ள ‘ லாங்வா’ கிராமத்தில் இருக்கும் , ஆதிவாசிகளின் தலைவர் ( ‘அங்’  என  அழைக்கப்படுகிறார்) வசிக்கும் குடிசை வித்தியாசமானது. அவர் வீட்டு சமையலறை மியான்மார் நாட்டில் (முன்பு ‘பர்மா’ என்றழைக்கப்பட்ட நாடு) இருக்க, படுக்கை அறையோ இந்தியாவில் இருக்கிறது.

லாங்வா கிராமம், எல்லையின் இரு பக்கத்திலும் நீடிக்கிறது; இதன் நிலப்பகுதியில் சுமார் 30 விழுக்காடு மியான்மாரில் உள்ளது. அருகிலுள்ள மலை உச்சியில் இருந்து கண்காணித்த படி, அசாம் துப்பாக்கிப் படையைச் சேர்ந்த வீரர்கள் எல்லையில் அமைதியை காத்து வருகின்றனர்.

Chiefshouse

 

‘கொன்யக் நாகா’ க்களின்  ராஜாவாகவும் விளங்குகிறார் “அங்”. அவருக்கும் அவரது 60 மனைவிகளுக்கும் ,  ‘விசா’ இன்றி மியான்மாருக்குள்  சுதந்திரமாக உலவ அனுமதியுண்டு.

1,640 கிலோமீட்டர் நீளமான சர்வதேச எல்லையின் வழியெங்கும் நடைமுறையில் உள்ள ‘ தடையற்ற நடமாட்டம்’  குறித்த சட்டப்படி, இந்தியர்கள்  மியான்மார்ருக்குள் 20 கிலோமீட்டர் வரையும், மியான்மார் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் 40 கிலோமீட்டர் வரையும் செல்ல  உரிமை உண்டு. இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது, மியான்மார் நாட்டு பணத்துக்கு மதிப்பு குறைவாக இருப்பதால், பெரும்பாலான கிராமத்தவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறையில் தான் பெற்றுக் கொள்கிறார்கள்.

Konyak12_original

 


எல்லையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மக்கள் ஒரே பள்ளிகளையும், ஒரே மத வழிபாட்டுகளையும், ஒரே சுகாதார வசதிகளையும் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

தன் மக்களையும்  தனக்குரிய வளங்களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், ‘அங்’.  பெரிய பிரச்சனைகள் வரும் போது, மியான்மாரின் இராணுவ ஆட்சிக்குழுவும், அசாம் துப்பாக்கிப் படையினரும் எல்லைகளில் சந்திப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்து , பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவரிப்பர். தற்போது, போதை மருந்து கடத்தலும் ஆயுதக் கடத்தலும் இவர்களுக்குப் பெரும் சவால்களாக உள்ளன.

Konyak8_original

 

 

Popular on the Web

Discussions  • Co-Partner
    Viral Stories

TY News