சோழ வம்சத்தைப் பற்றி அறிய வேண்டிய 7 தகவல்கள் 

1:52 pm 18 Jul, 2016

தென்னிந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆண்ட வம்சம் தான், சோழ வம்சம். நாகரிகம் மிக்க  சோழர்கள்  ஆண்ட ராஜ்ஜியச்தைச் சோழ மண்டலம் என்பர். இந்த வம்சம் கரிகாலனால் தொடங்கப்பட்டது என நம்பப்படுகிறது. தங்களின் வியப்பூட்டும் கோவில் கட்டும் கலையாலும், தமிழ்ப்பற்றாலும் சோழர்கள் தமிழ் இலக்கியத்திற்கும் , தமிழர்களின் கட்டடக்கலைக்கும் பெரும் தொண்டாற்றினர். அவர்களைப் பற்றிய செய்திகளின் தொகுப்பு கீழ்வருமாறு.

1) சோழ வம்சம் உருவான கதை :

சோழ வம்சம் உருவானது பற்றித் தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்தால் , ‘ சோழன்’ என்பது  பண்டைய காலத்தில் இருந்த ஒரு குலத்தின் பெயர் என்று தெரிகிறது. கிள்ளி, வளவன், செம்பியன் ஆகிய பெயர்கள் சோழர்களைக் குறிக்கும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மவுரிய மன்னரான அசோக சக்கரவர்த்தி விட்டுச் சென்ற குறிப்புகளே சோழர்கள் பற்றிய குறிப்புகளுள் பழமையானவை.

Origin-of-Chola-dynasty

 

2) முதல் சோழர்கள் :

சங்க இலக்கியங்கள் , முதன்முதலில் இருந்த சோழ மன்னர்களைப் பற்றியும் சோழ இளவரசர்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. கரிகாலச் சோழன், கந்தமச் சோழன், கோச்செங்கணான் முதலியவர்கள் சோழ வம்சத்தைச் சேர்ந்த முதல் மன்னர்களாம். அகத்தியரின் சமகாலத்தவர் என நம்பப்படும் கந்தமச் சோழன் , தன் பக்தியால் காவிரியைத் தோற்றுவித்தானாம். ‘ மகாவம்சம்’ என்ற இலக்கியத்தின் படி , சோழ இளவரசர் எல்லாளன்  இலங்கை  தீவு மீது  கி.மு. 235 ஆம் ஆண்டு படையெடுத்தாராம்.

Early-Cholas (1)

 

3) இடைச் சோழர்கள்:

இடைச்சங்க காலத்தில் தன் பலத்தின் உச்சத்தில் இருந்த சோழ வம்சம், தனது ராஜ்ஜியத்தையும் செல்வாக்கையும் பெருக்கியது. கி.பி. 885 -ல் , முதலாம் ஆதித்ய சோழன் பாண்டியர்களை வீழ்த்தி  மதுரையையும் கன்னட தேசத்தின் பெரும்பகுதியையும் கைப்பற்றினான். தன் தலைமைப்பண்பாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும் முதலாம் பராந்தக சோழன் இலங்கையை கைப்பற்றினான். ‘இரண்டாம் பராந்தக சோழன் ‘ என அழைக்கப்படும் சுந்தர சோழன், ராஷ்டிரியர்களை  வீழ்த்தி சோழ ராஜ்ஜியத்தை கன்னட தேசத்தின் ‘ பத்கலம் ‘ வரை விரிவுபடுத்தினான். முதலாம் இராசராச சோழனும் இரண்டாம் இராசேந்திர சோழனும் வழக்கமான தமிழ் மன்னர்களின் ராஜ்ஜியத்தை விட சோழ ராஜ்ஜியத்தைப் பெரிதாக்கினர்.

Medieval-Cholas

 

4) கடைச் சோழர்கள் :

கடைச்சோழர்களுள் முதலாம் குலோத்துங்க சோழன்,  விக்கிரம சோழன், இரண்டாம் இராசராச சோழன் , இரண்டாம் இராசாதிராச சோழன், ‘கலிங்கம் , ஈழம் மற்றும் கடாரம் ஆகியவற்றை வென்ற இரண்டாம் குலோத்துங்க சோழன் ‘ குறிப்பிடத்தக்கவர்கள். கிபி 1215  முதல் கி.பி. 1218 வரை ஆண்ட சோழ அரசர்கள் முந்தைய மன்னர்களைப் போல் வலுவாக ஆட்சி புரியாததால் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்தனர். கிபி 1279 ஆம் ஆண்டு பாண்டியர்கள், சோழர்களின் நண்பர்களான மலநாட்டின் ஹோய்சாளர்களை வீழ்த்தினர் ; இதுவே, பின் சோழர்களின் வீழ்ச்சிக்கும் வித்திட்டது.

Later-Cholas

 

5) சோழ நாட்டு ஆட்சி எல்லைகள் :
தங்களின் தலைமைப் பண்பாலும் ஆற்றலாலும் தொலைநோக்குப் பார்வையாலும் சோழர்கள், தங்கள் ராஜ்ஜியத்தை இன்றைய திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கும் கடலூரின் பிச்சாவரம் மற்றும் விருத்தாசலம் தாலுகாகளுக்கும் விரிவுபடுத்தினர்.

Chola-Territory

 

6) சோழ அரசாங்கம் :

சோழர்களின் ஆட்சியில் தான் முதன்முறையாக , தென்னிந்தியா முழுவதும் ஒரு அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. சோழர்கள் அரசாட்சியைப் பின்பற்றினர். அதன் படி, ராஜ்ஜியம் மண்டலங்களாகவும் ( மாகாணம்) , மண்டலங்கள் ‘ கோட்டங்களாகவும் ‘ (மண்டலத்சின் உட்பிரிவு) , கோட்டங்கள் ‘நாடு’களாகவும் ( மாவட்டங்கள் ), நாடுகள் தாசில்களாகவும் (கிராமத்தின் குழுக்கள்) பிரிக்கப்பட்டன. மண்டலங்கள் ஆளுனர்களால் மேற்பார்வையிடப்பட்டது. அரசரே  தலைமைப் பொறுப்பைப் பெற்றிருந்தார். சோழ ஆட்சியின் போது, கிராமங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chola Admin

7) கலாச்சாரத்தில் சோழர்களின் பங்கு :

சோழர்கள் ஆண்ட காலத்தில், கலையும் மதமும் தமிழ் இலக்கியமும்  செழித்தன. திராவிட  வடிவமைப்பில் காவிரி ஆற்றின் கரையோரமெங்கும் கட்டப்பட்ட சிவாலயங்கள்  மூலம் கோவில் கட்டும் கலைக்கு  மேலும் மெருகேற்றினர்.  கி.பி.1009 ஆம் ஆண்டு , இராசராச சோழனின் ஆட்சியில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் அதன் காலத்து இந்தியக் கோவில்களுள் உயரமானதும் பெரியதும் ஆகும்.  தாராசுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவில், தஞ்சை பிரகஹதீஸ்வரர் கோவில் ஆகியன யுனெஸ்கோ (UNESCO)  நிறுவனத்தால்  ‘ உலக பாரம்பரிய தலங்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளன.  சோழர்களின் ஆட்சியில் சைவ வைணவ இலக்கியங்களோடு புத்த மற்றும் சமண இலக்கியங்களும் செழித்தன.

Dancing Nataraja

 

 

 

 

 

 DiscussionsTY News