சென்னையில் நீங்கள் தவற விடக் கூடாத 18 அனுபவங்கள்

4:33 pm 25 Oct, 2016

இந்திய நிலபரப்புக்குத் தெற்கு வாசலாய் விளங்கும் சென்னை மாநகரின் செழிப்பான வரலாறும் பன்முகப்பட்ட கலாச்சாரமும் உலகின் எல்லா மூளைகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றது.

மற்ற  தென்னிந்திய நகரங்களைப் போல் அல்லாமல் சென்னைக்குப் பல முகங்கள் உண்டு; பொழுதைப் போக்கப் பல சுவாரசியமான விஷயங்களைச் சென்னையில் செய்யலாம்;  அவற்றுள் சிறந்த 18 விஷயங்கள் கீழ்வருமாறு:

1) ‘மால்குடி நாட்களை’ நினைவு கூறலாம் :

ஆர். கே. நாராயனின் கலை மயமான சித்திரங்கள் உங்களை ஊக்குவித்தால், ,நீங்கள் கண்டிப்பாகச் ‘சவேரா’ வில் உள்ள ‘மால்குடி உணவு விடுதி’க்குச் சென்று அங்குள்ள ருசியான கடற்கரை உணவுகளைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

Fun Things To Do In Chennai

2) இயற்கை அன்னையின் மடியில் காபி :

சற்றே தனிமையாகவும் நிம்மதியாகவும் இருக்க விருப்பமா? அப்படியானால் ‘ஈகோ காபியில்  “ சிறிது நேரம் எழில் மிகுந்த இயற்கையின் மத்தியில் ஒரு கப் காபி சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு தெரியும் அதன் பலன்.

Fun Things To Do In Chennai

3) முதலைப் பண்ணையைக் காண வேண்டும் :

ஊர்வனங்கள் உங்கள் மனதைக் கொள்ளைக் கொள்ளும் என்றால், முதலைப் பண்ணைத் தான் உங்களுக்கு ஏற்ற இடம். மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள இப்பண்ணையில் நூற்றுக்கணக்கான ஊர்வனங்கள் இருக்கின்றன. மேலும், விருப்பமுள்ளவர்கள் இங்கேயே தங்கி வகுப்புகள் எடுத்துத் தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Fun Things To Do In Chennai

4) புத்தகப்புழுவாக மாற அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வாருங்கள்:

ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் எனப் பெயர் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்களைப் படித்தவாறு நேரம் கழிப்பதைப் போன்றதொரு சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

Fun Things To Do In Chennai

5) சோழமண்டல கலைக் கிராமத்தை பார்த்து வாருங்கள் :

திருவான்மியூர் செல்லும் வழியில் இந்த கிராமம் இருக்கிறது; தென்னிந்திய ஓவியக் கலைகளும் கலாச்சார வேலைப்பாடுகளும் நிரம்பி வழியும் இந்த இடத்தை நீங்கள் மறக்காமல் ரசித்திட வேண்டும்.

Fun Things To Do In Chennai

6) தக்ஷிணச்சித்திரா – தென்னிந்தியாவின் கலைக்கூடம் :

தென்னிந்தியாவின் ஐந்து மாநில மக்களின் வாழ்க்கை முறைகளில் கலாச்சாரத்தின் தாக்கத்தைத் தக்ஷிணச்சித்திராவில் காணலாம். கைவினைப் பொருட்கள் பல இங்கு மலிவான விலைகளில் கிடைக்கும்.

Fun Things To Do In Chennai

7) கலாஷேத்ராவில் கிராமப்புற இசையும் நடனமும் :

வெவ்வேறு துறைகளிலிருந்தும் கலைஞர்கள் கூடும் கலாஷேத்திராவில் நாட்டுப்புற ஆடலோடும் பாடலோடும் மக்களை எப்பொழுதும் ஆரவாரத்தோடு காணலாம்.

Fun Things To Do In Chennai

8) திருவான்மியூர் கடற்கரை :

இந்தியாவில், குறிப்பாகச் சென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாதது, திருவான்மியூர் கடற்கரை. இங்கிருந்து சூரியன் மறையும் அழகான காட்சியைக் காணலாம்.

Fun Things To Do In Chennai

9)  இலங்கையின் ‘மகா போதி ‘ சமூகம் :

இலங்கையிலுள்ள மகா போதி சமூகக் கூடத்தில், தேரவடா புத்தர்களின் போதனைகளைக் காணலாம். இவை இவ்விடத்துக்கு வருவோர்களுக்கு இயல்பாகவே மன நிம்மதி அளிக்கும்; மேலும் இங்குள்ள உயரமான புத்தர் சிலை எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திடும்.


Fun Things To Do In Chennai

10) தம்ம சேது :

அன்றாட வாழ்வின் மனவழுத்தத்திலிருந்து விடுபட, திருமுடிவாக்கத்திலுள்ள தம்மசேதுவைப் பார்த்து விட்டு வர வேண்டும்.

Fun Things To Do In Chennai

11) பராக்குடா வளைகுடா:

சின்ன சின்ன கிராமங்களில் குட்டைகளிலும் குளங்களிலும் மீன் பிடிப்பது வழக்கம்; ஆனால், அதைப் போல் சென்னையில் எங்கு மீன் பிடிப்பது என்று கேட்டால், அதற்கு ‘பராக்குடா வளைகுடா ‘ தான் தீர்வு. இங்கு நீங்கள் எதிர்ப்பார்க்காத வகையில் நிரைய விதமான மீன்களைப் பிடிக்கலாம்.

Fun Things To Do In Chennai

12) ‘ராயல் என்பீல்டு ‘ தொழிற்சாலை :

பைக் பிரியர்கள் எல்லாருக்கும் ‘ராயல் என்பீல்டு ‘ என்றாலே குதூகுலம் தான். அவர்களெல்லாம் வட சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்குப் போய் விட்டு வர வேண்டும்; ஒரு சோதனை ஓட்டம் ஒட்டி விட்டு மயங்காதவர்கள் இருக்க  மாட்டார்கள். (குறிப்பு : இந்தத் தொழிற்சாலையை இரண்டாவது மற்றும்  நான்காவது சனிக் கிழமைகளில் வந்து பார்த்தால் நன்றாக இருக்கும்).

Fun Things To Do In Chennai

13) அமிதிஸ்ட் தேநீர் விடுதி :

பெரும்பாலானோர்,  அமிதிஸ்ட்டை , வரலாற்று சிறப்பு மிக்க இடமாகக் கருதுகின்றனர்; ஆனால் அங்குள்ள தேநீர் விடுதியும் அருமையாகத் தான் இருக்கும். மேலும் , மதிய  வேளையில், இப்படிப்பட்ட ஒரு அழகான இடத்தில் அமர்ந்து தேநீர் பருகுவதை விட வேறு என்ன சுகம் இருக்க முடியும்?

Fun Things To Do In Chennai

14) தென்னிந்திய உணவுகளை உண்டு மகிழுங்கள்!

சென்னையில், எந்தத் தெருவை ஆராய்ந்தாலும், ஏதாவது ஒரு உணவு விடுதி இருக்கும். இங்கு உலகின் பல்வேறு நாடுகளின் உணவு முறைகளைச் சாப்பிட முடியும். குறிப்பாக, சரவண பவன், என்டே கேரளம், குக்கரோக்கம் போன்ற இடங்களில் உணவுகளுக்கு ஒரு தனித்தன்மை இருக்கும்.

Fun Things To Do In Chennai

15)  “10, டௌனிங் சாலையில் “ ஆங்கிலேயராக மாறுங்கள் :

சென்னையில் இருந்த படியே, வெளிநாட்டில் இருப்பது போன்றதான ஒரு உணரவு பெற “எண் : 10, டௌனிங் சாலைக்கு “ வாருங்கள். இங்கு மேற்கத்திய நாடுகளைப் போலவே மதுபானங்களும் உணவுகளும் விநியோகிக்கப்படுகிறது. இங்கு, புதன்கள் தோறும் நடக்கும் ‘லேடீஸ் நைட்டும் ‘ , வெள்ளிக் கிழமைகள் அன்று நடக்கும் ‘ரெட்ரோ நைட்களும் ‘ , சனிக் கிழமைகள் அன்று நடைபெறும் ‘கிளப் நைட்களும் ‘ பிரபலம்.

Fun Things To Do In Chennai

16) ‘ரெய்ன் ட்ரீ ‘ இல் காரசாரமான உணவுகளைச் சாப்பிடலாம் :

பொதுவாகச் சென்னையில் கிடைக்கும் உணவுகளே காரமாகத் தான் இருக்கும்; அதிலும் செட்டிநாடு உணவுகள் இன்னும் கொஞ்சம் காரமாக இருக்கும். அந்தச் செட்டிநாட்டு உணவுகளை உண்ண ஏற்ற இடம், ‘ரெய்ன் ட்ரீ ‘ தான்; சாப்பிட்டால் தான் அதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

Fun Things To Do In Chennai

17) ‘பெஞ்சாராங்கில் ‘ தாய்லாந்து நாட்டு உணவுகளைச் சாப்பிட்டுக் களியுங்கள் :

‘பெஞ்சாராங்கில் ‘ உணவு மட்டும் சிறப்பு இல்லை; அந்த விடுதியில் எல்லாப் பக்கமும் செய்யப்பட்டுள்ள மர வேலைப்பாடுகள், உணவு உண்ணும் போது ஒரு தனி சுகத்தை அளிக்கும்.

Fun Things To Do In Chennai

18) டிஜி உலகில் ‘ ஒரு நாள் :

எல்லா வயதினர்க்கும் ஏற்ற இடம் இது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தகுந்தாற் போல் பல சாகசங்கள் இங்கு இருக்கின்றது. இந்தப்  பொழுதுபோக்குப் பூங்காவை வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.

Fun Things To Do In Chennai

 

DiscussionsTY News